TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 9 August 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC August Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.Tamil Nadu Agriculture and Farmers Welfare minister MRK Panneerselvam on August 8, 2021 interacted with farmers, agriculture scientists, experts in organic farming and scientists from Tamil Nadu Agricultural University in preparation of a separate budget for agriculture to be submitted on August 14.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாய அமைப்புகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சேப்பாக்கம் வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சி மற்றும் கட்சி சார்பற்ற விவசாய சங்க பிரதிநிதிகள், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
India
2.Union Minister of Culture G. Kishan Reddy inaugurated the exhibition on ‘Quit India Movement’ to mark the 79th anniversary of the movement (August 8, 2021) at National Archives of India in New Delhi as part of ‘Azadi Ka Amrit Mahotsav’ being celebrated to commemorate 75 years of Independence.
75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ‘ஆசாதி கா அமிரித் மஹோத்ஸவ்’ விழாவின் ஒரு பகுதியாக புதுடில்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ (ஆகஸ்டு 8, 1942) பற்றிய கண்காட்சியை ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அவர்கள் தொடங்கி வைத்தார்.
3.Minister of State (MoS) for Ministry of Petroleum & Natural Gas Rameswar Teli launched ONGC-supported Assam Handloom project ‘Ujjwal Abahan’ on 6th August 2021 through virtual platform. The project will support and train over a hundred artisans of Bhatiapar of Sivasagar, Assam in Hathkargha handicraft.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆதரவுடன் ‘உஜ்வால் அபஹான்’ என்ற கைத்தறி திட்டத்தை அசாம் மாநிலத்தில் ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கடந்த 6ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டம், அசாம் சிவசாகர் பாதியாபர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உதவும்.
4.Prime Minister Narendra Modi will chair the High-level Open Debate on ‘Enhancing Maritime Security – A Case for International Cooperation’ on 9th August via video conferencing. Narendra Modi would be the first Indian Prime Minister to preside over a UN Security Council Open Debate.
‘‘கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: பன்னாட்டு ஒத்துழைப்புக்கான விஷயம்’’ குறித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை திறந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 9ம் தேதி காணொலி காட்சி மூலம் தலைமை தாங்குகிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் திறந்த விவாதத்துக்கு தலைமை ஏற்கும் முதல் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.
5.The Union Cabinet Secretary Rajiv Gauba has been given a year’s extension in service beyond August 30 by the Government of India.
ஒன்றிய அரசின் அமைச்சரவை செயலாளராக உள்ள திரு ராஜீவ் கவ்பா அவர்களின் பணிக்காலம் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
6.The single dose Janssen COVID-19 Vaccine of Johnson and Johnson (J&J) was on August 7, 2021 given approval for Emergency Use Authorisation (EUA) in India, making it the fifth COVID vaccine to get clearance in the country.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் ‘ஜேன்சன்’ கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஐந்தாவது தடுப்பூசி இதுவாகும்.
7.The Ladakh administration has issued a notification to do away with the need for an inner line permit (ILP) for all Indian nationals, including domestic tourists, to visit the notified protected areas of the union territory.
உள்நாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட அனைத்து இந்திய குடிமக்களும் லடாக் ஒன்றிய பிரதேசத்தின் அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தேவையான ‘உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP)’ முறையை நீக்குவதாக லடாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
International
8.The Indian Navy took part in a bilateral naval exercise – Zayed Talwar 2021 – with the United Arab Emirates (UAE) Navy off the coast of Abu Dhabi on August 7, 2021.
ஆகஸ்ட் 7, 2021 அன்று அபுதாபி கடற்கரையில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கடற்படையுடன் இந்திய கடற்படை ‘சயத் தல்வார் 2021’ என்கிற இருதரப்பு கடற்படை பயிற்சியில் பங்கேற்றது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who is the Agriculture and Farmers Welfare minister of Tamil Nadu?
A.KKSR Ramachandran
B.PTR Palanivel Thiagarajan
C.MRK Panneerselvam
D.TRB Rajaa
தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் யார்?
A.கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன்
B.பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
C.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
D.டிஆர்பி ராஜா
2.‘Ujjwal Abahan’ was launched by
A.Virendra Kumar
B.Kishan Reddy
C.Rameswar Teli
D.Rajiv Gauba
‘உஜ்வால் அபஹான்’ திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?
A.வீரேந்திர குமார்
B.கிஷன் ரெட்டி
C.ராமேஸ்வர் தெலி
D.ராஜீவ் கவ்பா
3.The exhibition on ‘Quit India Movement’ was launched in
A.New Delhi
B.Chandigarh
C.Ladakh
D.Assam
வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டது?
A.புது தில்லி
B.சண்டிகர்
C.லடாக்
D.அசாம்
4.Who inaugurated the exhibition on ‘Quit India Movement’?
A.Virendra Kumar
B.Kishan Reddy
C.Rameswar Teli
D.Rajiv Gauba
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தவர் யார்?
A.வீரேந்திர குமார்
B.கிஷன் ரெட்டி
C.ராமேஸ்வர் தெலி
D.ராஜீவ் கவ்பா
5.Which Union Territory recently removed the need for an Inner Line Permit (ILP)?
A.New Delhi
B.Chandigarh
C.Ladakh
D.Assam
எந்த ஒன்றிய பிரதேசம் சமீபத்தில் உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP) தேவையை நீக்கியது?
A.புது தில்லி
B.சண்டிகர்
C.லடாக்
D.அசாம்
6.What is the name of COVID-19 Vaccine of Johnson and Johnson (J&J)?
A.Convedecia
B.Pfizer
C.Sputnik
D.Janssen
ஜான்சன் மற்றும் ஜான்சனின் (ஜே & ஜே) கோவிட் -19 தடுப்பூசியின் பெயர் என்ன?
A.கான்வெடீசியா
B.பைசர்
C.ஸ்புட்னிக்
D.ஜான்சன்
7.Who is the first Indian Prime Minister to preside over a UN Security Council Open Debate?
A.Jawaharlal Nehru
B.Lal Bahadur Shastri
C.Manmohan Singh
D.Narendra Modi
ஐநா பாதுகாப்பு கவுன்சில் திறந்த விவாதத்திற்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பிரதமர் யார்?
A.ஜவஹர்லால் நேரு
B.லால் பகதூர் சாஸ்திரி
C.மன்மோகன் சிங்
D.நரேந்திர மோடி
8.Who is the Cabinet Secretary of India?
A.Virendra Kumar
B.Kishan Reddy
C.Rameswar Teli
D.Rajiv Gauba
இந்தியாவின் அமைச்சரவை செயலாளர் யார்?
A.வீரேந்திர குமார்
B.கிஷன் ரெட்டி
C.ராமேஸ்வர் தெலி
D.ராஜீவ் கவ்பா
9.‘Ujjwal Abahan’ was launched in
A.New Delhi
B.Chandigarh
C.Ladakh
D.Assam
‘உஜ்வால் அபஹான்’ திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
A.புது தில்லி
B.சண்டிகர்
C.லடாக்
D.அசாம்
10.Zayed Talwar 2021 was conducted in
A.Dubai
B.Abu Dhabi
C.Cochin
D.Mumbai
சயத் தல்வார் 2021 எங்கு நடத்தப்பட்டது?
A.துபாய்
B.அபுதாபி
C.கொச்சின்
D.மும்பை
DOWNLOAD Current affairs -9 August- 2021 PDF
JULY MONTH FULL CURRENT AFFAIR PDF