CURRENT AFFAIRS –22 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS MAY – 22
1.சமீபத்தில் எந்த மாநிலம் ஊராட்சிகளில் இணைய வழியில் சொத்து வரி செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது?
A.தமிழ்நாடு
B.ஆந்திரா
C.கேரளா
D.தெலுங்கானா
குறிப்பு-
- 2022-23 ஆம் ஆண்டுக்கான ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் போது ஊரகப்பகுதிகளில் பொதுமக்கள் மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க தொழில் நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும்.
- கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
- இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் பயனாளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவை இணையதளத்தில் கிராம ஊராட்சிகளால் உள்ளீடு செய்யப்படுகிறது.
2.நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தின் திட்ட மதிப்பீடு எவ்வளவு?
A.615 கோடிகள்
B.805 கோடிகள்
C.913 கோடிகள்
D .712 கோடிகள்
குறிப்பு-
- நிலவின் தென் துருவத்தை ஆரய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் ஜூலை 12 விண்ணில் ஏவப்படுகிறது.
- சந்திராயன் – 3 திட்டத்தை சுமார் ரூபாய் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
- நிலவு பற்றிய ஆய்வுக்கு அவசியம் அதை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர், ரோவர் கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3.உலகத்தின் முதல் முறையாக மிக குறைந்த வயதில் குழந்தைக்கு சிறுநீரகங்கள் அடைப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை எது?
A.ராஜீவ் காந்தி மருத்துவமனை
B.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
C.பாண்டிச்சேரி மருத்துவமனை
D.ஸ்டான்லி மருத்துவமனை
குறிப்பு –
- உலகத்தின் முதல் முறையாக மிக குறைந்த வயதில் குழந்தைக்கு சிறுநீரகங்கள் அடைப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும்.
- பிறந்து மூன்று மாதங்கள் ஆன ஆண் குழந்தையின் இரு சிறுநீரகங்களிலும் ஏற்பட்டிருந்த அடைப்பு லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
4.சுற்றுலா தொடர்பான ஜி-20 பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் எங்கே நடைபெறுகிறது?
A.ஸ்ரீநகர்
B.சில்லாங்
C.டேராடூன்
D.டாமன் டையூ
குறிப்பு-
- சுற்றுலா தொடர்பான ஜி- 20 பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் ஸ்ரீ நகரில் உள்ள ஷேர் – இ – காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
- சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், இரண்டாவது கூட்டம் மேற்கு வங்காளத்தின் சிலிகுரியிலும் நடைபெற்றது.
- International day for biological diversity?
A.மே 12
B.மே 21
C.மே 22
D.மே 23
குறிப்பு-
- International day for biological diversity-மே 22 ல் கொண்டாடப்படுகிறது
- Theme-From agreement to action: build back biodiversity
6.நகர்ப்புற திட்டமிடங்களுக்கு ஒன்றிய அரசுக்கு உதவுவதற்காக தலைமைச் செயலர் தலைமையில் மாநில உயர்நிலக் குழுவை அமைத்த மாநிலம் எது?
A.தமிழ்நாடு
B.ஆந்திரா
C.தெலுங்கானா
D.பஞ்சாப்
குறிப்பு-
- நகர்ப்புற திட்டமிடங்களுக்கு ஒன்றிய அரசுக்கு உதவுவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில உயர்நிலைக் குழுவை அமைத்தது தமிழக அரசு.
- இது நகர்ப்புற கொள்கைகளை வகுக்க, திட்டமிட, செயல்படுத்த, நிர்வகிக்கவும் உதவுகிறது.
- ஒன்றிய அரசனது உலக வங்கியின் முன்னாள் இயக்குனர் கேசவ் வர்மா தலைமையில் நகர்ப்புற திட்டமிடல் தொடர்பாக குழுவினை அமைத்தது.
7.மூன்றாவது இந்திய- பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாடு எந்த நகரில் நடைபெறுகிறது?
A.போர்ட் மோர்ஸ்பி
B.போட் கிளஸ்டர்
C.போர்ட் தேவியன்ட்
D.போர்ட் லேயர்
குறிப்பு-
- மூன்றாவது இந்தியா- பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாடு பப்புவா நியூ கினியா நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பி நடைபெற்றது.
- பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே ,பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.
- இம்மாநாட்டின் போது பப்புவா நியூ கினியா நாட்டின் அலுவல் மொழியான டோக் பிசின் மொழியில் திருக்குறள் வெளியிடப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டு இந்திய -பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
- செய்கோ கோல்டன் கிராண்ட் ப்ரீ தடகள போட்டி -2023ல் எந்த நாட்டில் நடைபெற்றது?
A.ஜப்பான்
B.ஆஸ்திரேலியா
C.கனடா
D.நியூசிலாந்து
குறிப்பு-
- செய்கோ கோல்டன் கிராண்ட் ப்ரீ தடகள போட்டி 2023-ல் ஜப்பான் நாட்டில் நடைபெற்றது.
- நீளம் தாண்டுதலில்65 மீட்டரில் இந்தியாவை சேர்ந்த ஷாய்லி சிங் வெண்கலம் வென்றார்.
- சினியர் பிரிவில் பெற்ற முதல் பதக்கம் ஆகும்.
9.சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை வில்வித்தை 2ம் நிலை போட்டியில் இந்தியா பிடித்த இடம்?
A.2
B.3
C.4
D.5
குறிப்பு-
- சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை இரண்டாம் நிலைப் போட்டியில் இந்தியா, 2 தங்கம், 1 வெண்கலம் என மூன்று பதக்கங்களை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
- 11பதக்கங்களுடன் தென்கொரியா முதலிடம் பிடித்துள்ளது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 22 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.