CURRENT AFFAIRS –26 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS MAY – 26
1.எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் எங்கே நடைபெறுகிறது?
A.டேராடூன்
B.ஸ்ரீநகர்
C.ஜம்மு- காஷ்மீர்
D.புதுடெல்லி
குறிப்பு-
- எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெறுகிறது.
- சுகாதாரம் ,திறன் மேம்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றம் பற்றிய விவாதிக்கப்பட்டது.
- கருப்பொருள்-வளர்ந்த பாரதம் 2047:இந்தியர்களின் பங்களிப்பு.
- பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
2.சமீபத்தில் எந்த மாநிலத்தின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கல் செய்யப்பட்டது?
A.உத்திரபிரதேசம்
B.உத்தரகாண்ட்
C.மத்திய பிரதேசம்
D.ராஜஸ்தான்
குறிப்பு –
- சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கல் செய்யப்பட்டது.
- டெல்லி முதல் டேராடூன் (உத்தரகாண்ட் )வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பாரத பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
- இது உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையாகும்.
3.நாட்டிலே முதல்முறையாக தொழில் முனைவவோர்களை ஊக்குவிக்க தொழில்நுட்ப மையம் எந்த நகரில் அமைந்துள்ளது?
A.சென்னை
B.மும்பை
C.புதுடெல்லி
D.கொல்கத்தா
குறிப்பு –
- நாட்டிலே முதல்முறையாக புதுமை முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், தொழில்நுட்ப முனைவவோர்களை ஊக்குவிக்கவும் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்தவும் உதவும் தொழில்நுட்ப மையம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.
- இது ரூபாய்61 கோடி மதிப்பீட்டில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.
4.மோச்சா புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டிற்கு உதவும் இந்தியாவின் நடவடிக்கை பெயர்?
A.வருணா நடவடிக்கை
B.கருணா நடவடிக்கை
C.பிரம்மபுத்திர நடவடிக்கை
D.வடகிழக்கு நடவடிக்கை
குறிப்பு –
- மோச்சா புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டிற்கு உதவும் இந்தியாவின் நடவடிக்கைக்கு கருணா நடவடிக்கை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
5.76 வது உலக சுகாதார சபை கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?
A.சுவிட்சர்லாந்து
B.நியூசிலாந்து
C.அமெரிக்கா
D.போலந்து
குறிப்பு-
- 76வது உலக சுகாதார சபை கூட்டம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது.
- கருப்பொருள்-75 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு:உயிர்களை காப்பாற்றுதல் அனைவருக்குமான ஆரோக்கிய நலன்களை கொண்டு சேர்த்தல்
- இந்திய சார்பில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்.
6.எந்த தினத்தை உலக நீடித்த மற்றும் நிலையான போக்குவரத்து தினம் என்று ஐ.நா பொது சபை அறிவித்துள்ளது?
A.மே 26
B.ஜூன் 26
C.ஆகஸ்ட் 26
D.நவம்பர் 26
குறிப்பு-
- நவம்பர் 26 ஐ உலக நீடித்த மற்றும் நிலையான போக்குவரத்து தினம் என்று ஐநா பொது சபை அறிவித்துள்ளது.
- நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தினை பயன்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
- சமீபத்தில் சோழர்களின் வரலாற்றைக் கூறும் ஓலைச்சுவடி எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
A.திருச்செந்தூர்
B.திருப்பரங்குன்றம்
C.பிள்ளையார்பட்டி
D.ஆதிச்சநல்லூர்
குறிப்பு-
- சமீபத்தில் சோழர்களின் வரலாற்றைக் கூறும் ஓலைச்சுவடி திருச்செந்தூர் அருகே ஆறுமுகனேரியில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இதுவும் மிகவும் அரிதான ஓலைச்சுவடி என்று பேராசிரியர் கூறினார்கள்.
- ஆதிபூர்வீக மண்டல காட்டு இராசவாகிய மூலப்புலிக்கொடி யோன் பூர்வீக வரலாறு சுவடி ஆகும்.
- இதில் குறிப்பிட்ட வரலாறுகள் நிகழ்ந்த காலம் கிபி 11 முதல் 18 நூற்றாண்டு வரை ஆகும்.
8.சமீபத்தில் எந்த நாடு முதல் வர்த்தக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது?
A.தென் கொரியா
C.வட கொரியா
D.தென் ஆப்பிரிக்கா
D.வட ஆப்பிரிக்கா
குறிப்பு-
- உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நூரி ராக்கெட் மூலம் வர்த்தக செயற்கைக்கோளை ஒன்றை தென்கொரியா முதல் முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
- தென்கொரியாவின் தெற்கு பகுதி தீவு ஒன்றிலிருந்து எட்டு செயற்கைக்கோள்களுடன் நூரி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
9.பஹ்ரைனின் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்திய பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை?
A.26
B.23
C.18
D.15
குறிப்பு –
- பஹ்ரைனின் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்திய பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 23 ஆகும்.
- இந்திய வீரர்கள் இரண்டு தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் பெற்று உள்ளனர்.
10.இத்தாலி கோப்பை கால்பந்து போட்டி-2023யில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி எது?
A.இன்டர்மில்டன்
B.ஃபியோரெண்டினா
C.டிரைவரிக் டெக்னா
D.பாசிடெல்டன்
குறிப்பு-
- இத்தாலி கோப்பை கால்பந்து போட்டி-2023யில் சாம்பியன் பட்டத்தை இன்டர்மில்டன் அணி வென்றது.
- இந்த அணி 9வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
- ஃபியோரெண்டினா அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 26 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.