TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –16th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –16 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

1.The Chief Minister Edappadi K. Palaniswami and Deputy Chief Minister O. Panneerselvam flagged off the world famous jallikattu event at Alanganallur in Madurai on January 16, amidst the COVID-19 pandemic.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை ஜனவரி 16 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

India

2.The Prime Minister Narendra Modi flagged off the first phase of the nationwide COVID-19 vaccination drive on January 16 during a video conference.The world’s largest vaccination programme began at a total of 3,006 sessionsites across all the States and the Union Territories. A dedicated 24×7 call centre—1075 — has been set up to address queries related to the pandemic and the vaccine rollout.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கமான இந்தியாவின் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை ஜனவரி 16 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் 1075என்ற ஹெல்ப்லைன் நம்பர் உருவாக்கப்பட்டுள்ளது.

3.The Union Minister for Road Transport & Highways Nitin Gadkari will inaugurate the Road Safety Month in New Delhi on January 18.

சாலை பாதுகாப்பு மாதத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி 18 அன்று புதுதில்லியில் துவக்கி வைக்கிறார்.

4.The Prarambh: Startup India International Summit is being organised by the Department for Promotion of Industry and Internal Trade of the Ministry of Commerce and Industry on January 15-16.

‘பிரராம்ப்: ஸ்டார்ட்அப் இந்தியா’ சர்வதேச உச்சி மாநாடு ஜனவரி 15-16 தேதிகளில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5.The Union Minister Rajnath Singh unveiled state-of-the-art ‘Driverless Metro Car’ for Mumbai Metropolitan Region Development Authority (MMRDA) at a function held at BEML’s Bangalore Complex on 15 January 2021. Indigenously designed & developed state-of-the-art Driverless Metro trains are being manufactured at BEML Bangalore Complex.

மும்பையில் இயக்குவதற்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். மும்பையில் இயக்குவதற்கான மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பொறுப்பை மத்திய அரசுக்குச் சொந்தமான பி.இ.எம்.எல் நிறுவனத்துக்கு மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் வழங்கியிருந்தது. தற்போது பி.இ.எம்.எல் நிறுவனம் மெட்ரோ ரயில்களைத் தயாரித்திருக்கிறது.

6.The Bihar’s first state-level bird festival ‘Kalrav’ has begun at the world famous Nagi-Nakti bird sanctuaries in the Jamui district from January 15. It is a three day festival.

பீகாரின் முதல் மாநில அளவிலான பறவை திருவிழா ‘கல்ராவ்’ ஜனவரி 15 முதல் ஜமுய் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நாகி-நக்தி பறவைகள் சரணாலயங்களில் தொடங்கியுள்ளது. இது மூன்று நாள் திருவிழாவாகும்.

International

7.The US President-elect Joe Biden has appointed Kashmiri-origin Indian-American and economic development expert Sameera Fazili as Deputy Director of National Economic Council.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக ஒரு சில நாட்களில் ஜோ பைடன் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட சமீரா ஃபசிலி என்ற இந்திய வம்சாவளி பெண்ணை வெள்ளை மாளிகையில் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிப்பதாக புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Chief Minister flagged off Alanganallur Jallikattu held on

January 15

January 16

January 17

January 18

முதலமைச்சரால் தொடங்கப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்று நடைபெற்றது?

ஜனவரி 15

ஜனவரி 16

ஜனவரி 17

ஜனவரி 18

2.A dedicated 24×7 call centre for COVID-19 vaccination drive is

1074

1075

1076

1077

COVID-19 தடுப்பூசி இயக்கத்திற்கான பிரத்யேக 24×7 அழைப்பு மையம் எது?

1074

1075

1076

1077

3.The Road Safety Month starts from

January 15

January 16

January 17

January 18

சாலை பாதுகாப்பு மாதம் என்று தொடங்குகிறது?

ஜனவரி 15

ஜனவரி 16

ஜனவரி 17

ஜனவரி 18

4.The Road Safety Month will be launched by

Ministry of Commerce and Industry

Ministry of Road Transport and Highways

Ministry of Home Affairs

Ministry of Health and Family Welfare

சாலை பாதுகாப்பு மாதம் என்று தொடங்கப்படவுள்ளது?

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகம்

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

5.The Prarambh is an International Summit for

Make in India

Startup India

Clean India

New India

‘பிரராம்ப்’ என்கிற சர்வதேச உச்சி மாநாடு எந்த திட்டத்திற்காக நடத்தப்படுகிறது?

மேக் இன் இந்தியா

ஸ்டார்ட்அப் இந்தியா

சுத்தமான இந்தியா

புதிய இந்தியா

6.The Prarambh International Summit is being organised by

Ministry of Commerce and Industry

Ministry of Road Transport and Highways

Ministry of Home Affairs

Ministry of Health and Family Welfare

‘பிரராம்ப்’ சர்வதேச உச்சி மாநாடு எந்த அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது?

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகம்

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

7.The term ‘Kalrav’, recently in news, is

Tribal festival

Animal festival

Bird festival

None of the above

சமீபத்தில் செய்திகளில் வந்த ‘கல்ரவ்’ என்பது

பழங்குடியினர் திருவிழா

விலங்கு திருவிழா

பறவை திருவிழா

மேற்கூறிய எதுவும் இல்லை

8.Which metropolitan recently got Driverless Metro Car?

Chennai

Mumbai

Kolkata

Cochin

எந்த பெருநகரத்திற்கு சமீபத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டது?

சென்னை

மும்பை

கொல்கத்தா

கொச்சி

                                                  DOWNLOAD  Current affairs -16 JAN- 2020 PDF


 551 total views,  6 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: