TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –22 Jan 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Tamil Nadu
1.The Tamil Nadu Governor Banwarilal Purohit would take a decision “as per the Constitution” in the next three or four days on the State government’s recommendation to release convicts, including A.G. Perarivalan, undergoing life imprisonment for the assassination of former Prime Minister Rajiv Gandhi in 1991, Solicitor General Tushar Mehta informed the Supreme Court. The State Cabinet made its recommendation regarding all the seven convicts on September 9, 2018. The recommendation to remit their life sentences was advised by the Cabinet under Article 161 of the Constitution.
1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்காக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏ.ஜி.பேரறிவாளன் உள்ளிட்ட 7 குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் “அரசியலமைப்பின் படி” முடிவெடுப்பார் என அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஏழு குற்றவாளிகள் தொடர்பாக மாநில அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று தனது பரிந்துரையை வழங்கியது. அவர்களின் ஆயுள் தண்டனையை குறைப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் அமைச்சரவை அறிவுறுத்தியது.
India
2.In Ladakh, the Union Sports and Youth Affairs Minister Kiren Rijiju launched the first ever Khelo India Zanskar Winter Sports Festival at Padum in Zanskar of Kargil district. The 13-day festival is being organised by the Ladakh UT Administration to promote Zanskar as winter tourists’ destination.
லடாக்கில், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு முதல் கேலோ இந்தியா ஜான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழாவை கார்கில் மாவட்டத்தின் ஜான்ஸ்கரில் உள்ள பாதூமில் தொடங்கினார். ஜான்ஸ்கரை குளிர்கால சுற்றுலாப் பயணிகளின் இடமாக உயர்த்துவதற்காக லடாக் நிர்வாகத்தால் இந்த 13 நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3.India Science, Nation’s Science & Technology OTT (Over-the-top) channel has completed its second year of existence successfully on January 15th, 2021. Managed by Vigyan Prasar, an autonomous organization of the Department of Science & Technology, this channel was formally launched on January 15, 2019.
இந்தியா சயின்ஸ், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப OTT (ஓவர்-தி-டாப்) சேனல் 2021 ஜனவரி 15 ஆம் தேதி வெற்றிகரமாக அதன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஜனவரி 15, 2019 அன்று தொடங்கப்பட்ட இந்த சேனல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான விஞான் பிரசாரால் நிர்வகிக்கப்படுகிறது.
4.A large scale Joint Military exercise – Exercise Kavach involving assets of Indian Army, Indian Navy, Indian Air Force and Indian Coast Guard will be conducted in the coming week under the aegis of the Andaman and Nicobar Command.
ஒரு பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சி – இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் இணைந்து நடத்தும் கூட்டு பயிற்சி கவாச் வரும் வாரத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபாரில் நடத்தப்படுகிறது.
5.The Union Minister for Petroleum, Natural Gas and Steel Dharmendra Pradhan inaugurated the first small-scale LNG supply infrastructure of Shell Energy India at its LNG terminal at Hazira in Gujarat.
குஜராத்தின் ஹசிராவில் உள்ள எல்.என்.ஜி முனையத்தில் ‘ஷெல் எனர்ஜி இந்தியா’வின் முதல் சிறிய அளவிலான எல்.என்.ஜி விநியோக உள்கட்டமைப்பை மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்.
6.The States of Meghalaya, Manipur & Tripura celebrate their statehood day on January 21.
மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்கள் தங்கள் மாநில தினத்தை ஜனவரி 21 அன்று கொண்டாடுகின்றன.
International
7.On his first day in office on January 20, the USA President Joe Biden signed executive orders that returned the US to the Paris Agreement on climate crisis and the World Health Organization, and ended the Muslim travel ban, reversing some of his predecessor Donald Trump’s most controversial decisions.
ஜனவரி 20 அன்று அவர் பதவி ஏற்ற முதல் நாளிலேயே அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் ‘நிறைவேற்று ஆணை’களில் கையெழுத்திட்டார். இவை அமெரிக்காவை காலநிலை நெருக்கடிக்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்க மற்றும் உலக சுகாதார அமைப்பில் திரும்ப சேர, மேலும் முஸ்லீம்கள் பயண தடையை நீக்க என டிரம்பின் சர்ச்சைக்குரிய முடிவுகளை மாற்றியமைத்துள்ளன.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.The Statehood day of Manipur is
January 21
January 23
November 1
November 21
மணிப்பூரின் மாநில நாள் என்று?
ஜனவரி 21
ஜனவரி 23
நவம்பர் 1
நவம்பர் 21
2.The Military exercise Kavach is
A.Between India and France
B.Between India and USA
C.Between India and Japan
D.None of the above
கவாச் இராணுவப் பயிற்சி
A.இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலானது
B.இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலானது
C.இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலானது
D.மேற்கூறிய எதுவும் இல்லை
3.‘India Science’, recently in news, is a
Mobile App
Web Portal
OTT Platform
None of the above
அண்மையில் செய்திகளில் வந்த ‘இந்தியா சயின்ஸ்’ என்பது
மொபைல் பயன்பாடு
இணைய போர்ட்டல்
OTT இயங்குதளம்
மேற்கூறிய எதுவும் இல்லை
4.The first ever Khelo India Zanskar Winter Sports Festival is organised in
Jammu and Kashmir
Himachal Pradesh
Ladakh
Chandigarh
முதல் கேலோ இந்தியா ஜான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழா எங்கு நடக்கிறது?
ஜம்மு-காஷ்மீர்
இமாச்சல பிரதேசம்
லடாக்
சண்டிகர்
5.Vigyan Prasar is an autonomous organization of
A.Ministry of Earth Science
B.Ministry of Science & Technology
C.Ministry of Electronics and Information Technology
D.Prime Minister Office
விஞான் பிரசார் எதன் தன்னாட்சி அமைப்பு?
பூமி அறிவியல் அமைச்சகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பிரதமர் அலுவலகம்
6.Which state doesn’t have its statehood day on January 21?
Manipur
Tripura
Meghalaya
Nagaland
ஜனவரி 21 அன்று கீழ்காணும் எந்த மாநிலத்திற்கு அதன் மாநில நாள் இல்லை?
மணிப்பூர்
திரிபுரா
மேகாலயா
நாகலாந்து
7.The first small-scale LNG supply infrastructure of Shell Energy India was recently inaugurated in
Rajasthan
Tamil Nadu
Gujarat
Maharashtra
ஷெல் எனர்ஜி இந்தியாவின் முதல் சிறிய அளவிலான எல்.என்.ஜி விநியோக உள்கட்டமைப்பு சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
ராஜஸ்தான்
தமிழ்நாடு
குஜராத்
மகாராஷ்டிரா
DOWNLOAD
January 22 Current affairs -22 JAN- 2021 PDF
972 total views, 8 views today