TNPSC CURRENT AFFAIRS PDF –26th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 26 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Minister of Medical and Family Welfare Ma Subramanian has said that the Chief Minister MK Stalin would soon launch a new scheme ‘Makkalai Thedi Maruthuvam’ in the health sector. The minister said the scheme envisaged providing diagnosis, treatment and medication at the patients’ door steps.

உலகத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பரிசோதனை செய்து, அவர்களுக்கு எத்தகையை நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, நோய் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பதும், இலவசமாக மருந்துகளை அளிப்பதுமான திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைவில் தொடங்கிவைக்க இருக்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

2.Nine perforated terracotta pipes, stacked one above the other, have been found during archaeological excavation at Korkai, an ancient site, in Thoothukudi district.The diameter and the height of the pipes were both 27 cm. The pipes have a thickness of 1 cm. They were found 30-35 cm below the surface and would have probably been used for distillation.

A.The missionary scholar Robert Caldwell, the author of A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, first conducted archaeological excavation in Korkai in 1876 and unearthed burial urns.

B.The next excavation was done in 1968.

C.The carbon dating of the objects found that the site belonged to the 7th century BC.

D.Korkai was a port of the Pandya Kingdom.

E.There is a reference to Korkai in Sangam literature

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அகழ்வாராய்ச்சி தளமான கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருள்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழாய்களின் விட்டம் மற்றும் உயரம் இரண்டும் 27 செ.மீ. ஆகும். குழாய்களின் தடிமன் 1 செ.மீ. அவை மேற்பரப்பிலிருந்து 30-35 செ.மீ அடியில் காணப்பட்டன.

தொடர்பான தகவல்கள்:

A.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியரும் தமிழ் அறிஞருமான ராபர்ட் கால்டுவெல் முதன்முதலில் 1876 இல் கொற்கையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடத்தி புதைகுழிகளைக் கண்டுபிடித்தார்.

B.அடுத்து 1968 ஆண்டில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.

C.கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு மூலம் இந்த தளம் கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

D.பாண்டிய ஆட்சி காலத்தில் கொற்கை துறைமுகமாக செயல்பட்டது.

E.சங்க இலக்கியத்தில் கொற்கை தொடர்பான குறிப்புகள் உள்ளது.

3.Rear Admiral Philipose George Pynumootil, Flag Officer Naval Aviation (FONA) and Flag Officer Commanding Goa Naval Area, dedicated a model of the pilotless target aircraft Lakshya to the Indigenisation Cell at INS Agrani, Coimbatore.

கோவா கடற்படை பகுதிக்கு கடற்படைத் தலைவரான பிலிபோஸ் ஜார்ஜ் பினுமூட்டில், ஓட்டுநர் இல்லாத லக்ஷியா விமானத்தின் மாதிரியை கோவையில் அமைந்துள்ள ஐ.என்.எஸ் அக்ரானி கடற்படை தளத்தின் சுதேசமயமாக்கல் கலத்திற்கு அர்ப்பணித்தனர்.

4.The ecopark created on the left bank of the Korattur lake, one of the major water bodies in the western parts of Chennai, is set to be inaugurated on July 26, 2021.

சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான கொரட்டூர் ஏரியின் கரையில் உருவாக்கப்பட்டுள்ள ஈகோபார்க் ஜூலை 26, 2021 அன்று திறந்து வைக்கப்பட உள்ளது.

5.Chairman of National Commission for Safai Karamcharis M. Venkatesan has written to the Chairman of National Commission for Scheduled Castes Vijay Samplan alleging that Madurai Corporation Commissioner K. P. Karthikeyan had behaved in a ‘discriminative and insulting manner’ during his recent visit to Madurai.

தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையர் கே. பி. கார்த்திகேயன் மீது குற்றம் சாட்டி தேசிய பட்டியல் சாதியினர் ஆணையத்தின் தலைவர் விஜய் சம்ப்லானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

India

6.Rudreswara Temple, (also known as the Ramappa Temple) at Palampet, Mulugu district, near Warangal in the state of Telangana has been inscribed on UNESCO’s World Heritage list. The decision was taken at the 44th session of the World Heritage Committee of UNESCO on July 25, 2021. The Rudreswara temple was constructed in 1213 AD during the reign of the Kakatiya Empire by Recharla Rudra, a general of Kakatiya king Ganapati Deva.The presiding deity here is Ramalingeswara Swamy.

தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும்  ருத்ரேஷ்வரா கோயில்  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஜூலை 21, 2021 அன்று நடந்த, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவின் 44வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது. காகத்திய பேரரசின் ஆட்சிக் காலத்தில் கி.பி 1213 இல் ருத்ரேஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. இங்கு அமைந்துள்ள கடவுள் ராமலிங்கேஸ்வர சுவாமி ஆகும்.

7.The Union Home Minister Shri Amit Shah launched the Green Sohra Afforestation Campaign at Sohra in Cherrapunji in the state of Meghalaya. Amit Shah also inaugurated the Greater Sohra Water Supply Scheme. Amit Shah gave the slogan “Evergreen Northeast”, underlining the importance of afforestation and tree plantation.

ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் மேகாலய மாநிலம் சிரபுஞ்சியில் உள்ள சோஹ்ரா என்ற இடத்தில் பசுமை சோஹ்ரா காடு வளர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். பெருநகர  சோஹ்ரா குடிநீர் விநியோக திட்டத்தையும், திரு அமித்ஷா தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் காடு வளர்ப்பு, மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் ‘‘என்றும் பசுமைமாறா வடகிழக்கு’’ என்ற கோஷத்தை அறிமுகப்படுத்தினார்.

8.The I-STEM project has been accorded an extension for five years, until 2026 and enters its second phase with added features. The Indian Science Technology and Engineering Facilities Map (I-STEM), the national web portal for sharing R&D facilities was formally launched in January 2020 by the Honorable Prime Minister Narendra Modi. I-STEM (www.istem.gov.in) is an initiative of Office of the Principal Scientific Adviser to the Government of India (PSA, GOI) under the aegis of Prime Minister Science, Technology and Innovation Advisory Council (PM-STIAC) mission.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஐ-ஸ்டெம் திட்டத்துக்கு 2026ம் ஆண்டு வரை, 5 ஆண்டு கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இதனால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்வதற்காக தொடங்கப்பட்ட ஐ-ஸ்டெம் இணையதள திட்டம் கூடுதல் அம்சங்களுடன் 2வது கட்டத்துக்கு நுழைகிறது. இந்த இணையதளம் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. ஐ-ஸ்டெம்  (www.istem.gov.in)  என்ற இந்த இணையதளம் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஆலோசனை கவுன்சில் (PM-STIAC) திட்டத்தின் கீழ் இயங்கும் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் முயற்சியால் தொடங்கப்பட்டதாகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Korkai was a port of

A.Chola Kingdom

B.Kakatiya Kingdom

C.Chera Kingdom

D.Pandya Kingdom

பழங்காலத்தில் கொற்கை எந்த பேரரசின் துறைமுகமாக இருந்தது?

A.சோழ அரசு

B.காகத்தியா அரசு

C.சேர அரசு

D.பாண்டிய அரசு

2.The national portal I-STEM is an initiative of

A.National Security Advisor

B.Principal Scientific Adviser

C.Chief Economic Advisor

D.Director General of Health Services

I-STEM என்கிற தேசிய போர்ட்டல் யாருடைய முன்முயற்சியாகும்?

A.தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

B.முதன்மை அறிவியல் ஆலோசகர்

C.தலைமை பொருளாதார ஆலோசகர்

D.சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர்

3.Who first conducted archaeological excavation in Korkai?

A.Amy Wilson

B.George Pope

C.Peter Percival

D.Robert Caldwell

கொற்கையில் முதன்முதலில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை நடத்தியவர் யார்?

A.ஏமி வில்சன்

B.ஜார்ஜ் போப்

C.பீட்டர் பெர்சிவல்

D.ராபர்ட் கால்டுவெல்

4.INS Agrani is located in

A.Coimbatore

B.Madurai

C.Trichy

D.Chennai

ஐ.என்.எஸ் அக்ரானி எங்கு அமைந்துள்ளது?

A.கோவை

B.மதுரை

C.திருச்சி

D.சென்னை

5.Who is the Chairman of the National Commission for Safai Karamcharis?

A.Kalaiyarasan

B.Annamalai

C.Venkatesh

D.Murugan

தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் யார்?

A.கலையரசன்

B.அண்ணாமலை

C.வெங்கடேஷ்

D.முருகன்

6.Ramappa Temple is located in

A.Tamil Nadu

B.Telangana

C.Assam

D.Meghalaya

ராமப்பா கோயில் எங்கு அமைந்துள்ளது?

A.தமிழ்நாடு

B.தெலுங்கானா

C.அசாம்

D.மேகாலயா

7.The Greater Sohra Water Supply Scheme was launched in

A.Tamil Nadu

B.Telangana

C.Assam

D.Meghalaya

பெருநகர  சோஹ்ரா குடிநீர் விநியோக திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

A.தமிழ்நாடு

B.தெலுங்கானா

C.அசாம்

D.மேகாலயா

8.The Green Sohra Afforestation Campaign was launched by

A.Narendra Modi

B.Kisan Reddy

C.Amit Shah

D.Ramesh Pokhriyal

பசுமை சோஹ்ரா காடு வளர்ப்பு பிரச்சாரம் யாரால் தொடங்கப்பட்டது?

A.நரேந்திர மோடி

B.கிசான் ரெட்டி

C.அமித் ஷா

D.ரமேஷ் போக்ரியால்

9.The office of the Principal Scientific Adviser to the Government of India is under the aegis of

A.Ministry of Finance

B.Ministry of Home Affairs

C.NITI Aayog

D.PM-STIAC

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் கீழ்கண்ட எதன் கீழ் உள்ளது?

A.நிதி அமைச்சகம்

B.உள்துறை அமைச்சகம்

C.நிதி ஆயோக்

D.PM-STIAC

10.The slogan “Evergreen Northeast” was recently given by

A.Narendra Modi

B.Kisan Reddy

C.Amit Shah

D.Ramesh Pokhriyal

“பசுமையான வடகிழக்கு” ​​என்ற முழக்கம் சமீபத்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A.நரேந்திர மோடி

B.கிசான் ரெட்டி

C.அமித் ஷா

D.ரமேஷ் போக்ரியால்

DOWNLOAD  Current affairs -26 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: