CURRENT AFFAIRS –20 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS MAY-20
1.எந்த ஆண்டு காசநோயை முற்றிலும் ஒழிக்க இந்திய அரசானது இலக்கு நிர்ணயத்து உள்ளது?
A.2025
B.2030
C.2047
D.2050
குறிப்பு-
- உலக அளவில் காசநோய் நோயால் ஆண்டுதோறும் நான்கு கோடி பேர் பாதிக்கப்படுகின்றன அவர்களில் ஒரு கோடி பேர் இந்தியர்கள்.
- இந்திய அரசானது 2025 க்குள் காசநோய முற்றிலும் முடித்து விடுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
- இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்.
- இது நுரையீரலை பாதிக்கும்.
2.இந்தியா- பசிபிக் தீவுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு எங்கே நடைபெறுகிறது?
A. பப்புவா நியூ கினி
B.கீரிஸ்
C.ஜப்பான்
D.சீனா
குறிப்பு-
- வளந்த நாடுகளை உள்ளடக்கிய ஜீ 7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தொடங்கியது.
- இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
- இந்தியா பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு பப்புவா நியூ கினிக்கில் நடைபெறுகிறது.
3.எந்த ஆண்டு பிரதமர் பழைய ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறப்படும் என அறிவித்தார்?
A.Nov – 8 – 2016
B.Dec – 8 – 2016
C.Jan- 8 – 2016
D.April – 8 – 2016
குறிப்பு-
- 2016 நவம்பர் 8ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரிய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ .500 ரூ. 1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.
- புதியதாக முதன் முதலில் ரூ. 2000 நோட்டுகள் 2016 ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
- ரிசர்வ் வங்கிசட்டம் 24 (1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- பொருளாதாரத்தில் இதர மதிப்புகளில் கரன்சி நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காக ரூ. 2000 நோட்டுகள் அப்போது வெளியிடப்பட்டன.
- சமீபத்தில் RBI ஆனது ரூ. 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
4.உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் பணியிடங்களுக்கான எண்ணிக்கை?
A.34
B.32
C.31
D.30
குறிப்பு-
- உச்சநீதிமன்றத்தில் மொத்த 34 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. இதில் இரண்டு பணியிடங்களுக்கு காலியாக இருந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரசாத் குமார் மிஸ்ரா மற்றும் கே.வி விஸ்வநாதன் பதவி ஏற்று கொண்டனர்.
- இவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியான சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- இதில் ஆகஸ்ட்2030 இல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை விஸ்வநாதன் அவர்கள் பெறுவார்.
5.வக்க்ஷீர் நீர்மூழ்கிக் கப்பல் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது?
A.கொல்கத்தா கார்டன் ரிச் கப்பல் கட்டும் தளம்
B.மும்பை மசகான் கப்பல் கட்டும் தளம்
C.விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளம்
D.கொச்சி கப்பல் கட்டும் தளம்
குறிப்பு-
- ப்ராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்படை குழுமத்துடன் இணைந்து ஆறு கல்வாரி ரக நீர்மூழ்கி மொழிக்கு கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
- கல்வாரி ரக நீர்மூழ்கிய கப்பல்களில் இருந்து டார்பிடோ உட்பட பல வகையான ஏவுகணை ஏவ முடியும்.
- இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
6.எந்த நாள் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பாரத பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார்?
A.மே 28
B. மே 25
C.மே 23
D.மே 30
குறிப்பு-
- டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது.
- இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சென்டர் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் அமர இடவசதி செய்யப்பட்டுள்ளது.
- இதே போல் மாநிலங்களவையில் 300 எம்.பிகள் அமர வசதி உள்ளது இது அவை கூட்டு கூட்டம் நடத்தப்படாமல் 1280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையில் மக்களவை அரங்கில் வசதி செய்யப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தை டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டமைத்து வருகிறது.
- கீழ்க்கண்டவற்றில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மினி டைடல் பூங்காவில் தவறானதே தேர்ந்தெடுக்க
A.தூத்துக்குடி
B.சேலம்
C.தஞ்சாவூர்
D.கோவை
குறிப்பு-
- தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைட்டில் பூங்கா அமைப்பதற்காக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- அந்த மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
- ரயில் மதாத் ஒரு ___
A.இணைதளம்
B.தண்டவாள சீரமைப்பு
C.செயலி
D.தனியார் நிறுவனம்
குறிப்பு-
- தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் ரயில் மதாத் என்ற செயலி மூலம் 90963 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.
- 2021-22, இல் 31450 புகார்கள் பெறப்பட்டன. நிகழ் நிதி (மே 19 வரை) ஆண்டில் பெறப்பட்ட 14,4400 புகார்களில்97 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.
9.உலக கோப்பை வில்வித்தை 2- ம் நிலை போட்டி எந்த நாட்டில் நடைப்பெற்றது?
A.சீனா
B.ஜப்பான்
C.போலந்து
D.நியூசிலாந்து
குறிப்பு-
- சீனாவில் நடைபெறும் உலக கோப்பை வில்வித்தை இரண்டாம் நிலை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது.
10.உலக பாரா ரேங்கிங் வில் வித்தை போட்டி எந்த நாட்டின் நடைபெறுகிறது
A.செக் குடியரசு
B.ஆஸ்திரேலியா
C.சவுதி அரேபியா
D.கனடா
குறிப்பு-
- உலக பாரா ரேங்கிங் வில்வித்தை போட்டி செக் குடியரசு நாட்டில் நடைபெற்றது.
- இந்தியா காம்பவுண்ட் ஆடவர் அணி ஓபன் இரட்டையர் பிரிவில் தங்கமும், காம்பவுண்ட் மகளிர் அணி ஓபன் இரட்டை பிரிவில் வெண்கலமும் வென்றது.
- காம்பவுண்ட் ஓபன் மகளிர் தனிநபர் பிரிவில் ஷீத்தல் தேவி 139 -138 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் ஜெஸ்ஸிகா ஸ்ட்ரெட்டனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 20 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.