TNPSC CURRENT AFFAIRS PDF –30th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 30 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.A punch-marked silver coin has been found at Keeladi archaeological site in Sivaganga district of Tamil Nadu. The coin has the figures of the sun, the moon, a bull and a dog on one (front) side and a half circle and a sign – which looks like the Tamil letter ‘Ta’ – on the other (rear) side. It weighs 2.20 gram. The coin was found at a depth of 146 cm. The Tamil Nadu state archaeology department is carrying out the seventh phase of excavation at Keeladi where a civilization is said to have flourished on the banks of river Vaigai 2,600 years ago.

சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்பாக, வெள்ளியினால் ஆன முத்திரையிடப்பட்ட காசு ஒன்று கிடைத்துள்ளது. 146 செ.மீ ஆழத்தில் கிடைத்த இந்தக் காசில் முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரைவட்டம் மற்றும் ‘ட’ வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன. 2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்றுமொறு சான்றாகும்.

2.The Tamil Nadu government on July 28 constituted a 12-member ‘Committee for Revival of MSMEs in Tamil Nadu’ headed by retired IAS officer Dr N. Sunderadevan (Former Industries Secretary of Tamil Nadu). The committee will look into the challenges faced by the MSMEs sector in Tamil Nadu and suggest immediate, medium-term and long-term measures required for the revival of the sector. The committee will submit its report within three months. The 12-member committee will include:

 1. Prof. M. Vijayabhaskar, part-time member, State Development Policy Council,
 2. Bindu Anand, former member of RBI Committee on Financial Inclusion, SME Finance and Securitisation,
 3. N. Balasubramanium, former chairman and managing director, Small Industries Development Bank of India (SIDBI),
 4. Hemalatha Annamalai, Co-founder and Ex-CEO Ampere Vehicles (Electric Vehicle),
 5. Israr Ahamed, regional chairman, Federation of Indian Export Organisations,
 6. Anburajan, president, Tamil Nadu Small and Tiny Industries Association (TANSTIA) and
 7. R. Anand, Ex-partner, Ernest and Young and chartered accountant and former member of RBI Committee on Asset Reconstruction Companies.

It also includes government officers as ex-officio members. They are

 1. Secretary-in-charge of the Finance Department,
 2. Secretary-in-charge of Industries Department,
 3. Secretary-in-Charge of MSME Department;
 4. Industries Commissioner (Member Convener) and
 5. Chairman,  State Level Bankers Committee.

நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய 12 பேர் நிபுணர் குழு ஒன்றை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் தொழில்துறை முன்னாள் செயலருமான ந.சுந்தரதேவன் தலைமையில் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றில் இருந்து நிறுவனங்களை மீட்டுஎடுப்பதற்கு தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். இக்குழு 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

இக்குழுவில் உள்ள 7 முழுநேர உறுப்பினர்கள்:

 1. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும், மாநில வளர்ச்சிகொள்கைக் குழுவின் பகுதிநேர உறுப்பினருமான எம்.விஜயபாஸ்கர்,
 2. இந்திய ரிசர்வ் வங்கியின் சிறு, நடுத்தர நிறுவன நிதி உள்ளிட்ட குழுக்களின் முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த்,
 3. இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம்,
 4. ஆம்பியர் மின்சார வாகன நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமலதா அண்ணாமலை,
 5. இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பின் மண்டல தலைவர் இஸ்ரார் அகமது,
 6. தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் (TANSTIA) தலைவர் அன்புராஜன்,
 7. பட்டயக் கணக்காளர் ஆனந்த்.

இக்குழுவில் உள்ள 5 அலுவல் சாரா உறுப்பினர்கள்:

 1. நிதித்துறை செயலர்,
 2. தொழில்துறை செயலர்,
 3. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர்,
 4. மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தலைவர்,
 5. தொழில்துறை ஆணையர் குழுவின் உறுப்பினர் – செயலராக பணியாற்றுவார்.

3.Municipal administration Minister K N Nehru on 28.07.2021 chaired the 339th Board meeting Chennai Metropolitan Water Supply and Sewerage Board (CMWSSB) at the Directorate of Municipal Administration.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் தலைமையில் 28.07.2021 அன்று நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் (CMWSSB) 339வது வாரியக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

4.Chief Minister M.K. Stalin on July 29, 2021 inaugurated the scarless robotic liver donor surgery scheme, to be performed under the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme, at Rela Hospital.

ஜூலை 29, 2021 அன்று குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படவுள்ள ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

5.Governor Banwarilal Purohit on July 29, 2021 distributed the Tamil Nadu Medical Council Awards-2021 to 31 doctors for their exemplary services during the COVID-19 pandemic.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் சார்பில் சென்னை கிண்டியில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள்-2021 விழா ஜூலை 29, 2021 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 31 மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

6.Minister for Electricity, Prohibition and Excise V Senthil Balaji, on July 29, directed Tangedco officials to prepare a five-year plan to increase the generation capacity and strengthen the distribution infrastructure. The Minister also reviewed the complaints received at the new 24×7 customer call centre Minnagam, the time taken to rectify it and the reasons for frequent power outages in particular areas. The Minister also asked the officials to popularise the new customer call centre number 94987 94987 by sending an SMS to all the consumers who registered their mobile numbers.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்த மின்துறைக்கான ஐந்தாண்டு திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய 24×7 வாடிக்கையாளர் அழைப்பு மையமான மின்னகப் புகார் மையத்தில் பெறப்பட்ட மின்புகார்கள் குறித்தும், அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கைப்பேசி எண் பதிவு செய்யப்பட்ட மின்நுகர்வோருக்கு மின்னகப் புகார் மையத்தின் 94987 94987 என்ற தொடர்பு எண்ணை அனைவருக்கும் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

7.Cancer Institute at Adyar (WIA) and the Indian Institute of Technology – Madras are joining hands to develop a kit for early diagnosis of ovarian cancer. The aim is to develop a cost effective, point-of-care device that will use only a blood sample and can be deployed for outpatient diagnosis.

அடையாறு புற்றுநோய் நிறுவனம் (WIA) மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – மெட்ராஸ் ஆகியவை இணைந்து கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கருவி ஒன்றை உருவாக்குகின்றன. இரத்த மாதிரியை மட்டுமே பயன்படுத்தும், வெளிநோயாளர் நோயறிதலுக்கு பயன்படுத்தக்கூடிய, செலவு குறைந்த, எடுத்துச்செல்லத்தக்க சாதனத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

India

8.The Union Health Ministry has announced 27% reservation for the OBCs (OtherBackward Classes) and 10% quota for the Economically Weaker Sections (EWS) in the All India quota (AIQ) scheme for undergraduate and postgraduate medical and dental courses from 2021-22.

மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ் / எம்.டி / எம்.எஸ் / டிப்ளோமா / பி.டி.எஸ் / எம்.டி.எஸ்) அகில இந்திய தொகுப்பில் (AIQ) இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBCs) மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் பிரிவு (EWS) மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடிவு எடுத்துள்ளதுதாகவும், இந்த கல்வி ஆண்டு 2021-22 முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Days & Themes

9.International Tiger Day is observed on 29th July every year. This year marks the 11th International Tiger Day. The theme for the 2021 International Tiger Day celebration is “Their Survival is in our hands”.

பன்னாட்டு புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 11 வது பன்னாட்டு புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு பன்னாட்டு புலிகள் தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் “அவர்களின் வாழ்க்கை நம் கைகளில் உள்ளது” ஆகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Where was a punch-marked silver coin recently discovered?

A.Agaram

B.Kodumanal

C.Keezhadi

D.Adichanallur

முத்திரையிடப்பட்ட வெள்ளிக் காசு சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

A.அகரம்

B.கொடுமணல்

C.கீழடி

D.அதிச்சனல்லூர்

2.Who is the head of the Committee for Revival of MSMEs in Tamil Nadu?

A.N. Sunderadevan

B.K.N. Nehru

C.V. Senthilbalaji

D.Banwarilal Purohit

தமிழ்நாட்டில் நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான நிபுணர் குழுவின் தலைவர் யார்?

A.என்.சுந்தரதேவன்

B.கே.என். நேரு

C.வி.செந்தில்பாலாஜி

D.பன்வாரிலால் புரோகித்

3.Where was the scarless robotic liver donor surgery scheme inaugurated?

A.Rela Hospital

B.Kaveri Hospital

C.Adyar Cancer Institute

D.Madras Medical College

ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை சமீபத்தில் முதலமைச்சர் எங்கு திறந்துவைத்தார்?

A.ரேலா மருத்துவமனை

B.காவேரி மருத்துவமனை

C.அடையாறு புற்றுநோய் நிறுவனம்

D.சென்னை மருத்துவக் கல்லூரி

4.Who chairs the Chennai Metropolitan Water Supply and Sewerage Board meeting?

A.N. Sunderadevan

B.K.N. Nehru

C.V. Senthilbalaji

D.Banwarilal Purohit

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியக்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்?

A.என்.சந்திரதேவன்

B.கே.என். நேரு

C.வி.செந்தில்பாலாஜி

D.பன்வாரிலால் புரோகித்

5.What is the name of the new 24×7 customer call centre of TNEB?

A.Anbagam

B.Ezhilagam

C.Minnagam

D.Thamizhagam

TNEB இன் புதிய 24×7 வாடிக்கையாளர் அழைப்பு மையத்தின் பெயர் என்ன?

A.அன்பகம்

B.எழிலகம்

C.மின்னகம்

D.தமிழகம்

6.Who distributed the Tamil Nadu Medical Council Awards-2021?

A.N. Sunderadevan

B.K.N. Nehru

C.V. Senthilbalaji

D.Banwarilal Purohit

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் விருதுகள் -2021 ஐ வழங்கியவர் யார்?

A.என்.சுந்தரதேவன்

B.கே.என். நேரு

C.வி.செந்தில்பாலாஜி

D.பன்வாரிலால் புரோகித்

7.Which Minister has directed to prepare a five-year plan for TNEB?

A.N. Sunderadevan

B.K.N. Nehru

C.V. Senthilbalaji

D.Banwarilal Purohit

TNEB க்காக ஐந்தாண்டு திட்டத்தை தயாரிக்க எந்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?

A.என்.சுந்தரதேவன்

B.கே.என். நேரு

C.வி.செந்தில்பாலாஜி

D.பன்வாரிலால் புரோகித்

8.Which institute has collaborated with the Indian Institute of Technology – Madras to develop a kit for early diagnosis of ovarian cancer?

A.Rela Hospital

B.Kaveri Hospital

C.Adyar Cancer Institute

D.Madras Medical College

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கருவியை உருவாக்க மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் நிறுவனத்துடன் எந்த நிறுவனம் இணைந்து செயல்படுகிறது?

A.ரேலா மருத்துவமனை

B.காவேரி மருத்துவமனை

C.அடையாறு புற்றுநோய் நிறுவனம்

D.சென்னை மருத்துவக் கல்லூரி

9.International Tiger Day is observed every year on

A.July 27

B.July 28

C.July 29

D.July 30

பன்னாட்டு புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

A.ஜூலை 27

B.ஜூலை 28

C.ஜூலை 29

D.ஜூலை 30

DOWNLOAD  Current affairs -30 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: