CURRENT AFFAIRS –31 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
மே – 31 நடப்பு நிகழ்வுகள்
1.தமிழகத்தில் ரத்த அழுத்தம் மானிட்டர் உற்பத்தி செய்ய ஜப்பானின் எந்த நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
A.ஓம்ரான் ஹெல்கேர் நிறுவனம்
B.ஜிம்ரான் ஹெல்கேர் நிறுவனம்
C.கேர்டைட்டான் ஹெல்கேர் நிறுவனம்
D.ஓசாகி ஹெல்கேர் நிறுவனம்
குறிப்பு-
- தமிழகத்தில் ரத்த அழுத்தம் மானிட்டர் உற்பத்தி செய்ய ஜப்பானின் ஓம்ரான் ஹெல்கேர் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- இதன் மூலம் ரூபாய் 128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கப்படும்.
- இந்த நிறுவனம் டிஜிட்டல் ரத்த அழுத்தம் மானிட்டர்கள், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது
2.அரசு நிர்வாகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டுவர எந்த நாட்டுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
A.மலேசியா
B.அமெரிக்கா
C.ஜப்பான்
D.சிங்கப்பூர்
குறிப்பு-
- அரசு நிர்வாகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டுவர ஜப்பான் நாட்டுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- துறைமுக கண்காணிப்பு, தொழிற்சாலை மேலாண்மை, ரயில் போக்குவரத்து, மேலாண்மை தொடர்பு மற்றும் சாலை போக்குவரத்து மேலாண்மைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்வு காண்கிறது.
3.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கழற்சி அடிப்படையில் தலைமை பொறுப்பை 2022 செப்டம்பர் ஏற்ற நாடு எது?
A.சீனா
B.இந்தியா
C.ரஷ்யா
D.பாகிஸ்தான்
குறிப்பு-
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கழற்சி அடிப்படையில் தலைமை பொறுப்பை 2022 செப்டம்பர் ஏற்ற நாடு இந்தியாவாகும்.
- உச்சி மாநாட்டில் பார்வையாளராக உள்ள ஈரான் , பெலாரஸ், மங்கோலியா ,சிறப்பு விருந்தினரான துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
4.உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்?
A.மே 30
B.மே 31
C.ஜூன் 1
D.ஜூன் 2
குறிப்பு-
- ஆண்டுத் தோறும் உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 இல் அனுசரிக்கப்படுகிறது
- Theme-we need food, not tobacco
5.18 ஆவது காலாண்டு தொழிலாளர் கணக்கெடுப்பின்படி வேலைவாய்ப்பின் விகிதம் எத்தனை சதவீதம் குறைவு?
A.6.8%
B.8.6%
C.7.2%
D.6.5%
குறிப்பு-
- 18 ஆவது காலாண்டு தொழிலாளர் கணக்கெடுப்பின்படி வேலைவாய்ப்பின் விகிதம்8 சதவீதம் குறைவாகும்.
- இது ஆண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின் விகிதம்
- பெண்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பின்மை விகிதம்
- தொழிலாளர் பங்கேற்பு விகிதம்
- பணியாளர் மக்கள் தொகை விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.ராணுவம் சாராத வரை முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பிய நாடு எது?
A.சீனா
B.ஜப்பான்
C.அமெரிக்கா
D.வடகொரியா
குறிப்பு-
- ராணுவம் சாராத வரை முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பிய நாடு சீனா ஆகும்.
- ஷென்ஷி – 16 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டது
7.ரஷ்யா அமெரிக்காவுக்கு பிறகு சொந்த முயற்சியில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய மூன்றாவது நாடு எது?
A.கனடா
B.ஐரோப்பிய யூனியன்
C.இங்கிலாந்து
D.சீனா
குறிப்பு-
- ரஷ்ய அமெரிக்காவுக்கு பிறகு சொந்த முயற்சியில் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.
- குய்ஹாய்சாவ்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராணுவத்தை சாராத முதல் சீனராவார்.
8.ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை எத்தனை முறை வென்றுள்ளது?
A.5
B.6
C.4
D.3
குறிப்பு-
- ஐபிஎல் அரியணையில் ஐந்தாம் முறையாக அமர்ந்திருக்கிறது அரிமா அடையாளம் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூபாய் 20கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சாம்பியன் கோப்பையில் இதுவரை சாம்பியன் ஆன அணிகளின் பெயர்களோடு யத்ர ப்ரதிபா அவசரா ப்ராப்னோதி என்ற சமஸ்கிருத வார்த்தைகள் ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். திறமைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடம் என்பதே அதன் பொருளாகும்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 31 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.