CURRENT AFFAIRS –21 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS MAY – 21
1.குவாட் மாநாடு (நாற்கர கூட்டமைப்பு)-2023 எந்த நாட்டில் நடைபெற்றது?
A.ஜப்பான்
B.அமெரிக்கா
C.ஆஸ்திரேலியா
D.இந்தியா
குறிப்பு-
- அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன.
- இந்த அமைப்பு ஆசியாவின் NATO என அழைக்கப்படுகிறது குவாட் அமைப்பின் கூட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்தது.
- பின்னர் ஜப்பானின் ஹிரோஷிமாவிற்கு மாற்றப்பட்டது .
- இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ,இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உக்ரைன் விவகாரம், கிழக்கு- தெற்கு சீன கடல் விவகாரம், இந்தோ- பசிபிக் பிராந்திய கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது.
2.மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை எந்த நகரத்தில் திறக்கப்பட்டது?
A.டோக்கியோ
B.ஹீரோஷிமா
C.நாகசாகி
D.லண்டன்
குறிப்பு-
- ஹிரோஷிமாவின் அணுகுண்டு நினைவு சின்னத்துக்கு அருகில் இந்திய தேச தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சிலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
3.அடுத்த ஆண்டின் (2024)குவாட் கூட்டம் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
A.இந்தியா
B.அமெரிக்கா
C.ஜப்பான்
D.ஆஸ்திரேலியா
குறிப்பு-
- ஹிரோஷிமா நகரில் நடைபெறும் குவாட் அமைப்பின் கூட்டத்தில்
- அடுத்த ஆண்டின் (2024) குவாட் கூட்டம் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.
- ஜி 7 அமைப்பிற்கு ஜப்பானும் , ஜி-20 அமைப்பிற்கு இந்தியாவும் தலைமை ஏற்றுள்ளன.
- கிழக்கு- தெற்கு சீன கடல் விவகாரம், இந்தோ- பசிபிக் பிராந்திய கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது.
4.National anti terrorism day?
A.மே 21
B.மே 22
C.மே 23
D.மே 20
குறிப்பு —
- National anti terrorism day மே 21 ல் அனுசரிக்கப்படுகிறது.
- முந்தைய பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை (1991-May 21)ஓட்டி அனுசரிக்கப்படுகிறது.
5.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
A.2019
B.2020
C.2021
D.2023
குறிப்பு-
- மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இது ஒரு தனி நபருக்கு தினமும் 55 லிட்டர் தண்ணீர் கிடைக்க வழி வகை செய்கிறது.
- அது தூய்மையானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
- இந்தியாவில் பல மாநிலங்கள் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தி உள்ளன.சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏப்ரல் 21ஆம் தேதி -ஆட்சிப் பணிகள் துறை நாளை முன்னிட்டு இந்திய பிரதமரால் விருது வழங்கப்படுகிறது.
- இந்த ஆண்டில் தேனியும் காஞ்சிபுரமும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
6.NCCSA விரிவாக எழுதுக
A.National capital civil service authority
B.National civil co-ordinate service authority
C.National corporation code service association
D.National coordinate civil support authority
குறிப்பு-
- தேசிய தலைநகர் குடிமை பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார்.
- தேசிய தலைநகர் பிரதேச டெல்லி சட்டம் 1991 ஆம் ஆண்டு ஏற்றப்படுத்தப்பட்டதை திருத்தும் வகையிலும் குடிமை பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இந்த அவசர சட்டம் டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் ,அந்தமான் நிக்கோபார் ,லட்சத்தீவு, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களின் குடிமை பணி பிரிவை சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவாகரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
- International tea day?
A.மே 21
B.மே 22
C.மே 23
D.மே 24
குறிப்பு-
- International tea day மே 21 -ல் கொண்டாடப்படுகிறது.
- Theme- sip, share,and celebrate: unity through the essence of tea
8.அரபு லீக் அமைப்பின் 32 வது மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
A.சவுதி அரேபியா
B.துபாய்
C.சிரியா
D.ஐக்கிய அமீரகம்
குறிப்பு –
- அரபி லீக் அமைப்பின் 32 வது மாநாடு சவுதி அரேபியா நாட்டின் ஜட்டா நகரில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் 22 நாட்டின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி அழைக்கப்பட்டார்.
9.சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை இரண்டாம் நிலை போட்டியில் காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
A.பிரதமேஷ் ஜவகர்
B.ரமேஷ் பட்டேல்
C.நத்திங் சிங்
D.ஹெரன்டல் டோல்
குறிப்பு-
- சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை இரண்டாம் நிலை போட்டி -2023யில் காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் பிரதமேஷ் ஜவஹர் என்ற இந்திய வீரர் தங்க பதக்கம் வென்றார்.
- இது அவருக்கு கிடைத்த உலக கோப்பையின் முதல் தங்கம் ஆகும்.
- காம்பவுண்ட் மகளிர் தனிநபர் பிரிவில் அவ்னித் கெளர் வெண்கலம் பதக்கம் வென்றார்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 21 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.