TNPSC CURRENT AFFAIRS PDF –28th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 28 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu government has instituted the ‘Thagaisaal Thamizhar’ (Distinguished Tamil) Award to honour an eminent personality who has contributed a great deal to the welfare of Tamil Nadu and development of the Tamil community. Chief Minister M.K. Stalin has directed that a committee be constituted to select the recipient of the award. It will include the Chief Minister, the Minister for Tamil Official Language and Tamil Culture and the Chief Secretary. The award will be presented by the Chief Minister at the Independence Day celebrations each year. It will include a cash prize of ₹10 lakh and a citation.

தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியோருக்கு, ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் “தகைசால் தமிழர்” விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் கையால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2.The Tamil Nadu Chief Minister M K Stalin has appointed Professor Suba Veerapandian as a member of the Tamil Nadu Curriculum Institute Advisory Committee.

தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களை நியமித்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

3.Chief minister M.K. Stalin on July 27, 2021 inaugurated 25 Compressed Natural Gas (CNG) stations and a City Gate Station set up by Torrent Gas, in Chennai and Tiruvallur districts.

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகேயுள்ள வல்லூரில் டோரன்ட் கேஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள சிட்டி கேட் நிலையம் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி (CNG) நிலையங்கள் ஆகியவற்றை 27.07.2021 அன்று காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

4.S. Koventhan assumed charge as the 31st Regional Passport Officer of the Chennai region on July 27.

சென்னை மண்டலத்தின் 31-வது புதிய கடவுச்சீட்டு அதிகாரியாக எஸ்.கோவேந்தன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

India 

5.Dholavira, the Harappan City in the Rann of Kutch, Gujarat has been inscribed as the 40th Indian site on UNESCO’s World Heritage list.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த நகரமான தோலவிரா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் இந்தியாவின் 40வது தளமாக சேர்க்கப்பட்டுள்ளது.

6.National Fertilisers Limited (NFL) and Rashtriya Chemicals and Fertilisers Ltd (RCF) signed Memorandum of Understanding (MoU) with Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO) for ‘transfer of technology’ of a revolutionary and game changer fertiliser Nano Urea Liquid. India has become the first country globally to start commercial production of Nano Urea.

நானோ யூரியா திரவ உரத்தின் ‘தொழில்நுட்பத்தை பெறுவதற்காக’ தேசிய உரம் நிறுவனம் (NFL) மற்றும் தேசிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனம் (RCF) ஆகியவை இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்துடன் (IFFCO) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம், நானோ யூரியாவின் வணிக உற்பத்தியை செய்யும் உலகின் முதல் நாடாக இந்தியா ஆகியுள்ளது.

7.A senior IPS officer Nasir Kamal has been appointed as the Director General of Bureau of Civil Aviation Security (BCAS) in the Ministry of Civil Aviation till his superannuation on July 31, 2022. BCAS is a wing of the Civil Aviation Ministry looking after civil aviation security.

குடிசார் வான்பயண பாதுகாப்பு பணியகத்தின் (BCAS) தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி நசீர் கமல் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பொறுப்பில் ஜூலை 31, 2022 வரை இருப்பார்.  குடிசார் வான்பயண பாதுகாப்பு பணியகம் (BCAS), குடிசார் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.

International 

8.Indian Naval Ship Talwar is participating in Exercise Cutlass Express 2021, being conducted from July 26, 2021 to August 6, 2021 along the East Coast of Africa. The exercise is an annual maritime exercise conducted to promote national and regional maritime security in East Africa and the Western Indian Ocean.

ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் ஜூலை 26, 2021 முதல் ஆகஸ்ட் 6, 2021 வரை நடத்தப்படுகிற கட்லாஸ் எக்ஸ்பிரஸ் கடல்சார் பயிற்சி 2021 இல் இந்திய கடற்படைக் கப்பல் தல்வார் பங்கேற்கிறது. இது தேசிய மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கிழக்கு ஆப்பிரிக்கா அல்லது மேற்கு இந்தியப் பெருங்கடலில் நடத்தப்படும் கடல்சார் பயிற்சியாகும்.

Sports

9.Indian wrestler Priya Malik has won a gold medal at the World Cadet Wrestling Championship, which is taking place in Budapest, Hungary.

டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற்று வரும் அதேவேளையில், ஹங்கேரி நாட்டில் புடோபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Days & Themes

10.The International Day for the Conservation of the Mangrove Ecosystem is celebrated every year on 26th July.

பன்னாட்டு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.‘Thagaisaal Thamizhar’ Award will be presented annually at

A.Republic Day

B.Independence Day

C.Gandhi Jayanti

D.None of the above

ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர்’ விருது எந்த தினத்தில் வழங்கப்படவுள்ளது?

A.குடியரசு தினம்

B.சுதந்திர தினம்

C.காந்தி ஜெயந்தி

D.மேற்கூறிய எதுவும் இல்லை

2.Where is a City Gate Station set up by Torrent Gas?

A.Thiruvallur

B.Perambalur

C.Ariyalur

D.Tiruppur

டோரண்ட் கேஸ் நிறுவனம் அமைத்த சிட்டி கேட் நிலையம் எங்கே உள்ளது?

A.திருவள்ளூர்

B.பெரம்பலூர்

C.அரியலூர்

D.திருப்பூர்

3.Who has been appointed as the member of Tamil Nadu Curriculum Institute Advisory Committee?

A.Dindigul Leoni

B.Nasir Kamal

C.Suba Veera Pandian

D.Koventhan

தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A.திண்டுக்கல் லியோனி

B.நசீர் கமல்

C.சுப வீரபாண்டியன்

D.கோவேந்தன்

4.Dholavira is located in

A.Haryana

B.Gujarat

C.Punjab

D.Rajasthan

தோலவிரா எங்கு அமைந்துள்ளது?

A.ஹரியானா

B.குஜராத்

C.பஞ்சாப்

D.ராஜஸ்தான்

5.Who has been appointed as the Director General of Bureau of Civil Aviation Security?

A.Dindigul Leoni

B.Nasir Kamal

C.Suba Veera Pandian

D.Koventhan

குடிசார் வான்பயண பாதுகாப்பு பணியகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A.திண்டுக்கல் லியோனி

B.நசீர் கமல்

C.சுப வீரபாண்டியன்

D.கோவேந்தன்

6.Who has won a gold medal at the World Cadet Wrestling Championship?

A.Mirabai Chanu

B.Disha Ravi

C.Bhushan Malik

D.Priya Malik

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியர் யார்?

A.மீராபாய் சானு

B.திஷா ரவி

C.பூஷன் மாலிக்

D.பிரியா மாலிக்

7.Who has been appointed as the Regional Passport Officer of the Chennai region?

A.Dindigul Leoni

B.Nasir Kamal

C.Suba Veera Pandian

D.Koventhan

சென்னை மண்டலத்தின் கடவுச்சீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A.திண்டுக்கல் லியோனி

B.நசீர் கமல்

C.சுப வீரபாண்டியன்

D.கோவேந்தன்

8.The International Day for the Conservation of the Mangrove Ecosystem is celebrated every year on

A.July 26

B.July 27

C.July 28

D.July 29

பன்னாட்டு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூலை 26

B.ஜூலை 27

C.ஜூலை 28

D.ஜூலை 29

9.How many Indian sites are inscribed on UNESCO’s World Heritage list?

A.38

B.39

C.40

D.41

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் எத்தனை இந்திய தளங்கள் உள்ளன?

A.38

B.39

C.40

D.41

10.Exercise Cutlass Express is a

A.Army exercise

B.Air Force exercise

C.Cyber exercise

D.Maritime exercise

கட்லாஸ் எக்ஸ்பிரஸ் பயிற்சி என்பது

A.இராணுவப் பயிற்சி

B.விமானப்படை பயிற்சி

C.சைபர் பயிற்சி

D.கடல்சார் பயிற்சி

DOWNLOAD  Current affairs -28 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: