TNPSC CURRENT AFFAIRS PDF – 8th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 8 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Chief Minister M.K. Stalin inaugurated the scheme of planting One Lakh Tree Saplings (sthala vriksham) at temple gardens (nandavanams) in connection with the death anniversary of Kalaignar Karunanidhi (August 7, 2021). He planted a sapling of the Nagalinga tree at the head office of the Hindu Religious and Charitable Endowments (HR and CE) Department in Nungambakkam. A Sthala Vriksha or Sthala Vruksham, is a monumental tree that is indigenous to every historical Hindu temple.

கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தல விருட்ச மரங்கள் நடும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ஒரு லட்சம் தலமரக் கன்றுகள் நடும் திட்டம் ஆகஸ்டு 7, 2021 அன்று தொடங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 1 லட்சம் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து நாகலிங்க மரக்கன்று ஒன்றை நட்டார். கோவில் தோன்றுவதற்கு முன்பே இருப்பதால் அம்மரம் தலமரம் என்று போற்றப்படுகிறது.

2.HR and CE Minister PK Sekar Babu on August 5, 2021 launched the ‘Annai Thamizhil Archanai’ scheme (worshipping the deity in Tamil) at Sri Kapaleeswarar temple in Mylapore. From August 6 onwards, the practice would be followed in 47 key temples across the State, and eventually, it is likely to be extended to 539 temples under the HR and CE department.

”அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற திட்டம் முதன் முறையாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலில் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்து வழிப்பட்டார். முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 539 கோவில்களில் “அன்னை தமிழில்” அர்ச்சனை விரிவு படுத்தப்பட உள்ளது.

3.The first budget of the State government headed by Chief Minister MK Stalin will be presented on August 13. This will be the Tamil Nadu government’s first e-budget. Additionally, the State’s first separate budget on Agriculture will be presented on August 14.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13, 2021 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் முதல் மின்னணு காகிதமில்லா நிதிநிலை அறிக்கை இதுவாகும். இதைத்தொடர்ந்து, வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை 14-ந் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

India

4.The Union Government has nominated Rekha Sharma as Chairperson of the National Commission for Women, for another term of three years or till the age of 65 years.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக திருமதி ரேகா சர்மா அவர்களை இன்னுமொரு மூன்று ஆண்டுங்களுக்கு ஒன்றிய அரசு நியமனம் செய்துள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கோ அல்லது 65 வயது ஆகும் வரையோ இந்த பொறுப்பை வகிப்பார்.

5.Vice President of India Venkaiah Naidu released Commemorative Postage Stamp on ‘Mananiya Chaman Lal’.

‘மாண்புமிகு சமன்லால்’ அவர்களின் நினைவு அஞ்சல் தலையை துணை குடியரசுத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவர்கள் வெளியிட்டுள்ளார்.

6.Union Minister for Social Justice and Empowerment Dr. Virendra Kumar has launched ‘PM-DAKSH’ Portal and ‘PM-DAKSH’ Mobile App, developed by the Ministry of Social Justice and Empowerment, in collaboration with NeGD, to make the skill development schemes accessible to the target groups.

பிரதமரின் தக்ஷ் தளம் மற்றும் பிரதமரின் தக்ஷ் கைப்பேசி செயலியை ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். தேசிய மின் ஆளுகை பிரிவுடன் (NeGD) இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்த தளமும், செயலியும் பின்தங்கியோர், பட்டியல் பிரிவினர் மற்றும் துப்புரவு தொழிலாளிகளுக்கு திறன் வளர்த்தல் திட்டங்களை கிடைக்க செய்யும்.

7.Every year August 7 is observed as National Handloom Day. It is celebrated annually to commemorate the Swadeshi Movement launched in 1905.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. 1905-ம் ஆண்டு இதே நாளில் தான் சுதேசி இயக்கம் தொடங்கியது.

Sports

8.Javelin thrower Neeraj Chopra won a Gold medal in men’s javelin throw at the Tokyo Olympics 2020 on August 7, 2021. With this, he has become the first Indian athlete to win gold in more than 120 years and India’s second ever individual Olympic gold medalist after shooter Abhinav Bindra, who bagged gold in Beijing 2008.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை படைத்திருக்கிறார். சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அதே போல தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார். முன்னதாக அபினவ் பிந்த்ரா 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

9.Wrestler Bajrang Punia won the bronze medal in the men’s freestyle 65 Kg category at the Tokyo Olympics 2020 on August 7, 2021. He defeated Kazakhstan’s Daulet Niyazbekov 8-0 in the bronze medal match.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரருடன் மோதினார். இப்போட்டியில், பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who inaugurated the scheme of planting One Lakh Tree Saplings at temple gardens?

A.Banwarilal Purohit

B.Thangam Thennarasu

C.M K Stalin

D.Sekar Babu

கோவில்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

A.பன்வாரிலால் புரோஹித்

B.தங்கம் தென்னரசு

C.மு.க. ஸ்டாலின்

D.சேகர் பாபு

2.Who launched the ‘Annai Thamizhil Archanai’ scheme?

A.Banwarilal Purohit

B.Thangam Thennarasu

C.M K Stalin

D.Sekar Babu

‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை தொடங்கி வைத்தது யார்?

A.பன்வாரிலால் புரோஹித்

B.தங்கம் தென்னரசு

C.மு.க. ஸ்டாலின்

D.சேகர் பாபு

3.Who is the Chairperson of the National Commission for Women?

A.Arun Kumar Mishra

B.Rekha Sharma

C.Virendra Kumar

D.Venkaiah Naidu

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் யார்?

A.அருண் குமார் மிஸ்ரா

B.ரேகா சர்மா

C.வீரேந்திர குமார்

D.வெங்கையா நாயுடு

4.Who released the Commemorative Postage Stamp on ‘Mananiya Chaman Lal’?

A.Arun Kumar Mishra

B.Rekha Sharma

C.Virendra Kumar

D.Venkaiah Naidu

‘மாண்புமிகு சமன்லால்’ நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டவர் யார்?

A.அருண் குமார் மிஸ்ரா

B.ரேகா சர்மா

C.வீரேந்திர குமார்

D.வெங்கையா நாயுடு

5.‘PM-DAKSH’ Mobile App was developed by

A.PESB

B.NPCI

C.NeGD

D.NIELIT

‘PM-DAKSH’ மொபைல் செயலியை எந்த அமைப்பு உருவாக்கியது?

A.PESB

B.NPCI

C.NeGD

D.NIELIT

6.National Handloom Day is observed every year on

A.August 1

B.August 5

C.August 7

D.August 9

தேசிய கைத்தறி தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

A.ஆகஸ்டு 1

B.ஆகஸ்டு 5

C.ஆகஸ்டு 7

D.ஆகஸ்டு 9

7.Who launched the ‘PM-DAKSH’ Mobile App?

A.Arun Kumar Mishra

B.Rekha Sharma

C.Virendra Kumar

D.Venkaiah Naidu

‘PM-DAKSH’ மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியவர் யார்?

A.அருண் குமார் மிஸ்ரா

B.ரேகா சர்மா

C.வீரேந்திர குமார்

D.வெங்கையா நாயுடு

8.Who won a Gold medal in men’s javelin throw at the Tokyo Olympics?

A.Sushil Kumar

B.Abhinav Bindra

C.Neeraj Chopra

D.Bajrang Punia

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

A.சுஷில் குமார்

B.அபினவ் பிந்த்ரா

C.நீரஜ் சோப்ரா

D.பஜ்ரங் புனியா

9.Who won the bronze medal in the men’s freestyle wrestling 65 Kg category at the Tokyo Olympic?

A.Sushil Kumar

B.Abhinav Bindra

C.Neeraj Chopra

D.Bajrang Punia

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யார்?

A.சுஷில் குமார்

B.அபினவ் பிந்த்ரா

C.நீரஜ் சோப்ரா

D.பஜ்ரங் புனியா

10.Who is India’s first individual Olympic gold medalist?

A.Sushil Kumar

B.Abhinav Bindra

C.Neeraj Chopra

D.Bajrang Punia

ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

A.சுஷில் குமார்

B.அபினவ் பிந்த்ரா

C.நீரஜ் சோப்ரா

D.பஜ்ரங் புனியா

DOWNLOAD  Current affairs -8 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: