TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 19 MAY 2023

CURRENT AFFAIRS –19 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS

                            CURRENT AFFAIRS MAY -19

 

 

1.ஆறாவது இந்திய பெருங்கடல் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?

A.வங்காளதேசம்

B.இந்தியா

C.மியான்மர்

D.இலங்கை

குறிப்பு-

 • வங்கதேச நாட்டின் டாக்கா நகரில் ஆறாவது இந்திய பெருங்கடல் மாநாடு நடைபெற்றது இதில் இந்திய சார்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அவர்கள் பங்கேற்றார்.
 • 2016 ஆம் முதல் இந்திய பெருங்கடல் மாநாடு நடைபெறுகிறது.
 • முதல் இந்திய பெருங்கடல் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.
 • Theme-peace, property and partnership for a resilient future.
 1. The Indian metropolis: de constructing India’s urban spaces என்ற நூலின் ஆசிரியர் யார்?

A.ஃபெரோஸ் வருண் காந்தி

B. ராஜீவ் காந்தி

C.சோனியா காந்தி

D.பிரியங்கா காந்தி

குறிப்பு-

 • The Indian metropolis: de constructing India’s urban spaces என்ற நூலின் ஆசிரியர் ஃபெரோஸ் வருண் காந்தி ஆவார்.
 • வறுமை, சமத்துவமின்மை, குற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய புத்தகமாகும்.

3.இந்த ஆண்டின் ஜி 7 உச்சி மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது?

A.ஜப்பான்

B.பிரான்ஸ்

C.ஜெர்மனி

D.இத்தாலி

குறிப்பு-

 • இந்த ஆண்டின் ஜி 7 உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைப்பெறுகிறது.
 • கனடா ,பிரான்ஸ், ஜெர்மனி ,இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
 • இந்தியா ,தென் கொரியா, ஆஸ்திரேலியா ,பிரேசில் வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளன.

4.சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி எந்த நகரில் நடைபெற்றது?

A.புதுடெல்லி

B.சென்னை

C.மும்பை

D.கொல்கத்தா

குறிப்பு-

 • சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.இது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார்.
 • இந்தியா கேட் மற்றும் ரைஸ்னா கில்ஸ் இணைக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள கடமை பாதை பற்றிய பாக்கெட் வரைபடம் வெளியிடப்பட்டது.
 1. இல்லம் தேடி திருக்கோயில் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

A.தமிழ்நாடு

B.கேரளா

C.ஆந்திரா

D.தெலுங்கானா

குறிப்பு –

 • இல்லம் தேடி திருக்கோயில் பிரசாதம் வழங்கும் திட்டம் மற்றும் திருக்கோயில் செயலி ஆகியவற்றை தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
 • இந்து சமய அறநிலை துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திருக்கோயில் என்ற கைபேசி செயலில் உருவாக்கப்பட்டுள்ளது .
 • இச்செயலி ஆண்ட்ராய்டு வகை கைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
 • 48 முதுநிலை திருக்கோவில்களின் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு மத்திய அரசின் அஞ்சல் துறையுடன் இணைந்து அனுப்பு வைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

6.திருநெல்வேலியில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியகக் கட்டுமான பணி எத்தனை கோடியில் அமைக்கப்பட உள்ளது?

A.33.02

B.35.04

C.38.02

D.42.04

குறிப்பு-

 • திருநெல்வேலியில் ரூபாய்02 கோடியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமான பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
 • பாளையங்கோட்டை, குலவணிகர்புரம், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில்02 ஏக்கர் நிலத்தில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூபாய் 33.02 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
 • தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் இருந்து சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நகரமாக பொருநை ஆற்றங்கரையினை பெருமைப்படுத்தும் வகையில் உலக தரத்துடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
 1. ‘நகர்ப்புறங்கள் 20’ என்ற ஜி- 20 கூட்டமைப்பின் கூட்டம் எந்த நகரில் நடைபெற்றது?

A.இந்தூர்

B.போபால்

C.ராஞ்சி

D.புதுடெல்லி

குறிப்பு

 • மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூரில் ‘நகர்ப்புறங்கள் 20 ‘என்ற ஜி 20 கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
 • புதியதாக நாட்டில் தற்போது உள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வு காண புதியதாக எட்டு நகரங்களை உருவாக்குதல்.
 • நாட்டில் புதிய நகரங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என 15வது நிதி ஆணைய அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

8.சமீபத்தில்  அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகம் மற்றும் வான் இயற்பியல் மையம் விஞ்ஞானிகள் குழு உயிரினம் வாழும் சாத்தியங்களுடன் கூடிய பூமி அளவில்  கண்டுபிடித்துள்ள புதிய கிரகணத்தின் பெயர்?

A.எல்பி 791 – 18

B.எல்சி-81-92

C.எல்எல்-781-82

D.எல்சிஆர்-81-22

குறிப்பு-

 • சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள தென்பகுதி விண்மீன் தொகுப்பில் 90 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு கிரகம் சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தில் சுட்டி கொண்டிருப்பதை அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகம் மற்றும் வான் இயற்பியல் மைய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளார்.
 • இதற்கு எல் பி 791-18 என பெயரிடப்பட்டுள்ளது.
 • நாசாவின் டேஸ் என்ற ஆய்வு செயற்கைக்கோள் மூலம் இந்த கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 19 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us