TNPSC CURRENT AFFAIRS PDF –29th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –29 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC January Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Chief Minister Edappadi K.Palaniswami on January 28 inaugurated the memorial established by the government at former Chief Minister Jayalalithaa’s residence ‘Veda Nilayam’ at Poes Garden in Chennai. He also unveiled a 9 feet bronze statue of Jayalalithaa on the campus of the Tamil Nadu State Council for Higher Education, and said her birth anniversary (February 24) would henceforth be observed by the government.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வசித்து வந்த, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாக, தமிழக அரசால் மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தை, முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 அடி முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். அப்போது, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக, அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

2.The Chief Minister launched e-bikes and next gen bikes to facilitate non-motorised transport along Marina Beach and in various parts of the city.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் சென்னை மெரினா கடற்கரையில், ‘இ-சைக்கிள்கள்’ மற்றும் ‘அடுத்த தலைமுறைக்கான சைக்கிள்கள்’ திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

3.The Chief Minister Edappadi K.Palaniswami launched the Namma Chennai Selfie Point on Marina Beach.

சென்னையின் மாண்பினை போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ செல்பி கார்னரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

India

4.The Prime Minister addressed the World Economic Forum’s Davos Dialogue on 28th January, 2021 via video conferencing. He spoke on the ‘Fourth Industrial Revolution – using technology for the good of humanity’.

பிரதமர் ஜனவரி 28, 2021 அன்று நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ‘டாவோஸ் உரையாடலில்’ காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அதில், ‘நான்காவது தொழில்துறை புரட்சி – மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்’ என்கிற தலைப்பில் அவர் பேசினார்.

5.The National Informatics Centre Services Incorporated (NICSI), a Public Sector Enterprise under National Informatics Centre (NIC), Ministry of Electronics & Information Technology (MeitY), celebrated 25 years of its establishment on January 28, 2021.

தேசிய தகவல் மையத்தின் (NIC) கீழ் இயங்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) பொதுத்துறை நிறுவனமான தேசிய தகவல் மைய சேவைகள் நிறுவனம் (NICSI) ஜனவரி 28, 2021 அன்று அதன் 25வது ஆண்டு நிறுவன தினத்தை கொண்டாடியது.

6.The Union Minister of Electronics & Information Technology launched TEJAS – A Visual Intelligence Tool, e-Auction India and Work from AnyWhere (WAW) Portal.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அவர்கள் ‘தேஜாஸ்’ – காட்சி நுண்ணறிவு கருவி, ‘மின்-ஏலம் இந்தியா’ மற்றும் ‘எங்கிருந்தும் வேலை (WAW)’ போர்ட்டலை ஆகியவற்றை வெளியிட்டார்.

7.The Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC) has released ‘Marine Megafauna Stranding Guidelines’ and ‘National Marine Turtle Action Plan’ for the conservation of marine megafauna and marine turtles.

கடல் பெருவிலங்குகள் மற்றும் கடல் ஆமைகளை பாதுகாப்பதற்காக சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC) ‘கரை ஒதுங்கப்பட்ட கடல் பெருவிலங்கு வழிகாட்டுதல்கள்’ மற்றும் ‘தேசிய கடல் ஆமை செயல் திட்டம்’ ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

8.The NCAVES India Forum 2021, organised by the Ministry of Statistics and Programme Implementation (MoSPI) in a virtual format, with live sessions on January 14, 21 and 28, 2021, concluded on January 28, 2021. The event covered a wide range of topics pertaining to the System of Environmental Economic Accounting (SEEA).

புள்ளிவிவரங்கள் மற்றும் நிரல் அமலாக்க அமைச்சகம் (MoSPI) இணைய வழியில் ஏற்பாடு செய்த NCAVES இந்தியா மன்றம்-2021, ஜனவரி 14, 21 மற்றும் 28, 2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஜனவரி 28 அன்று நிறைவடைந்த இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பொருளாதார கணக்கியல் அமைப்பு (SEEA) தொடர்பானதாகும்.

9.The Union Minister of Youth Affairs & Sports launched a breakthrough Reference Material for use in chemical testing in the field of anti-doping synthesized by collaborative efforts of National Dope Testing Laboratory (NDTL) and National Institute of Pharmaceutical Education and Research (NIPER), Guwahati.

தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகம் (NDTL) மற்றும் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தொகுக்கப்பட்ட ‘ஊக்கமருந்து எதிர்ப்பு துறையில் ரசாயன சோதனையை பயன்படுத்துவதற்கான குறிப்பு’ புத்தகத்தை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

International

10.The Union Minister for Environment, Forest and Climate Change and the French Minister for Ecological Transition launched the ‘Indo-French Year of the Environment’ in New Delhi. The basic objective is to strengthen Indo-French cooperation in sustainable development, increase the effectiveness of actions in favor of global environment protection and give them greater visibility.

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சரும், சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான பிரெஞ்சு அமைச்சரும் இணைந்து ‘இந்தோ-பிரெஞ்சு சுற்றுச்சூழல் ஆண்டை’ தொடங்கி வைத்தனர். நிலையான வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவான செயல்களின் செயல்திறனை அதிகரிப்பதும் இதன் அடிப்படை நோக்கமாகும்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Where is the former Chief Minister Jayalalithaa’s memorial established?

Poes Garden

Marina Beach

Srirangam

None of the above

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுச்சின்னம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?

போயஸ் கார்டன்

மெரினா கடற்கரை

ஸ்ரீரங்கம்

மேற்கூறிய எதுவும் இல்லை

2.Recently, the bronze statue of Jayalalithaa was recently unveiled on the campus of

1. Tamil Nadu Chief Secretariat

2. Tamil Nadu Public Service Commission

3. Tamil Nadu State Council for Higher Education

4. Tamil Nadu School Education Department

சமீபத்தில், ஜெயலலிதாவின் வெண்கல சிலை கீழ்காணும் எதன் வளாகத்தில் திறக்கப்பட்டது?

தமிழ்நாடு தலைமைச் செயலகம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழக உயர் கல்வி மன்றம்

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை

3.Recently, the Namma Chennai Selfie Point was launched by the Chief Minister of Tamil Nadu at

Poes Garden

Marina Beach

Srirangam

None of the above

சமீபத்தில், ‘நம்ம சென்னை செல்பி பாயிண்ட்’ தமிழக முதல்வரால் எங்கு தொடங்கப்பட்டது?

போயஸ் கார்டன்

மெரினா கடற்கரை

ஸ்ரீரங்கம்

மேற்கூறிய எதுவும் இல்லை

4.Who conducts Davos Dialogue?

IMF

WEF

BRICS

UNO

‘டாவோஸ் உரையாடலை’ நடத்துவது யார்?

IMF

WEF

BRICS

UNO

5.The National Informatics Centre Services Incorporated (NICSI) is a Public Sector Enterprise of which ministry?

A. Ministry of Electronics

B. Ministry of Environment

C. Ministry of External Affairs

None of the above

தேசிய தகவல் மைய சேவைகள் நிறுவனம் (NICSI) எந்த அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமாகும்?

மின்னணு அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

வெளிவிவகார அமைச்சகம்

மேற்கூறிய எதுவும் இல்லை

6.What is TEJAS, recently launched by the Union Minister of Electronics & Information Technology?

Multi-directional Missile

Artificial Intelligence Tool

Visual Intelligence Tool

None of the above

சமீபத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரால் தொடங்கப்பட்ட ‘தேஜாஸ்’ என்றால் என்ன?

பல திசை ஏவுகணை

செயற்கை நுண்ணறிவு கருவி

காட்சி நுண்ணறிவு கருவி

மேற்கூறிய எதுவும் இல்லை

7.The National Marine Turtle Action Plan was released by

1. Ministry of Electronics

2. Ministry of Environment

3. Ministry of External Affairs

None of the above

‘தேசிய கடல் ஆமை செயல் திட்டம்’ யாரால் வெளியிடப்பட்டது?

மின்னணு அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

வெளிவிவகார அமைச்சகம்

மேற்கூறிய எதுவும் இல்லை

8.The NCAVES India Forum is related to

Historical Monuments

Cultural Heritage

Environmental Accounting

Technological Innovation

‘NCAVES இந்தியா மன்றம்’ கீழ்காணும் எதனோடு தொடர்புடையது?

வரலாற்று நினைவுச்சின்னங்கள்

கலாச்சார பாரம்பரியம்

சுற்றுச்சூழல் கணக்கியல்

தொழில்நுட்ப கண்டுபிடிப்பு

9.The Reference Material for use in chemical testing in the field of anti-doping was prepared by

National Dope Testing Laboratory

National Institute of Pharmaceutical Education and Research

1. Both 1 and 2

2. Neither 1 nor 2

‘ஊக்கமருந்து எதிர்ப்பு துறையில் ரசாயன பரிசோதனை பயன்படுத்தவதற்கான குறிப்பு புத்தகம்’ யாரால் தயாரிக்கப்பட்டது?

தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம்

தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் இல்லை

10.With which country, India has launched the ‘Year of the Environment’?

Russia

France

Germany

Italy

எந்த நாட்டுடன் இணைந்து, இந்தியா ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ அனுசரிக்கின்றது?

ரஷ்யா

பிரான்ஸ்

ஜெர்மனி

இத்தாலி

 

                                                      DOWNLOAD  Current affairs -29 JAN- 2021 PDF


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us