TNPSC CURRENT AFFAIRS PDF –27th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 27 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu Chief Minister M.K. Stalin on May 26 issued multiple directions for framing guidelines for schools and colleges for conducting online sessions. All online classes conducted in Tamil Nadu will henceforth have to be recorded by the respective school managements and reviewed periodically.

தமிழ்நாட்டில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்க அரசு துறையினருக்கு ஐந்து உத்தரவுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்துள்ளார். அதில் இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினரால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அந்த பதிவை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. Chief Minister M.K. Stalin has doubled the compensation for family members of accredited journalists who die due to COVID-19 and made it ₹10 lakh. The State government also increased the one-time incentive to journalists discharging duties during the pandemic from ₹3,000 to ₹5,000, according to an official release.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,000ல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

India

3. Subodh Kumar Jaiswal, an IPS officer and the chief of Central Industrial Security Forces, has been appointed as the Director of the Central Bureau of Investigation for a two-year period.

ஐ.பி.எஸ் அதிகாரியும், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் தலைவருமான சுபோத் குமார் ஜெய்ஸ்வால், மத்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

4. The Union Minister of Health & Family Welfare and Chairman of WHO Executive Board, Dr Harsh Vardhan, chaired the 74th World Health Assembly in virtual mode.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக சபை தலைவருமான டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் மெய்நிகர் முறையில் நடைபெற்ற 74 வது உலக சுகாதார சபைக்கு தலைமை தாங்கினார்.

5. Vesak Day 2021 is observed globally on 26 May. Vesak, the Day of Full Moon, is the most sacred day to Buddhists all over the world. On this day, Lord Gautham Buddha attained enlightenment. The Day is commemorated by the United Nations every year.

வெசாக் தினம் 2021 உலக அளவில் மே 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. பௌர்ணமி நாளில் வரும் வெசாக் தினம் உலகெங்கிலும் உள்ள புத்தர்களுக்கு மிகவும் புனிதமான நாளாகும். இந்த தினத்தில் தான் கௌதம புத்தர் ஞானம் பெற்றார். இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையால் நினைவுகூரப்படுகிறது.

6. Emmy Award-nominated choreographer Suresh Mukund, who is the founder of dance group Kings United, has won the title of World Choreography Awards for the show World of Dance. He has become the first Indian to win this title.

கிங்ஸ் யுனைடெட் என்ற நடனக் குழுவின் நிறுவனரும் நடன இயக்குனருமான சுரேஷ் முகுந்த், வேர்ல்ட் ஆஃப் டான்ஸ் நிகழ்ச்சிக்காக உலக நடன விருதை வென்றுள்ளார். இதன்மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

7. The researchers at the Indian Institute of Technology-Madras have developed a first-of-its-kind blockchain-based secure healthcare information system for a mobile phone application called “BlockTrack”. The project has CSR support from Infosys.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் “பிளாக் ட்ராக்” என்ற மொபைல் போன் செயலியில் பிளாக்செயின் அடிப்படையிலான பாதுகாப்பான சுகாதார தகவல் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்திற்கு இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதி ஆதரவு தருகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

8. India organized the first meeting of BRICS Senior Energy Officials under its presidency of BRICS on 20-21 May, led by Vivek Kumar Dewangan, Additional Secretary, Ministry of Power.

பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைமையான இந்தியா பிரிக்ஸ் மூத்த எரிசக்தி அதிகாரிகளின் முதல் கூட்டத்தை மே 20-21 தேதிகளில் நடத்தியது, இது மின் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விவேக் குமார் தேவ்கன் தலைமையில் நடத்தப்பட்டது.

9. The United Nations is observing the “International Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories” from May 25 to 31, 2021.

மே 25 முதல் 31 வரை “சர்வதேச சுயராஜ்யமற்ற பிராந்தியங்களின் மக்களுடன் ஒற்றுமை வாரம்” ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. What is the incentive to Tamil Nadu journalists discharging duties during the pandemic?

3000 rupees

4000 rupees

5000 rupees

6000 rupees

பெருந்தொற்று காலத்தில் பணிபுரியும் தமிழக ஊடகவியலாளர்களுக்கு ஊக்கத்தொகை எவ்வளவு அறிவிக்கப்பட்டுள்ளது?

3000 ரூபாய்

4000 ரூபாய்

5000 ரூபாய்

6000 ரூபாய்

2. Which institution has developed a blockchain-based mobile app ‘BlockTrack’?

1. IIT-Kanpur

2. IIT-Ropar

3. IIT-Delhi

4. IIT-Madras

‘பிளாக் ட்ராக்’ என்கிற பிளாக்செயின் அடிப்படையிலான மொபைல் செயலியை உருவாக்கிய நிறுவனம் எது?

1. ஐ.ஐ.டி-கான்பூர்

2. ஐ.ஐ.டி-ரோப்பர்

3. ஐ.ஐ.டி-டெல்லி

4. ஐ.ஐ.டி-மெட்ராஸ்

3. Who is the first Indian to win the title of World Choreography Award?

Suresh Mukund

Subodh Kumar Jaiswal

Harsh Vardhan

None of the above

உலக நடன விருது வென்ற முதல் இந்தியர் யார்?

சுரேஷ் முகுந்த்

சுபோத் குமார் ஜெய்ஸ்வால்

ஹர்ஷ் வர்தன்

மேற்கூறிய யாரும் இல்லை

4. Which country recently organised the first meeting of BRICS Senior Energy Officials?

India

Brazil

China

South Africa

பிரிக்ஸ் மூத்த எரிசக்தி அதிகாரிகளின் முதல் கூட்டத்தை எந்த நாடு சமீபத்தில் நடத்தியது?

இந்தியா

பிரேசில்

சீனா

தென்னாப்பிரிக்கா

5. Who is the Director of the Central Bureau of Investigation?

Suresh Mukund

Subodh Kumar Jaiswal

Harsh Vardhan

None of the above

மத்திய புலனாய்வு பிரிவின் தலைவர் யார்?

சுரேஷ் முகுந்த்

சுபோத் குமார் ஜெய்ஸ்வால்

ஹர்ஷ் வர்தன்

மேற்கூறிய யாரும் இல்லை

6. Which country holds the presidency of BRICS?

India

Brazil

China

South Africa

பிரிக்ஸ் அமைப்பின் தலைமை எந்த நாட்டிடம் உள்ளது?

இந்தியா

பிரேசில்

சீனா

தென்னாப்பிரிக்கா

7. The International Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories is started on

1. May 24

2. May 25

3. May 26

4. May 27

சர்வதேச சுயராஜ்யமற்ற பிரதேசங்களின் மக்களுடன் ஒற்றுமை வாரம் எந்த தேதியில் தொடங்குகிறது

1. மே 24

2. மே 25

3. மே 26

4. மே 27

8. Vesak Day 2021 is observed globally on

1. May 24

2. May 25

3. May 26

4. May 27

வெசாக் தினம் 2021 உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 24

2. மே 25

3. மே 26

4. மே 27

 

         

DOWNLOAD  Current affairs -27 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d