திருக்குறள் 25 அதிகாரம் அன்புடைமை

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம்

அன்புடைமை

பொதுத் தமிழ்  பகுதியில் பகுதி ஆ.  1. திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள்தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்புபண்புகல்விகேள்விஅறிவுஅடக்கம்ஒழுக்கம்பொறைநட்புவாய்மைகாலம்வலிஒப்புரவறிதல்செய்நன்றிசான்றாண்மை பெரியாரைத் துணைக் கோடல்பொருள்செயல்வகைவினைத்திட்பம்இனியவை கூறல்ஊக்கமுடைமைஈகைதெரிந்து செயல்வகைஇன்னா செய்யாமைகூடா நட்புஉழவு… போன்ற  25 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

 

இந்த பகுதியில் திருக்குறள் அன்புடைமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

 

 

 

TNPSC GROUP 2  PREVIOUS YEAR QUESTION PDF

TNPSC Group 4 Last 6 Years Old Question Papers

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

TNPSC Group 2/2A- STUDY MATERIALS

பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

 

 

அன்புடைமை

 

 1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

 

பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்பு கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.

 

 

 1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

 

பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது எண்ணுவர் அன்பு உடையவரோ தம் உடல்பொருள்ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

 

 

 1. அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு

 

பொருள்: உடம்போமு உயிர் இமைந்து இருப்பதைப் போலவாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.

 

 

 1. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

 

பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.

 

 

 1. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு

 

பொருள்: அந்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர். 

 

 

 1. அறத்திற்கே அன்புசார் என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

 

பொருள்: அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர் வீரத்திற்கும் அன்புதான் துணை. 

 

 

 

 1. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்

 

பொருள்: எலும்பில்லாத உயரிகளை வெயில் வருத்தி அழிப்பதுபோலஅன்பில்லாத உயரிகளை அறம் வருத்தி அழிக்கும். 

 

 

 1. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று

 

பொருள்: பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோலநெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது. 

 

 

 1. புறத்துறப்பு எல்லாம் எவனசெய்யும் யாக்கை

அகத்துறப்பு அன்பி லவர்க்கு

 

பொருள்: நெஞ்சில் அன்பு இல்லாதவர்குகைகால் போன்ற உடல் உருப்புகளால் என்ன பயன்? 

 

 1. அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

 

பொருள்: அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம் அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான். அங்கு உயிர் இல்லை.

பொதுத் தமிழ் திருக்குறள் அன்புடைமை அதிகாரம் PDF

  


பொதுத் தமிழ் திருக்குறள் 25 அதிகாரம் PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: