TNPSC CURRENT AFFAIRS PDF –2nd August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 2 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Ordnance Factory Tiruchirappalli (OFT) on July 29, 2021 launched a new weapon called TriCa (Trichy Carbine), a mini version of the Trichy Assault Rifle (TAR). The 7.62 X 39 mm portable weapon launched on the carbine platform was entirely manufactured at OFT. TriCa weighs 3.17 kg (including the magazine) and is lighter compared to the assault rifles.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை (OFT) திருச்சி தாக்குதல் துப்பாக்கியின் (TAR) சிறிய வடிவான ட்ரிகா (திருச்சி கார்பைன்) என்ற புதிய துப்பாக்கியை ஜூலை 29, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. 7.62 X 39 மிமீ அளவிளான இந்த கையடக்க துப்பாக்கி முற்றிலும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது ஆகும். இதன் எடை 3.17 கிலோ, TAR உடன் ஒப்பிடும்போது இலகுவானது ஆகும்.

2.Stakeholders and experts should be consulted for preparation of the state budget and a separate budget for agriculture to usher in a “renaissance in the lives of Tamil Nadu people”, Chief Minister M K Stalin advised ministers and top officials.

விவசாயிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களைக் கலந்தாலோசித்து நிகழாண்டில் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றை தயாரிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கைகள் அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாகத் தனியே ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படள்ளது.

3.100 years of the Tamil Nadu’s Elected Legislature: The first elected legislature in the State, originally called the Madras Legislative Council, was established in 1921 under the Government of India Act 1919.  The term of the Council was for a period of three years.  It consisted of 132 Members of which 34 were nominated by the Governor and the rest were elected.  It met for the first time on the 9th January 1921 at Fort St. George, Madras.  The Council was inaugurated by the Duke of Cannaught.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா: சென்னை சட்டமன்றம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் 1921-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1919-ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில் 98 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் 25 நியமன உறுப்பினர்களும் இருந்தனர். சட்டமன்றத்தின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருந்தது. 1921 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாக கூடியது. முதல் சட்டமன்றம் கானட் பிரபு அவர்களால் தொடங்கப்பட்டது.

4.The Government of Tamil Nadu formed a trust namely Adyar Poonga Trust (APT) in 2006 to develop an Eco Park in Adyar creek. Later, it was renamed as Chennai Rivers Restoration Trust (CRRT) in 2010. The Chief Secretary is the Chairperson of the Trust. The current projects are:

  1. Eco-Restoration of Adyar Creek (58 acres)
  2. Eco-Restoration of Adyar Creek and Estuary (300 acres)
  3. Integrated Cooum River Eco-Restoration Plan

அடையாறு உப்பங்கழியில் ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்க தமிழ்நாடு அரசு 2006 இல் அடையார் பூங்கா அறக்கட்டளை (APT) என்ற அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியது. பின்னர், இது சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) என 2010-ம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. தலைமைச் செயலாளர் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். தற்போதைய திட்டங்கள்:

  1. அடையாறு உப்பங்கழி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (58 ஏக்கர்)
  2. அடையாறு உப்பங்கழி மற்றும் கழிமுக சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (300 ஏக்கர்)
  3. ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டம்

India

5.Deepak Das took charge as the new Controller General of Accounts on August 1, 2021. Deepak Das is the 25th officer to hold the position of Controller General of Accounts (CGA).

புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக திரு தீபக் தாஸ் அவர்கள் ஆகஸ்டு 1, 2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் 25-வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆவார்.

Sports

6.PV Sindhu became the first Indian woman athlete to win two individual Olympic medals on August 1, as she beat China’s He Bing Jiao to win the bronze medal at the Tokyo Olympics. She had won the silver medal at the 2016 Rio Olympics.

டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து. சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டி ஒன்றில் இருமுறை பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

Days & Themes

7.World Breastfeeding Week is celebrated every year from 1st August to 7th August. The slogan of World Breastfeeding Week (WBW) 2021 is ‘Breastfeeding: Foundation of Life’.

ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரம் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் (WBW) 2021-ன் முழக்கம் ‘தாய்ப்பால்: வாழ்வின் அடித்தளம்’ ஆகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which organisation recently launched TriCa?

A.CSIR

B.ISRO

C.DRDO

D.OFT

எந்த நிறுவனம் சமீபத்தில் TriCa துப்பாக்கியை அறிமுகப்படுத்தியது?

A.CSIR

B.ISRO

C.DRDO

D.OFT

2.When was the Chennai Rivers Restoration Trust formed as Adyar Poonga Trust?

A.2002

B.2004

C.2006

D.2008

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, அடையாறு பூங்கா அறக்கட்டளையாக எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A.2002

B.2004

C.2006

D.2008

3.What is the slogan of World Breastfeeding Week (WBW) 2021?

A.Importance of Health

B.Foundation of Health

C.Importance of Life

D.Foundation of Life

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் (WBW) 2021-ன் முழக்கம் என்ன?

A.ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்

B.ஆரோக்கியத்தின் அடித்தளம்

C.வாழ்க்கையின் முக்கியத்துவம்

D.வாழ்க்கையின் அடித்தளம்

4.Who is the new Controller General of Accounts of India?

A.Ajay Singh

B.Deepak Das

C.Saina Nehwal

D.P V Sindhu

இந்தியாவின் புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரி யார்?

A.அஜய் சிங்

B.தீபக் தாஸ்

C.சாய்னா நேவால்

D.பி வி சிந்து

5.World Breastfeeding Week is celebrated every year between

A.August 1 to 7

B.August 2 to 8

C.August 3 to 9

D.August 4 to 10

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது?

A.ஆகஸ்டு 1 முதல் 7 வரை

B.ஆகஸ்டு 2 முதல் 8 வரை

C.ஆகஸ்டு 3 முதல் 9 வரை

D.ஆகஸ்டு 4 முதல் 10 வரை

6.Who is the first Indian woman athlete to win two individual Olympic medals

A.Ajay Singh

B.Deepak Das

C.Saina Nehwal

D.P V Sindhu

இரண்டு தனிப்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் விளையாட்டு வீரர் யார்?

A.அஜய் சிங்

B.தீபக் தாஸ்

C.சாய்னா நேவால்

D.பிவி சிந்து

7.Who is the Chairperson of the Chennai Rivers Restoration Trust?

A.Environment Secretary

B.Chief Secretary

C.District Collector

D.Corporation Commissioner

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் தலைவர் யார்?

A.சுற்றுச்சூழல் துறை செயலாளர்

B.தலைமைச் செயலாளர்

C.மாவட்ட ஆட்சியர்

D.மாநகராட்சி ஆணையர்

DOWNLOAD  Current affairs -2 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us