TNPSC CURRENT AFFAIRS PDF –27th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 27 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. The Central Government has extended the deadline for making payments under the Direct Tax Vivaad Se Vishwas dispute resolution scheme by two months till June 30, in light of the second wave of Covid-19 raging across India.

இந்தியா முழுவதும் கோவிட் -19 இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், விவாத் சே விஸ்வாஸ் நேரடி வரி வழக்குகள் தீர்க்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இரண்டு மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) மத்திய அரசு நீட்டித்துள்ளது.

2. The 19th edition of the Indian and French Navy bilateral exercise ‘VARUNA-2021’ conducted in the Arabian Sea from 25 to 27 April 2021.

‘வருணா -2021’ இருதரப்பு கடற்படை பயிற்சியின் 19 வது பதிப்பு இந்தியா மற்றும் பிரெஞ்சு கடற்படைகளுக்கு இடையில் ஏப்ரல் 25 முதல் 27 வரை அரேபிய கடலில் நடத்தப்பட்டது.

3. Justice Nuthalapati Venkata Ramana was sworn in as the 48th Chief Justice of India (CJI) on April 24, 2021. He was administered the oath of office by President Ram Nath Kovind at the Rashtrapati Bhavan, succeeds Justice Sharad Arvind Bobde they will serve as the Chief Justice till 26 August 2022.

நீதிபதி என்.வி.ரமணா ஏப்ரல் 24, 2021 அன்று இந்தியாவின் 48 வது தலைமை நீதிபதியாக (CJI) பொறுப்பேற்றுள்ளார். ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருக்கு முந்தைய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே அவர்கள் ஆகும். இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26, 2022 அன்று முடிவடைகிறது.

4. India has been ranked 49th in the Chandler Good Government Index (CGGI), which classifies 104 countries in terms of government capabilities and outcomes.

அரசாங்க திறன்கள் மற்றும் விளைவுகள் அடிப்படையில் 104 நாடுகளை தர வரிசைப்படுத்தி வெளியிடப்பட்ட சாண்ட்லர் நல்ல அரசு குறியீட்டில் (CGGI) இந்தியா 49 வது இடத்தை பிடித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

5. Beijing-born Filmmaker Chloe Zhao made history at the 93rd Academy Awards by becoming the first Asian woman and only the second woman in the Oscars’ history to win the best director award.

93 வது அகாடமி விருதுகளில் (ஆஸ்கர்) பெய்ஜிங்கை சேர்ந்த திரைப்பட இயக்குனர் சோலி ஜாவோ சிறந்த இயக்குனர் விருதை வென்றுள்ளார். இதன்மூலம், இந்த விருதை வென்ற முதல் ஆசிய பெண்மணி மற்றும் ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

6. The International Chernobyl Disaster Remembrance Day is observed every year on April 26. On this day in 1986, a reactor exploded at the Chernobyl nuclear power plant in Ukraine with devastating consequences.

சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டில் இந்த நாளில், உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஒரு உலை வெடித்து பேரழிவை ஏற்படுத்தியது.

7. The World Intellectual Property Day is observed globally on April 26 every year. The theme for the year 2021 is “IP and SMEs: Taking Your Ideas to Market”.

உலக அறிவுசார் சொத்து தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான இந்த தினத்தின் மையப்பொருள் “அறிவுசார் சொத்து மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள்: உங்கள் யோசனைகளை சந்தைக்கு எடுத்துச் செல்வது” ஆகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who administers the oath of office for the Chief Justice of India?

President

Vice President

Prime Minister

None of the above

இந்திய தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது யார்?

குடியரசுத் தலைவர்

துணை குடியரசுத் தலைவர்

பிரதமர்

மேற்கூறிய எதுவும் இல்லை

2. Vivaad Se Vishwas dispute resolution scheme is related to

Direct Tax

Indirect Tax

Consumer Grievance

None of the above

விவாத் சே விஸ்வாஸ் வழக்குகள் தீர்க்கும் திட்டம் கீழ்கண்ட எதனோடு தொடர்பு உள்ளது?

நேரடி வரி

மறைமுக வரி

நுகர்வோர் குறை

மேற்கூறிய எதுவும் இல்லை

3. VARUNA bilateral exercise is a

Army exercise

Naval exercise

Air exercise

Coastal exercise

‘வருணா’ இருதரப்பு பயிற்சி என்பது

இராணுவப் பயிற்சி

கடற்படை பயிற்சி

விமான பயிற்சி

கடலோர பயிற்சி

4. Who is the 48th Chief Justice of India?

Sharad Bobde

N.V. Ramana

Ranjan Gogoi

R Nariman

இந்தியாவின் 48 வது தலைமை நீதிபதி யார்?

சரத் போப்டே

என்.வி.ரமணா

ரஞ்சன் கோகாய்

ஆர் நாரிமன்

5. The World Intellectual Property Day is observed globally on

1. April 25

2. April 26

3. April 27

4. April 28

உலக அறிவுசார் சொத்து தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 25

2. ஏப்ரல் 26

3. ஏப்ரல் 27

4. ஏப்ரல் 28

6. What is the rank of India in the Chandler Good Government Index?

49

50

51

52

சாண்ட்லர் நல்ல அரசு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

49

50

51

52

7. Who is the first Asian woman to win the best director award in Academy awards?

Chloe Zhao

Tyler Perry

Ma Rainey

None of the above

அகாடமி விருதுகளில் (ஆஸ்கர்) சிறந்த இயக்குனர் விருதை வென்ற முதல் ஆசிய பெண் யார்?

சோலி ஜாவோ

டைலர் பெர்ரி

மா ரெய்னி

மேற்கூறிய எதுவும் இல்லை

8. The International Chernobyl Disaster Remembrance Day is observed every year on

1. April 25

2. April 26

3. April 27

4. April 28

சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 25

2. ஏப்ரல் 26

3. ஏப்ரல் 27

4. ஏப்ரல் 28

9. With which country, India conducts VARUNA exercise?

Germany

Japan

France

Singapore

இந்தியா வருணா பயிற்சி எந்த நாட்டுடன் நடத்துகிறது?

ஜெர்மனி

ஜப்பான்

பிரான்ஸ்

சிங்கப்பூர்

 

           

DOWNLOAD  Current affairs -27 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: