TNPSC CURRENT AFFAIRS PDF –30th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 30 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The freedom fighter and Gandhian T.M. Kalliannan Gounder, the last surviving former member of the Indian Constituent Assembly, died at the age of 101 at Tiruchengode in western Tamil Nadu on May 28. Kalliannan Gounder was born on January10, 1921 at Akkaraipatti village in Namakkal. He joined the Indian National Congress at the age of 19 and participated in the Quit India movement and he was elected to the Indian Constituent Assembly while he was 28-years-old. Then he was reportedly the youngest member in the Constituent Assembly then and also a member of India’s first provisional parliament.

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் எம்பி டி.எம்.காளியண்ணன் கவுண்டர் (101 வயது) அவர்கள், உடல்நலக்குறைவால் மே 28 அன்று உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர். தனது 19-ஆம் வயதில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். தனது 28-வது வயதில் (1948) இளைய உறுப்பினராக இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது அரசியல் நிர்ணய சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் புதிய மக்களவை உறுப்பினர்களாக (எம்பி) ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அதன்படி காளியண்ணன் எம்பியாகப் பதவியேற்றார்.

2. Chief Minister M.K. Stalin has announced that every child, who donates to the Chief Minister’s Public Relief Fund (CMPRF) to help the State government fight COVID-19, would be sent a copy of Tirukkural on behalf of the Tamil Nadu government.

கொரோனா பெருந்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

India

3. The Indian Broadcasting Foundation (IBF), the apex body of broadcasters, is being renamed as Indian Broadcasting and Digital Foundation (IBDF) with an aim to expand its purview to cover digital platforms to bring all digital (OTT) players under one roof.

அனைத்து டிஜிட்டல் (OTT) நிறுவனங்களையும் ஒரே ஒழுங்கு முறையின் கீழ் கொண்டுவருவதற்காக தற்போதைய இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை (IBF) இந்திய ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளை (IBDF) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4. The International Financial Services Centres Centres Authority (IFSCA) has constituted an expert committee on Investment Funds to recommend the roadmap for the fund’s industry in the International Financial Services Centres (IFSCs). The committee is headed by Nilesh Shah, the Managing Director of Kotak Mahindra Asset Management Co Ltd.

சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) சர்வதேச நிதிச் சேவை மையங்களில் (IFSCs) நிதித் தொழிலுக்கான பாதை வரைபடத்தை பரிந்துரைக்க முதலீட்டு நிதிகள் குறித்த நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. The Scientists of Nagpur-based National Environmental Engineering Research Institute (NEERI) under the Council of Scientific and Industrial Research (CSIR) have developed a do-it-yourself version of the RT-PCR test for testing Covid-19 samples. The NEERI scientists have developed the ‘Saline Gargle RT-PCR Method’ for coronavirus detection that has also received ICMR’s approval.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) இன் இயங்கும் நாக்பூரை தளமாகக் கொண்ட தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நீரி) ஆராய்ச்சியாளர்கள் உப்பத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் 3 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறிய உதவும் புதிய முறை RT PCR பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் ‘சலைன் கார்கில் ஆர்டி-பி.சி.ஆர் முறை’ ஆகும், இதற்கு ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. The U.S. President Joe Biden has nominated Indian American Arun Venkataraman for the Director-General of the United States and Foreign Commercial Service and Assistant Secretary for Global Markets in the Department of Commerce.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் வெங்கட்ராமன் அமெரிக்க வர்த்தக மந்திரிக்கு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார விவகார துறையில் ஆலோசகராக உள்ளார்.

7. Amartya Kumar Sen, an Indian economist and Nobel Laureate has been recognised with this year’s Princess of Asturias award in the social sciences category by the Spanish foundation.

இந்திய பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் 1998-ல் நோபல் பரிசு வென்றார். இவருக்கு தற்போது ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதான ‘பிரின்சஸ் ஆப் ஆஸ்ட்ரியாஸ்’ விருது கிடைத்துள்ளது. சமூக அறிவியலுக்கான பிரிவில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஸ்பெயின் நாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

8. The Bharat Ratna Professor C.N.R. Rao has received the International Eni Award 2020 for research into renewable energy sources and energy storage, also called the Energy Frontier award. This is considered to be the Nobel Prize in Energy Research.

பாரத ரத்னா பெற்ற பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் அவர்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு பற்றிய ஆராய்ச்சிக்காக சர்வதேச எனி விருது 2020 வழங்கப்பட்டுள்ளது, இது எனர்ஜி ஃபிரண்டியர் விருது என்றும் அழைக்கப்படுகிறது. இது எரிசக்தி துறையின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.

9. The International Day of United Nations Peacekeepers is observed on May 29 annually. The 2021 Theme is “The road to a lasting peace: Leveraging the power of youth for peace and security.”

சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காப்போர் தினம் ஆண்டுதோறும் மே 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்கான 2021-ம் ஆண்டின் மையப்பொருள் “நீடித்த அமைதிக்கான பாதை: அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக இளைஞர்களின் சக்தியை மேம்படுத்துதல்.”

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the youngest member of the Indian Constituent Assembly?

T. Muthuswamy

C. Jambulingam

Salem Ramaswami

T.M. Kalliannan Gounder

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் இளைய உறுப்பினர் யார்?

டி.முத்துசாமி

சி.ஜம்புலிங்கம்

சேலம் ராமசாமி

டி.எம். காளியண்ணன் கவுண்டர்

2. Who heads the expert committee on Investment Funds constituted by IFSCA?

Amartya Sen

C.N.R. Rao

Arun Venkataraman

Nilesh Shah

IFSCA ஆல் அமைக்கப்பட்ட முதலீட்டு நிதிகள் குறித்த நிபுணர் குழுவிற்கு யார் தலைமை தாங்குகிறார்?

அமர்த்தியா சென்

சி.என்.ஆர். ராவ்

அருண் வெங்கடராமன்

நிலேஷ் ஷா

3. National Environmental Engineering Research Institute is located at

Delhi

Mumbai

Pune

Nagpur

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

டெல்லி

மும்பை

புனே

நாக்பூர்

4. ‘Saline Gargle RT-PCR Method’ was developed by

AMPRI

CMERI

CIMAP

NEERI

‘சலைன் கார்கில் ஆர்டி-பி.சி.ஆர் முறை’ எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?

AMPRI

CMERI

CIMAP

NEERI

5. Who recently received the Princess of Asturias award?

Amartya Sen

C.N.R. Rao

Arun Venkataraman

Nilesh Shah

அஸ்டுரியாஸ் பிரின்சஸ் விருதை சமீபத்தில் பெற்றவர் யார்?

அமர்த்தியா சென்

சி.என்.ஆர். ராவ்

அருண் வெங்கடராமன்

நிலேஷ் ஷா

6. Who received the International Eni Award 2020

Amartya Sen

C.N.R. Rao

Arun Venkataraman

Nilesh Shah

சர்வதேச எனி விருது 2020 ஐப் பெற்றவர் யார்?

அமர்த்தியா சென்

சி.என்.ஆர். ராவ்

அருண் வெங்கடராமன்

நிலேஷ் ஷா

7. Who has been recently appointed as the Director General of the United States and Foreign Commercial Service?

Amartya Sen

C.N.R. Rao

Arun Venkataraman

Nilesh Shah

அமெரிக்க வர்த்தக மந்திரிக்கு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார விவகார துறையில் ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?

அமர்த்தியா சென்

சி.என்.ஆர். ராவ்

அருண் வெங்கடராமன்

நிலேஷ் ஷா

8. The International Day of United Nations Peacekeepers is observed on

1. May 27

2. May 28

3. May 29

4. May 30

சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காப்போர் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 27

2. மே 28

3. மே 29

4. மே 30

         

DOWNLOAD  Current affairs -30 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us