TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 25 MAY 2023

CURRENT AFFAIRS –25 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS                 

CURRENT AFFAIRS MAY – 25

1.ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவிடம் 1947 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புனித செங்கோல் எந்த கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளது?

A.புதிய நாடாளுமன்ற கட்டிடம்

B.பழைய நாடாளுமன்ற கட்டிடம்

C.கேபினட் அமைச்சரவை கட்டிடம்

D.குடியரசுத் தலைவர் மாளிகை

குறிப்பு-

  • ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புனித செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
  • இந்த செங்கோல் தமிழகத்தை சேர்ந்த திருவாடுதுறை ஆதீனத்தின் உதவியாளர்களால் தயாரிக்கப்பட்டது தற்போது உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நேரு அருங்காட்சியத்தில் இந்த செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த செங்கோல் முறை சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

 

2.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் யார்?

A.ராஜா

B.வைத்தியநாதன்

C.சுங்கப்பூர்வா

D.சுவாமிநாதன்

குறிப்பு-

  • சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்புத் தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு  உத்தரவிட்டுள்ளார்.
  • சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தளபதி நீதிபதியாக இருந்த ராஜா ஓய்வு பெற்றதை அடுத்து நியமனம்.

 

3.தமிழக அரசானது எந்த ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது?

A. 2030

B. 2025

C. 2047

D. 2050

குறிப்பு-

  • தமிழக அரசானது 2030 ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இதன் இடையே சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் அங்குள்ள நிறுவனங்களுடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
  • சிங்கப்பூர் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதல்வர் தாய்மொழியாம் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கும் நாடு சிங்கப்பூர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

  1. கலைஞர் கருணாநிதி பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணியை ஒருங்கிணைக்க தமிழக அரசானது சிறப்பு அதிகாரியாக யாரை நியமனம் செய்தது?

A.விஸ்வநாதன்

B.பூமிநாதன்

C.ராமநாதன்

D.மேகநாதன்

குறிப்பு –

  • கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் கட்டுமான பணி ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைவர் விஸ்வநாதன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • நினைவிடங்கள் நினைவுச்சங்கள் சின்னங்கள் கட்டுமான பணிகள் போன்றவற்றுடன் தில்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளையும் கண்காணிப்பார்.

 

5.எந்த நகரில் ஆஸ்திரேலியாவின் 5வது துணைத் தூதரகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்?

A.போபால்

B.ஹைதராபாத்

C.பெங்களூர்

D.அமராவதி

குறிப்பு-

  • பெங்களூரில் ஆஸ்திரேலியாவின் 5வது துணைத் தூதரகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்போனேசி அறிவித்துள்ளார்.
  • டெல்லியில் ஆஸ்திரேலியா தூதரகமும் ,சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய நகரங்களில் துணைத் தூதரகமும் ஏற்கனவே செயல்படும் நிலையில் பெங்களூரில் நாட்டின் ஐந்தாவது தூதரக அலுவலகம் அமைய உள்ளது.

 

6.சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீக் குவான் யூவுக்கு எந்த இடத்தில் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்?

A.மணப்பாறை

B.மன்னார்குடி

C.சிவகிரி

D.ராஜபாளையம்

குறிப்பு-

  • சிங்கப்பூரின் தந்தை எனப் போற்றப்படும் லீக் குவான் யூவுக்கு தமிழகத்தின் மன்னார்குடி சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
  • சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் அதன் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்.
  • சிங்கப்பூர் தமிழ் சங்கங்களுடன் இணைந்து தமிழ் கலை பண்பாடு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் வேர்களை தேடி என்னும் அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 

7.பணவீக்கம் எத்தனை சதவீதம் கூறிய வாய்ப்பு உள்ளது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்?

A.4.7%

B.5.7%

C.6.2%

D.6.8%

குறிப்பு-

  • பணவீக்கம்7 சதவீதத்திற்கு கீழ் ஒரு குறைய வாய்ப்புள்ளது என்று வங்கி ஆளுநர் சத்தி காந்தத் தாஸ் தெரிவித்தனர் .
  • இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
  • நிகழ் நிதியாண்டில் இந்தியாவால்5% பொருளாதார வளர்ச்சி காண முடியும் .

 

  1. சாட் – ஜிபிடி செயலியை உருவாக்கியவர் யார்?

A.சாம் ஆல்ட்மேன்

B.ஆல்பர்ட் ஜோன்ஸ்

C.வில்லியம் கில்பர்ட்

D.ஆல்பர்ட் கிங்ஸ்

குறிப்பு-

  • சாட் ஜிபிடி செயலியை உருவாக்கியவர் ஓபன் ஏஜ் நிறுவனத் தலைவர் சாம் ஆல்ட்மேன் ஆவார்.
  • செயற்கை நுண்ணறிவு ஒரு வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் ஏற்படும் பாதகங்களிலிருந்து பயனர்களை காப்பதற்காக சட்ட பிரிவு புதிய எண்ம இந்திய சட்டத்தில் இடம் பெறவுள்ளன என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

 

9.சர்வதேச தடகளப் போட்டி எந்த நகரில் நடைபெறுகிறது?

A.கீரிஸ்

B.லண்டன்

C பாரிஸ்

D.ஜெனிவா

குறிப்பு-

  • கீரிஸில் நடைபெறும் சர்வதேச தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் வென்று (8.18 மீ) பட்டத்தை தக்க வைத்துள்ளார்.
  • ஜெஸ்வின் ஆல்ட்ரின் வெள்ளி (7.85 மீ) பெற்றுள்ளார்.

                                                                      

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 25 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: