TNPSC CURRENT AFFAIRS PDF –25th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 25 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.President Ram Nath Kovind will attend the centenary celebrations of the first meeting of the Madras Legislative Council in 1921 and unveil a portrait of former chief minister Kalaignar M Karunanidhi in Tamil Nadu assembly hall on August 2. The ceremony will be presided over by Governor Banwarilal Purohit in the presence of Chief Minister MK Stalin.

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். படத்திறப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்க உள்ளார்.

2.The remnants of a large conch industry has been discovered from Korkai in Tuticorin district, where the state archaeology department is carrying out excavations after about 52 years. This is the site in which the Tamil Nadu state archaeology department conducted its first excavation, after it was established in 1969. However, it was put on hold soon. Korkai is said to have been an ancient harbour in Tamil Nadu where most of the commercial activities with other countries was done in ancient Tamil Nadu.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கையிலிருந்து பெரிய சங்குத் தொழிலின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொற்கை அகழ்வாராய்ச்சி தளமாக 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை தனது முதல் அகழ்வாராய்ச்சியை நடத்தியது. அதன்பின்னர், உடனே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 52 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில தொல்பொருள் துறையால் தற்போது அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொற்கை தமிழ்நாட்டின் பழங்கால துறைமுகமாக இருந்தது, பண்டைய தமிழ்நாட்டில் அங்கிருந்து பிற நாடுகளுடன் வணிகம் செய்யப்பட்டது.

3.The President of Southern India Chamber of Commerce and Industry (SICCI), Ar Rm Arun, on July 24 met Chief Minister M.K. Stalin to submit a report containing the chamber’s recommendations for inclusive growth.

தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் (SICCI) தலைவர் ஆர்.எம்.அருண் ஜூலை 24 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

India

4.Indian Railways’ Oxygen Express is set to embark on its journey to Bangladesh. This is the first time ever that the Oxygen Express is put into operation to a neighbouring country. Today, an indent was placed at Tata in Chakradharpur Division under South Eastern Railway to transport 200 MT of Liquid Medical Oxygen to Benapole, Bangladesh.

இந்திய ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அண்டை நாடுகளுக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும். 200 மெட்ரிக் டன் மருத்துவப் பிராணவாயுவை வங்கதேசத்தின் பேனாபோலிற்கு எடுத்துச் செல்வதற்காக தென்கிழக்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சக்ரதர்பூர் பிரிவில் இன்று ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

5.TRIFED is collaborating with NITI Aayog to implement the Van DhanYojana in the districts that have been identified as aspirational districts by NITI Aayog.

நிதி ஆயோக்கால் வளரத் துடிக்கும் மாவட்டங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குழுக்களில் வன் தன் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக நிதி ஆயோக் மற்றும் டிரைஃபெட் நிறுவனம் கைகோர்த்துள்ளன.

6.Dr. Virendra Kumar, Union Minister for Social Justice and Empowerment, virtually inaugurated the “5th North-East India Traditional Fashion Week (NEIFW) 2021”.

“ஐந்தாவது வடகிழக்கு இந்திய பாரம்பரிய நாகரிக வாரத்தை (NEIFW) 2021-ஐ” ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

7.The Central Board of Direct Taxes (CBDT) observed the 161st Income Tax Day (also known as Aaykar Diwas) on 24th July 2021.

மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) 161வது வருமான வரி தினத்தை (ஆய்கர் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது) ஜூலை 24, 2021 அன்று அனுசரித்தது.

Sports

8.Weightlifter Mirabai Chanu won the silver medal in the women’s 49 Kg weightlifting event today, winning India’s first medal at the Tokyo Olympics. She had total lifts of 202kg, including 87kg in Snatch and 115kg in Clean & Jerk. She is 26-year-old from Manipur.

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். 26 வயதான மீராபாய் சானு மணிப்பூரைச் சேர்ந்தவராகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is unveiling the portrait of former chief minister Kalaignar M Karunanidhi in Tamil Nadu assembly hall?

A.Banwarilal Purohit

B.M.K. Stalin

C.Appavu

D.Ramnath Kovind

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை தமிழ்நாடு சட்டசபையில் யார் திறந்து வைக்கவுள்ளார்?

A.பன்வாரிலால் புரோஹித்

B.மு.க. ஸ்டாலின்

C.அப்பாவு

D.ராம்நாத் கோவிந்த்

2.Korkai excavation site was established in

A.1959

B.1969

C.1979

D.1989

கொற்கை அகழ்வாராய்ச்சி தளம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

A.1959

B.1969

C.1979

D.1989

3.Who is the President of the Southern India Chamber of Commerce and Industry?

A.Virendra Kumar

B.Ram

C.Arun

D.Mirabai Chanu

தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் யார்?

A.வீரேந்திர குமார்

B.ராம்

C.அருண்

D.மீராபாய் சானு

4.Where were the remnants of a large conch industry recently discovered in Tamil Nadu?

A.Kodumanal

B.Korkai

C.Keezhadi

D.Agaram

தமிழ்நாட்டில் சங்குத் தொழிலின் அடையாளங்கள் அண்மையில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டன?

A.கொடுமணல்

B.கொற்கை

C.கீழடி

D.அகரம்

5.Which organisation is collaborating with NITI Aayog to implement the Van DhanYojana in aspirational districts?

A.JNCASR

B.BNCBS

C.APEDA

D.TRIFED

வன் தன் யோஜனாவை வளரத் துடிக்கும் மாவட்டங்களில் செயல்படுத்த எந்த அமைப்பு நிதி ஆயோக்குடன் கைகோர்த்துள்ளது?

A.JNCASR

B.BNCBS

C.APEDA

D.TRIFED

6.Who inaugurated 5th North-East India Traditional Fashion Week 2021?

A.Virendra Kumar

B.Ram

C.Arun

D.Mirabai Chanu

5 வது வடகிழக்கு இந்தியா பாரம்பரிய நாகரிக வாரம் 2021 ஐ திறந்து வைத்தவர் யார்?

A.வீரேந்திர குமார்

B.ராம்

C.அருண்

D.மீராபாய் சானு

7.The Central Board of Direct Taxes (CBDT) observed the 161st Income Tax Day on

A.July 22, 2021

B.July 23, 2022

C.July 24, 2021

D.July 25, 2021

மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) 161 வது வருமான வரி தினத்தை எந்த தேதியில் அனுசரித்தது?

A.ஜூலை 22, 2021

B.ஜூலை 23, 2022

C.ஜூலை 24, 2021

D.ஜூலை 25, 2021

8.Who won India’s first medal at the Tokyo Olympics?

A.Virendra Kumar

B.Ram

C.Arun

D.Mirabai Chanu

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்றவர் யார்?

A.வீரேந்திர குமார்

B.ராம்

C.அருண்

D.மீராபாய் சானு

DOWNLOAD  Current affairs -25 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: