TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 5 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.A first-of-its-kind shelter home for transmen and transwomen in Tamil Nadu has become operational at Periyar Nagar in Chennai. The shelter home is part of an initiative of the Union Ministry of Social Justice and Empowerment (MoSJE) called “Garima Greh” and will be run by Transgender Rights Association (TRA), a community based organisation.
தமிழ்நாட்டில் திருநர் மற்றும் திருநங்கைகளுக்கான முதல் தங்குமிடம் சென்னை பெரியார் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. “கரிமா கிரே” என அழைக்கப்படும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக (MoSJE) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இது திருநங்கைகள் உரிமைகள் சங்கம் (TRA) என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படவுள்ளது.
India
2.The Ministry of Education has launched NIPUN (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy) Bharat Scheme. It aims to cover the learning needs of children in the age group of 3 to 9 years. It is a part of NEP (National Education Policy), 2020.
ஒன்றிய கல்வி அமைச்சகம் NIPUN (தேசிய புரிதல் மற்றும் எண்ணறிவுடன் வாசிப்பு புலமை முயற்சி) பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 3 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேசிய கல்வி கொள்கை 2020 இன் ஒரு பகுதியாகும்.
3.Pushkar Singh Dhami sworn in as 11th Chief Minister of Uttarakhand.
புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் மாநிலத்தின் 11 வது முதலமைச்சராக பதவியேற்றார்.
4.Army chief General Manoj Naravane will inaugurate an Indian Army memorial in the Italian town of Cassino during an official visit.
இந்திய இராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நராவனே இத்தாலிய நகரமான காசினோவில் இந்திய ராணுவ நினைவுச்சின்னத்தை தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது திறந்து வைக்கவுள்ளார்.
5.Indian Council of Agricultural Research (ICAR) has developed an anti-methanogenic feed supplement ‘Harit Dhara’ (HD), which can cut down cattle methane emissions by 17-20% and can also result in higher milk production.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ‘ஹரித் தாரா’ (HD) என்கிற மீத்தனோஜெனிக் (மீத்தேன் ஆக்கிகள்) எதிர்ப்பு தீவனம் ஒன்றை உருவாக்கியுள்ளது, இதன்மூலம் கால்நடைகளின் மீத்தேன் உமிழ்வை 17-20% குறைக்க முடியும், மேலும் அதிக பால் உற்பத்தியும் ஏற்படும்.
International
6.The ‘Last Ice Area’ (LIA), located in the Arctic’s Ice north of Greenland, has started melting earlier than what the scientists had expected.
கிரீன்லாந்தின் வடக்கே ஆர்க்டிக்கடல் பனி அடுக்குகளில் அமைந்துள்ள ‘கடைசி பனி பரப்பு’ (LIA), விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே உருகத் தொடங்கியுள்ளது. இதனால், ஆர்டிக் கடல் பனி அடுக்குகள் சுருங்கி வருவதாக களத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கைக் கோள் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
7.The International Day of Cooperatives is celebrated across the world every year on the first Saturday of July. This year, it was observed on July 3. The theme for 2021 is “Rebuild better together”.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இது ஜூலை 3 அன்று அனுசரிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “ஒன்றாக சிறப்பாக மீண்டும் உருவாக்குதல்” ஆகும்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.“Garima Greh” is an initiative of
A.Ministry of Finance
B.Ministry of Education
C.Ministry of Health
D.Ministry of Social Justice
“கரிமா கிரே” என்பது எந்த அமைச்சகத்தின் முயற்சி?
A.நிதி அமைச்சகம்
B.கல்வி அமைச்சகம்
C.சுகாதார அமைச்சகம்
D.சமூக நீதி அமைச்சகம்
2.NIPUN Bharat Scheme was recently launched by
A.Ministry of Finance
B.Ministry of Education
C.Ministry of Health
D.Ministry of Social Justice
NIPUN பாரத் திட்டம் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?
A.நிதி அமைச்சகம்
B.கல்வி அமைச்சகம்
C.சுகாதார அமைச்சகம்
D.சமூக நீதி அமைச்சகம்
3.Who is the Chief Minister of Uttarakhand?
A.Manohar Lal Khattar
B.Amarinder Singh
C.Pushkar Singh Dhami
D.Jai Ram Thakur
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் யார்?
A.மனோகர் லால் கட்டர்
B.அமரீந்தர் சிங்
C.புஷ்கர் சிங் தாமி
D.ஜெய் ராம் தாக்கூர்
4.‘Harit Dhara’ (HD) was developed by
A.ICMR
B.CSIR
C.ICAR
D.DRDO
‘ஹரித் தாரா’ (HD) யாரால் உருவாக்கப்பட்டது?
A.ICMR
B.CSIR
C.ICAR
D.DRDO
5.The ‘Last Ice Area’ (LIA) is located in
A.Arctic Ocean
B.Antarctic Ocean
C.Pacific Ocean
D.Indian Ocean
‘கடைசி பனி பகுதி’ (LIA) எங்கு அமைந்துள்ளது?
A.ஆர்டிக் பெருங்கடல்
B.அண்டார்டிக் பெருங்கடல்
C.பசிபிக் பெருங்கடல்
D.இந்திய பெருங்கடல்
6.NIPUN Bharat Scheme is a part of
A.National Forest Policy, 1988
B.National Health Policy, 2017
C.National Education Policy, 2020
D.National Urban Transport Policy, 2006
NIPUN பாரத் திட்டம் எந்த கொள்கையின் ஒரு பகுதியாகும்?
A.தேசிய வனக் கொள்கை, 1988
B.தேசிய சுகாதார கொள்கை, 2017
C.தேசிய கல்வி கொள்கை, 2020
D.தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கை, 2006
7.In 2021, the International Day of Cooperatives was celebrated on
A.July 1
B.July 2
C.July 3
D.July 4
2021 ஆம் ஆண்டில், சர்வதேச கூட்டுறவு தினம் எந்த தேதியில் கொண்டாடப்பட்டது?
A.ஜூலை 1
B.ஜூலை 2
C.ஜூலை 3
D.ஜூலை 4
DOWNLOAD Current affairs -5 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF