CURRENT AFFAIRS –06 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
மே-6 நடப்பு நிகழ்வுகள்
1.இந்திய ரிசர்வ் வங்கி தகவலின் படி அதிக கடன் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் இடம்?
A.1
B.2
C.3
D.4
குறிப்பு-
- இந்திய ரிசர்வ் வங்கி தகவலின் படி அதிக கடன் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்று ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது.
- 2022 -23 நிதி ஆண்டில் ரூபாய் 68 ஆயிரம் கோடி தமிழ்நாடு பெற்றுள்ளது.
- ஆந்திரா -ரூபாய் 51860கோடி
- மகாராஷ்டிரா -ரூபாய் 50000 கோடி
2.மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கான பிரத்தியேக தொழில் பூங்கா அமைக்க எங்கே அடிக்கல் நாட்டப்பட்டது?
A.திண்டிவனம்
B.மயிலாடுதுறை C.ஒரகடம்
D.ஸ்ரீ பெரும்புதூர்
குறிப்பு-
- மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கான பிரத்தியேக தொழில் பூங்கா அமைக்க சிப்காட் வளாகம் திண்டிவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், 111 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 155 கோடி செலவில் அடிக்கல் நாட்டப்பட்டது
3.சமீபத்தில் எந்த மாநிலத்தில் புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது?
A.தமிழ்நாடு
B.ஆந்திரா
C.கேரளா
D.தெலுங்கானா
குறிப்பு-
- புதியதாக ஒரு லட்சம் பயனாளிர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
- இதன் மூலம் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் மொத்த எண்ணிக்கையில்8 லட்சம் உயர்கிறது.
- இந்த ஆண்டு நிதி அறிக்கையில் ரூபாய் 5346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4.இந்தோ ஆஸ்திரேலியா விருதினை பெற்றவர் யார்?
A.ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி
B.கர்நாடக நவாப் அப்துல் காதர்
C.பிஜாபூர் சுல்தான் இப்ராஹிம்
D.கோல்கொண்டா சுல்தான் மஸ்தான்
குறிப்பு-
- இந்தோ-ஆஸ்திரேலியா விருது மகத்தான சேவைக்கான வழங்கப்படுகிறது.
- இவ்விருதிணை பெற்றவர் ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி ஆவார்.
5.பொருளாதார சுதந்திர குறியீடு 2023ல் இந்தியாவின் இடம்?
A.130
B.131
C.132
D.134
குறிப்பு-
- அமெரிக்காவை சேர்ந்த தி ஹெரிடேஜ் பவுண்டேஷன் என்னும் சிந்தனைக்குழு நடத்திய பொருளாதார சுதந்திர குறியீடு – 2023ல் முதல் 3 இடங்கள் பெற்ற நாடு சிங்கப்பூர்,சுவிட்சர்லாந்து ,அயர்லாந்து ஆகும்.
- இந்தியாவின் இடம்- 131 வது இடம்
- கடைசி மூன்று இடங்கள் வடகொரியா, வெனிசுலா மற்றும் கியூபா
6.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?
A.புதுடெல்லி
B.கோவா
C.கொல்கத்தா
D.மும்பை
குறிப்பு-
- சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு கோவா மாநிலத்தின் பெநவ்லிம் நகரில் நடைபெற்றது.
7.இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் இந்திய சார்பாக பங்கேற்றவர் யார்?
A.மோடி
B.திரளபதி மூர்மு
C.ஜெகதீப் தன்கர்
D.ஜெயசங்கர்
குறிப்பு-
- இங்கிலாந்து மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின்,லண்டனில் உள்ள வேஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்றது.
- இதில் இந்திய சார்பாக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
8.சமீபத்தில் எந்த கிரிக்கெட் வீரர் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து உலக சாதனை படைத்துள்ளார்?
A.காசீம் ஆம்லா
B.பாபர் ஆசம்
C.ஆஷிக் முகமத்
D.முகமது ரஃபி
குறிப்பு-
- ஒரு நாள் கிரிக்கெட் அதிவேகமாக 5000 ரன்கள் கடந்து உலக சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஷம் படைத்துள்ளார்.
- இவர் 97 இன்னிங்ஸில் 5000 நாட்களில் நிறைவு செய்த 14வது பாகிஸ்தான் வீரர் ஆவார்
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 06 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.