TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 31 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.Honourable Chief Minister of Tamil Nadu, Thiru. M.K. Stalin launched the two new web portals of the Confederation of Real Estate Developers’ Associations of India (CREDAI) CREDAI365.com and CREDAI BuildMart365.com on July 30, 2021 at the Secretariat.
‘கிரெடாய்’ (இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு) சென்னை நிறுவனம் சார்பில் புதிய வீடு வாங்க விரும்புபவர்களுக்காக CREDAI365.com என்ற பெயரில் ஒரு இணையதளமும், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில்முனைவோர்களை ஒருங்கிணைப்பதற்காக CREDAIBuild Mart365.com என்ற பெயரில் மற்றொரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 இணையதளங்களின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் ஜூலை 30, 2021 அன்று தொடங்கி வைத்தார்.
2.Tamil Nadu DGP C Sylendra Babu on July 30, 2021 announced weekly off for all police personnel with immediate effect. Also, the police personnel shall be entitled to take leave on their birthday and wedding anniversary. Overtime duty allowance will be paid to those personnel who are on duty on the rest day, skipping their weekly off.
தமிழ்நாடு காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு தரப்பட வேண்டும் எனவும், காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். பணியில் ஈடுபடும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3.The Supreme Court on June 22 directed the Tamil Nadu State Election Commission to complete the delayed local bodies elections in nine new districts of the State by September 15. Following this, the State Election Commission took up the task of conducting the elections. As a part of this, the Tamil Nadu State Election Commission has directed the 9 District Collectors to take appropriate steps to appoint the Returning Officers and Assistant Returning Officers and to submit a report in this regard. Those 9 districts are Villupuram, Kallakurichi, Vellore, Ranipettai, Tirupati, Kanchipuram, Chengalpattu, Nellai and Tenkasi.
தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஜூன் 22 அன்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தேர்தலை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதுதொடர்பான அறிக்கையை அளிக்கவும் 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4.July 30, 2021 marks the 136th birthday of Dr. Muthulakshmi Reddy. She was born on the 30th of July 1886, in the princely state of Pudukkottai, now a town in Tamil Nadu. She was an eminent medical practitioner, social reformer and legislator. She is also the founder of the Adyar Cancer Institute.
ஜூலை 30, 2021-ம் தேதி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் 136 வது பிறந்தநாளைக் குறிக்கிறது. அவர் 1886 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானமானத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் நிறுவனரும் இவர் ஆவார்.
India
5.With an aim to further improve ease of doing business, the Government of India has launched the Secured Logistics Document Exchange (SLDE) along with a Calculator for GreenHouse Gas (GHG) Emissions for choosing the sustainable and right mode of transport for freight movements.
சரக்கு போக்குவரத்துக்கு நிலையான மற்றும் சரியான போக்குவரத்து முறையைத் தேர்ந்தெடுப்பதற்காக, பசுங்குடில் வாயுக்கள் (GHG) உமிழ்வு கணிப்பான் மற்றும் பாதுகாப்பான தளவாட ஆவணப் பரிமாற்றம் (SLDE) ஆகியவை இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளன. வணிகத்தை எளிதாக்குவதை இலக்காகக் கொண்டு இவை தொடங்கப்பட்டுள்ளன.
6.The Ministry of Social Justice and Empowerment has formulated a scheme, namely Information-Monitoring, Evaluation and Social Audit (I-MESA) in FY 2021-22. Under this scheme, Social Audits are to be conducted for all the schemes of the Department starting FY 2021-22. These social audits are done through Social Audit Units (SAU) of the States and National Institute for Rural Development and Panchayati Raj.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2021-22 நிதியாண்டில் தகவல்-கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் சமூக தணிக்கை (I-MESA) என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2021-22 நிதியாண்டு முதல் துறையின் அனைத்து திட்டங்களுக்கும் சமூக தணிக்கை நடத்தப்படவுள்ளது. இந்த சமூக தணிக்கைகள், மாநிலங்களின் சமூக தணிக்கை அலகுகள் (SAU) மற்றும் தேசிய கிராமப்புற மற்றும் பஞ்சாயத்து ராஜ் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செய்யப்படவுள்ளது.
International
7.Defence Minister Rajnath Singh attended the Defence Ministers’ Meeting of the Shanghai Cooperation Organisation (SCO) that took place in Dushanbe, Tajikistan.
தஜிகிஸ்தானின் துஷான்பேவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கலந்து கொண்டார்.
Days & Themes
8.In 2021, Earth Overshoot Day lands on July 29. Earth Overshoot Day marks the date when humanity has exhausted nature’s budget for the year.
2021-ம் ஆண்டில், பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் ஜூலை 29 ஆம் தேதி ஏற்படவுள்ளது. குறிப்பிட்ட வருடத்தில், இயற்கையின் மீதான மனிதகுலத்தின் வருடாந்திர தேவை பூமியால் மறுஉற்பத்தி செய்யும் திறனை மீறும் தினம் பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினமாகும்.
9.World Day Against Trafficking in Persons is observed every year on July 30 by the United Nations. This year’s theme for the World Day Against Trafficking in Persons is “Victims’ Voices Lead the Way”.
உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது. உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினத்திற்கான இந்த ஆண்டின் மையப்பொருள் “பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் வழிநடத்துகின்றன” ஆகும்.
10.International Friendship Day is celebrated annually on July 30. It has been observed by the United Nations since 2011.
பன்னாட்டு நட்பு தினம் ஆண்டுதோறும் ஜூலை 30 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2011 முதல் ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who launched the CREDAI365 web portal?
A.M.K. Stalin
B.V. Senthil Balaji
C.Rajakannappan
D.P. Moorthy
CREDAI365 இணையதளத்தை யார் தொடங்கிவைத்தார்?
A.மு.க. ஸ்டாலின்
B.வி.செந்தில் பாலாஜி
C.ராஜகண்ணப்பன்
D.பி.மூர்த்தி
2.The Supreme Court on June 22 directed the Tamil Nadu State Election Commission to complete the delayed local bodies elections by
A.August 15, 2021
B.August 30, 2021
C.September 1, 2021
D.September 15, 2021
உச்சநீதிமன்றம் ஜூன் 22 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு தாமதமான உள்ளாட்சி தேர்தலை எந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது?
A.ஆகஸ்ட் 15, 2021
B.ஆகஸ்ட் 30, 2021
C.செப்டம்பர் 1, 2021
D.செப்டம்பர் 15, 2021
3.Who is the founder of the Adyar Cancer Institute?
A.Annie Basant
B.Sarojini Naidu
C.Muthulakshmi Reddy
D.Moovalur Ramamirtham
அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் நிறுவனர் யார்?
A.அன்னி பெசன்ட்
B.சரோஜினி நாயுடு
C.முத்துலட்சுமி ரெட்டி
D.மூவலூர் ராமாமிர்தம்
4.In 2021, Earth Overshoot Day was observed on
A.July 28
B.July 29
C.July 30
D.July 31
2021-ம் ஆண்டில், பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
A.ஜூலை 28
B.ஜூலை 29
C.ஜூலை 30
D.ஜூலை 31
5.World Day Against Trafficking in Persons is observed every year on
A.July 28
B.July 29
C.July 30
D.July 31
உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
A.ஜூலை 28
B.ஜூலை 29
C.ஜூலை 30
D.ஜூலை 31
6.International Friendship Day is celebrated annually on
A.July 28
B.July 29
C.July 30
D.July 31
சர்வதேச நட்பு தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
A.ஜூலை 28
B.ஜூலை 29
C.ஜூலை 30
D.ஜூலை 31
7.Which ministry has formulated the I-MESA scheme?
A.Ministry of Health
B.Ministry of Education
C.Ministry of Sports
D.Ministry of Social Justice
எந்த அமைச்சகம் I-MESA திட்டத்தை உருவாக்கியுள்ளது?
A.சுகாதார அமைச்சகம்
B.கல்வி அமைச்சகம்
C.விளையாட்டு அமைச்சகம்
D.சமூக நீதி அமைச்சகம்
8.Dr. Muthulakshmi Reddy born in
A.Thiruvallur
B.Coimbatore
C.Pudukottai
D.Madurai
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பிறந்த ஊர்?
A.திருவள்ளூர்
B.கோயம்புத்தூர்
C.புதுக்கோட்டை
D.மதுரை
9.The Defence Ministers’ Meeting of the Shanghai Cooperation Organisation (SCO) recently took place in
A.Russia
B.Turkmenistan
C.Tajikistan
D.Uzbekistan
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் எங்கு நடந்தது?
A.ரஷ்யா
B.துர்க்மெனிஸ்தான்
C.தஜிகிஸ்தான்
D.உஸ்பெகிஸ்தான்
DOWNLOAD Current affairs -31 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF