CURRENT AFFAIRS –23 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS MAY – 23
1.பப்புவா நியூ கினியா ,பிஜி ஆகிய நாடுகளின் உயரிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A.மோடி
B.ஜெய்சங்கர்
C.நிர்மலா சீதாராமன்
D.அமிர்ஷா
குறிப்பு-
- பப்புவா நியூ கினியா ,பிஜி ஆகிய நாடுகளின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
- பப்புவா நியூ கினியாவில் இந்தியாவுக்கும் 14 பசுபிக் தீவு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான கூட்டத்திற்கு அவர் பங்கேற்றார்.
- இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.
- பப்புவா நியூ கினியாவின் உயரிய விருதான கிராண்ட் கம்பானியன் ஆப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹீ விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் பாப் டாடே வழங்கினார்.
- இது நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்த விருதை பெறுபவர்கள் சீஃப் என்று அழைக்கப்படுவார்கள்.
2.சர்வதேச இண்டாவது மின் வாகன கண்காட்சி எந்த நகரில் நடைபெறுகிறது?
A.சென்னை
B.மும்பை
C.கொல்கத்தா
D.போபால்
குறிப்பு-
- சர்வதேச இரண்டாவது மின் வாகன கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மே 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- ஜார்கண்ட் அரசின் ஆதரவுடன் இந்திய மின் வாகன தொழில் துறை வளர்ச்சியை விளக்கும் வகையில் நடைபெற உள்ள கண்காட்சிக்கு சர்வதேச இவி ஷோ-2023 என பெயரிடப்பட்டுள்ளது.
3.நிலப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது?
A.2002
B.2003
C.2006
D.2008
குறிப்பு-
- நில பதிவேடுகளை கணினி மயமாக்கும் பணி 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- ஆ பதிவேடு மற்றும் நகரம் நிலங்களுக்கான பதிவேடுகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
- நத்தம் நில வகைகளை கணினிமயமாக்கும் பணிகளை எளிதாக அந்த வகை நிலங்கள் இனி, ராயத்துவாரி மனை என ஒரே வகை பெயரிட்டு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
4.சுற்றுலாத் தொடர்பான ஜி-20 பணிக் குழுவின் மூன்றாவது கூட்டம் எந்த நகரில் நடைபெற்றது?
A.ஸ்ரீநகர்
B.டேராடூன்
C.ஷில்லாங்
D.சூரத்
குறிப்பு-
- சுற்றுலாத்துறை அமைச்சர் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்றது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- இதில், தேசிய சுற்றுலாக் கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
5.உலக கடல் ஆமை தினம்?
A.மே 21
B.மே 22
C.மே 23
D.மே 24
குறிப்பு-
- உலக கடல் ஆமை தினம் 23யில் கொண்டாடப்படுகிறது.
- Theme- guardians of the oceans
6.ஈட்டி எறிதல் பிரிவில் உலக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் யார்?
A.நீரஜ் சோப்ரா
B.யஷ்வீர் சிங்
C.சுசில்குமார்
D.ரோகித் யாதவ்
குறிப்பு –
- உலக தடகள அமைப்பின் ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஆவார்.
- இவர் தரவரிசை பட்டியலில் 1455 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
- 1433புள்ளிகளைப் பெற்று ஆண்டர்சன் பீட்டர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
7.உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி -2023 இந்தியாவில் எந்த நகரில் நடைபெறுகிறது?
A.சென்னை
B.மும்பை
C.கொல்கத்தா
D.புதுடெல்லி
குறிப்பு-
- உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி- 2023ல் சென்னை நகரில் நடைபெறுகிறது.
- சென்னையில் ஜூன் 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட ஒன்பது நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
- சர்வதேச ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் இணைந்து நடத்துகிறது.
8.சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டி -2023 எந்த நாட்டில் நடைபெறுகிறது?
A.நியூசிலாந்து
B.சுலோவேனியா
C.தாய்லாந்து
D.இந்தோனேஷியா
குறிப்பு-
- சர்வதேச சாலஞ்ச் பாட்மிண்டன் போட்டி -2023 யில் சுலோவேனியா நாட்டில் நடைபெற்றது.
- ஆடவர் ஒற்றை பிரிவில் சமீர் இந்தியாவை சேர்ந்த சமீர் வர்மா தங்க பதக்கத்தை வென்றார்.
9.பிரீமியர் லீக் கால்பந்து போட்டி-2023 எந்த நாட்டில் நடைபெறுகிறது?
A.இங்கிலாந்து
B.ஆஸ்திரேலியா
C.நியூசிலாந்து
D.அர்ஜென்டினா
குறிப்பு-
- பிரீமியர் லீக் கால்பந்து போட்டி-2023யில் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது.
- மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- இந்த அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும், ஒட்டு மொத்தமாக ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 23 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.