CTET 2018 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 22-ம் தேதியில் தொடங்க இருந்த நிலையில், விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. அதில், `நிர்வாக காரணங்களுக்காக சி.டி.இ.டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதிவுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.