TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –21 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –21 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –21 Jan 2021

Tamil Nadu

 1. The Election Commission of India (ECI) has released the electoral roll for the upcoming assembly election in the state of Tamil Nadu. The total number of electorate in the state stands at 6.26 crore, out of which 3.18 crore eligible voters are women, 3.08 crore are men, while the number of transgender voters is 7200. With 6,94,845 electors, the Shozhinganallur Assembly constituency in Chengalpattu district has the highest number of eligible voters listed, according to the electoral rolls published. On the other hand, the lowest number of electors was seen at the Harbour Assembly constituency in Chennai with just 1,76,272 electors. District wise, Chennai district has the highest number of voters and Ariyalur district has the lowest number of voters.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது, இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6,26,74,446  வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம்  694845 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட துறைமுகம் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தமே 176272 பேர் மட்டுமே உள்ளனர். மாவட்ட வாரியாக பார்க்கும் பொழுது அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக சென்னை மாவட்டமும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டமும் உள்ளது.

India

 1. In the second edition of the India Innovation Index-2020 released by NITI Aayog, the States and Union Territories have been divided into 17 Major States, 10 North-East and Hill States and nine Union Territories and Small States for effectively comparing their performance. In the 2020 ranking, Karnataka retained its first position in the Major States category. Maharashtra moved one position higher and stood at 2nd spot while Tamil Nadu slid to 3rd position. In the North East and Hill States category, Himachal Pradesh stands at first position followed by Uttarakhand and Manipur. Delhi stands at the first position while Chandigarh retained its second spot in the Union Territories and small States category.

புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்து இந்திய மாநிலங்களின் செயல்பாட்டை நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு செய்து இந்தியா கண்டுபிடிப்பு குறியீடு -2020 இன் இரண்டாவது பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சிறந்த முறையில் ஒப்பிடுவதற்காக 17 முக்கிய மாநிலங்கள், 10 வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறு மாநிலங்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. முக்கிய மாநிலங்கள் பிரிவில் கர்நாடகா தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரா ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தில் உள்ளது, தமிழகம் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. வட கிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் பிரிவில், இமாச்சலப் பிரதேசம் முதல் இடத்திலும், உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகியவை அடுத்த இரண்டு இடங்களிலும் உள்ளன. யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறு மாநிலங்கள் பிரிவில் டெல்லி முதல் இடத்தையும், சண்டிகர் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

 1. The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) has unveiled a regulatory compliance portal that will act as a bridge for citizens, industries and the government to minimise burdensome compliances.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (DPIIT) இணக்கமான ஒழுங்குமுறை போர்ட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது, இது குடிமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் சுமையாக இருக்கும் இணக்கங்களைக் குறைக்க ஒரு பாலமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1. The Ministry of Road Transport & Highways (MoRTH) and Defence Research and Development Organisation (DRDO) have signed a framework Memorandum of Understanding (MoU) to strengthen collaboration in the field of technical exchange and co-operation on sustainable geo-hazard management.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆகியவை தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் நிலையான புவி-அபாய மேலாண்மை தொடர்பான ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

International

 1. Joe Biden was sworn-in as the 46th President of the United States of America on January 20. Kamala Devi Harris was sworn-in as the 49th Vice President of the United States of America. She is the first woman, African-American and Indian-American to become U.S. Vice-President.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அதேபோல் அமெரிக்காவின் 49 ஆவது துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் பதவியேற்றுக் கொண்டார். கமலா ஹாரிஸ் அவர்கள் துணை அதிபராகும் முதல் பெண், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார்.

 1. The 5th Defence Ministers’ Dialogue (DMD) between India and Singapore was successfully held on 20 January 2021 through a video conference.

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 5 வது பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடல் (DMD) 2021 ஜனவரி 20 அன்று இணைய வழியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 1. Which assembly constituency of Tamil Nadu has the lowest number of electors?

 1. Shozhinganallur

 2. Harbour

 3. T Nagar

 4. R.K.Nagar

தமிழ்நாட்டின் எந்த சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர்?

 1. சோழிங்கநல்லூர்

 2. துறைமுகம்

 3. டி நகர்

 4. ஆர்.கே.நகர்

 1. Which state or union territory is in second position in the Union Territories and small States category of the India Innovation Index-2020?

 1. Delhi

 2. Puducherry

 3. Chandigarh

 4. None of the above

இந்தியா கண்டுபிடிப்புக் குறியீடு -2020 இன் யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் பிரிவில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது?

 1. டெல்லி

 2. புதுச்சேரி

 3. சண்டிகர்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 1. Which department of Government of India has recently launched a regulatory compliance portal?

 1. Department of Commerce

 2. Department of Economic Affairs

 3. Department for Promotion of Industry and Internal Trade

 4. NITI Aayog

மத்திய அரசின் எந்த துறை சமீபத்தில் இணக்கமான ஒழுங்குமுறை போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியது?

 1. வணிகத் துறை

 2. பொருளாதார விவகாரங்கள் துறை

 3. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை

 4. நிதி ஆயோக்

 1. Which country conducted the 5th Defence Ministers’ Dialogue with India in January 2021?

 1. Indonesia

 2. Singapore

 3. Malaysia

 4. Japan

சமீபத்தில் இந்தியாவுடன் 5வது பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடலை நடத்திய நாடு எது?

 1. இந்தோனேசியா

 2. சிங்கப்பூர்

 3. மலேசியா

 4. ஜப்பான்

 1. With which organisation, the Ministry of Road Transport & Highways has signed an MOU for geo-hazard management?

 1. ISRO

 2. ICMR

 3. CSIR

 4. DRDO

எந்த அமைப்புடன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புவி-ஆபத்து மேலாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

 1. இஸ்ரோ

 2. ஐ.சி.எம்.ஆர்

 3. சி.எஸ்.ஐ.ஆர்

 4. டிஆர்டிஓ

 1. Which state is in first position in the Major States category of the India Innovation Index-2020?

 1. Tamil Nadu

 2. Maharashtra

 3. Karnataka

 4. None of the above

இந்தியா கண்டுபிடிப்பு குறியீடு -2020 இன் முக்கிய மாநிலங்கள் பிரிவில் எந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது?

 1. தமிழ்நாடு

 2. மகாராஷ்டிரா

 3. கர்நாடகா

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 1. Who is the first woman Vice-President of the United States of America?

 1. Hillary Clinton

 2. Kamala Harris

 3. Laura Bush

 4. None of the above

அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவர் யார்?

 1. ஹிலாரி கிளிண்டன்

 2. கமலா ஹாரிஸ்

 3. லாரா புஷ்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 1. Which assembly constituency of Tamil Nadu has the highest number of electors?

 1. Shozhinganallur

 2. Harbour

 3. T Nagar

 4. R.K.Nagar

தமிழகத்தின் எந்த சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்?

 1. சோழிங்கநல்லூர்

 2. துறைமுகம்

 3. டி நகர்

 4. ஆர்.கே.நகர்

1

2

3

4

5

6

7

8

B

C

C

B

D

C

B

A

 

 

 DOWNLOAD  January 21 Current affairs -21 JAN- 2020 PDF


 3,016 total views,  28 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: