TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –09 Jan 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Tamil Nadu
1.The State government has reversed its January 4 decision allowing 100% seating capacity in cinema halls. Instead, it said that cinema halls can hold extra shows.
மத்திய அரசு, மருத்துவர்கள், நீதிமன்றம் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வர, இப்போது தியேட்டர்களில் மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
2.The Governor Banwarilal Purohit has administered the oath of office to retired IAS officer M.Malik Feroze Khan as Ombudsman for local bodies in the State. Mr. Khan will hold the post for three years.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக மாலிக் பெரோஸ்கானுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்.
3.The Supreme Court has received a petition to review a December 8 decision giving the go ahead to the National Highway Authority of India (NHAI) and the Centre to acquire land for the construction of the 277.3 km long Chennai-Krishnagiri-Salem national highway project, worth over ₹10,000 crore.
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கிய வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் எட்டு வழிச்சாலையானது சென்னை – சேலம் இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாகும்.
India
4.The National Internet Exchange of India (NIXI) has announced that it will offer a free IDN (Internationalized Domain Name) in any of their preferred 22 official Indian language along with every IN domain booked by the registrant. Applicants will also get a free email in local language. This offer has been created to stimulate the adoption of भारत (IDN) domain name and proliferation of local language content.
இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை (NIXI) பதிவுசெய்தவர்களுக்கு ஒவ்வொரு IN டொமைனுடன் தங்களுக்கு விருப்பமான 22 இந்திய அட்டவணை மொழிகளில் இலவச ஐடிஎன் (சர்வதேசமயமாக்கப்பட்ட டொமைன் பெயர்) வழங்குவதாக அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியில் இலவச மின்னஞ்சலையும் பெறுவார்கள். இந்த சலுகையானது உள்ளூர் மொழிகளில் ‘டொமைன் பெயர் உள்ளடக்கத்தின்’ பெருக்கத்தை தூண்டுவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
5.The Union Minister for Information and Broadcasting Shri Prakash Javadekar has launched the Digital Calendar and Diary of Government of India.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்திய அரசின் டிஜிட்டல் காலண்டர் மற்றும் டைரியைத் வெளியிட்டார்.
6.The NTPC Ltd’s very first unit, which was commissioned 38 years ago at Singrauli in Uttar Pradesh, has achieved the highest Plant Load Factor (PLF) of 100.24% among all thermal units in the country between April 2020 to December 2020, data published by Central Electricity Authority (CEA) showed.
38 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேசத்தின் சிங்ராலியில் அமைக்கப்பட்ட என்.டி.பி.சி லிமிடெட் நிறுவனத்தின் முதல் உலை, ஏப்ரல் 2020 முதல் டிசம்பர் 2020 வரை நாட்டின் அனைத்து வெப்ப உலைகளை விடவும் 100.24% அளவு மிக உயர்ந்த உலை சுமை காரணியை (PLF) அடைந்துள்ளது என்று மத்திய மின்சார ஆணையம் (CIA) வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
7.The NCAVES India Forum 2021 is being organised by the Ministry of Statistics and Programme Implementation (MoSPI). The NCAVES Project, funded by EU, has been jointly implemented by the United Nations Statistics Division (UNSD), the United Nations Environment Programme (UNEP) and the Secretariat of the Convention of Biological Diversity (CBD). India is one of the five countries taking part in this project – the other countries being Brazil, China, South Africa and Mexico.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) NCAVES இந்தியா மன்றம் 2021 என்ற ஒன்றை நடத்துகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். மேலும், இது ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர பிரிவு (UNSD), ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டின் செயலகம் (CBD) ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்த திட்டத்தில் பங்கேற்கும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் – மற்ற நாடுகள் பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ.
International
8.Mumbai attack mastermind and Lashkar e Taiba operations commander Zakiur Rehman Lakhvi was sentenced to 15 years in jail by a Pakistani anti-terrorism court here in a terror financing case, amidst mounting international pressure on Islamabad to bring to justice terrorists roaming free in the country.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவரும், முக்கியக் குற்றவாளியுமான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்விக்கு, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லாகூர் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who is recently appointed as the Ombudsman for local bodies in Tamil Nadu?
Palaniswamy
Sanjib Banerjee
Malik Feroze Khan
Sathyabrata Sahoo
சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நடுவராக நியமிக்கப்பட்டவர் யார்?
பழனிசாமி
சஞ்சிப் பானர்ஜி
மாலிக் ஃபெரோஸ் கான்
சத்தியபிரதா சாஹூ
2.The Salem eight way project is between
Bangalore and Salem
Salem and Kanyakumari
Chennai and Salem
None of the above
சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் எந்த இடங்களுக்கு இடையேயானது?
பெங்களூரு மற்றும் சேலம்
சேலம் மற்றும் கன்னியாகுமரி
சென்னை மற்றும் சேலம்
மேற்கூறிய எதுவும் இல்லை
3.The Digital Calendar and Diary for 2021 is released by
Ministry of Statistics and Programme Implementation
Ministry of Information and Broadcasting
Ministry of Earth Sciences
Ministry of Science and Technology
2021 ஆண்டுக்கான டிஜிட்டல் காலண்டர் மற்றும் டைரி எந்த அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
பூமி அறிவியல் அமைச்சகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
4.The NCAVES India Forum 2021 is being organised by
Ministry of Statistics and Programme Implementation
Ministry of Information and Broadcasting
Ministry of Earth Sciences
Ministry of Science and Technology
NCAVES இந்தியா மன்றம் 2021 யாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது?
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
பூமி அறிவியல் அமைச்சகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
5.Zakiur Rehman Lakhvi belongs to
Jaish e Mohammed
Lashkar e Taiba
Hizbul Mujahideen
Taliban
ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்?
ஜெய்ஷ் இ முகமது
லஷ்கர் இ தைபா
ஹிஸ்புல் முஜாஹிதீன்
தலிபான்
6.The National Internet Exchange of India (NIXI) has announced that it will offer a free Internationalized Domain Name in
English
English and Hindi
22 Scheduled languages
None of the above
இந்தியாவின் தேசிய இணைய பரிவர்த்தனை (NIXI) இலவசமாக எந்த மொழியில் சர்வதேசமயமாக்கப்பட்ட டொமைன் பெயரை வழங்குவதாக அறிவித்துள்ளது?
ஆங்கிலம்
ஆங்கிலம் மற்றும் இந்தி
22 திட்டமிடப்பட்ட மொழிகள்
மேற்கூறிய எதுவும் இல்லை
7.Recently, Zakiur Rehman Lakhvi was recently sentenced by
Supreme Court of India
USA Court
Pakistan Court
International Criminal Court
சமீபத்தில், ஜாகிர் உர் ரஹ்மான் லக்விக்கு சமீபத்தில் எந்த நாட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது?
இந்திய உச்ச நீதிமன்றம்
அமெரிக்க நீதிமன்றம்
பாகிஸ்தான் நீதிமன்றம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
520 total views, 5 views today