காமன்வெல்த் 2018 முழு பார்வை
Common Wealth Games – 2018
இந்த பக்கத்தில் காமன் வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள்(Current Affairs) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. போட்டிகள் பற்றிய முழு தகவல் மற்றும் தங்க பதக்கங்கள் பெற்றவர்கள் பற்றிய முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு (For All Exams Like TNPSC, RRB Exams, TET, Police SI ) பயன்படும். இதனை பயன்படுத்தி போட்டி தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள்.
காமன்வெல்த் என்றால் தமிழில் பொதுநலவாயம்
53 உறுப்பினர் நாடுகள்
முதலில் நடந்தது 1930
நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும்.
எத்தனையாவது காமன்வெல்த் போட்டி ..
21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி
மேலும் காமன்வெல்த் போட்டிகள் பற்றிய பகுதிகள்
காமன்வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள்
பகுதி- 1 படிக்க : Part 1-Click Here
பகுதி- 2 படிக்க : Part 2-Click Here
பகுதி- 3 படிக்க : Part 3-Click Here
எங்கே ?
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகர்
எப்போது ?
ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கியது.
தொடக்க நாளில் இந்திய கொடியை ஏந்தி நின்றவர் (flag-bearer)
பிவி சிந்து
முடிவு 15 -ந்தேதி
இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
எத்தனை நாட்கள் :
11 நாட்களாக நடைபெற்றது
இந்திய பிடித்த இடம் :
இந்தியாவுக்கு 3-வது இடம்
இந்திய அனுப்பிய வீரர்கள்
227-வீரர்கள்
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை
66 பதக்கம்
விபரம் :
26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம்
ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.
முதல் இடம் :
ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் ஆக மொத்தம் 198 பதக்கங்களை குவித்து முதல் இடத்தை பிடித்தது.
இரண்டாம் இடம் :
இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் ஆக மொத்தம் 136 பதக்கம் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
மொத்தமாக கலந்து கொண்ட நாடுகள்
71 நாடுகள்
Gold Coast 2018 – Commonwealth Games
2014-ம் ஆண்டு காமன்வெல்த் ஒரு பார்வை :
ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட இந்த ஆண்டு இந்தியா சிறந்த நிலையை எட்டியுள்ளது .
அதாவது 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று 5-வது இடத்தை பிடித்து இருந்தது.
ஆனால் இப்போது அதிகமான தங்கப்பதக்கத்தை குவித்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.
2022 – ம் ஆண்டு காமன்வெல்த் ஒரு பார்வை :
2022-ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டியை நடத்த தென்னாப்பிரிக்க நாட்டின் டர்பன் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 27 July and 7 August 2022.
தங்க பதக்கம் வென்றவர்கள் முழு விவரம் :
1. சாய்னா நேவால் – மகளிர்கான பேட்மிண்டன்
மகளிர்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி. சிந்துவை எதிர்த்து களம் இறங்கினார். இந்த போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார். தோல்வியடைந்த பி.வி.சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
2. பூனம் யாதவ்
மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார்
3 . கலப்பு இந்திய பேட்மிண்டன் அணி
கலப்பு இந்திய பேட்மிண்டன் அணி மலேசியாவை 3-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
அஷ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி ஜோடி முதன் முதலாக தங்கப்பதக்கத்தை வென்றது.
4. மனு பகேர்
மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
5. ஜித்துராய்
இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்
6. ஹீனா சித்து
இந்தியாவின் ஹீனா சித்து 25 மீ பிஸ்டல் பிரிவில் இன்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் . (ஏற்கனவே 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றிருந்தவர் )
7. ஆண்கள் டேபிள் டென்னிஸ்
இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. (தமிழக வீரர்கள் சரத்கமல், அமல்ராஜ், சத்யன்)
8. ஷ்ரேயாசி சிங்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி சிங் தங்கப்பதக்கம் வென்றார்
9. சுஷில் குமார்
மல்யுத்தத்தில் இந்திய வீரர் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுதில் குமார், தென்ஆப்ரிக்க வீரர் ஜொகன்னஸ் போத்தாவை எதிர்கொண்டார்.
10. தேஜஸ்வினி சவாந்த்
50 மீ ரைபிள் �����ெண்கள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சவாந்த் தங்கப் பதக்கம் வென்றார்
11. அனிஷ் பன்வாலா
ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்
12. மேரி கோம்
மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இவர் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 என வீழ்த்தினார்.
13. சஞ்சீவ் ராஜ்புட்
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப்பதக்கம் வென்றார்.
14. கவுரவ் சொலாங்கி
ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீரர் பிரண்டன் இர்வினை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
15. சுமித் மாலிக்
ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் இறுதிப்போட்டியில் நைஜீரியாவின் சினிவீ போல்டிக்கை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் நைஜீரியா வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
16. நீரஜ் சோப்ரா
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் 86.47 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஹமிஷ் பீகாக் பிடித்தார்.
17. வினேஷ் போகத்
மகளிருக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடாவின் ஜெசிக்கா மெக்டொனால்டை வீழ்த்தினார்.
18. மணிகா பத்ரா
மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பத்ரா தங்கம் வென்றார்
19. விகாஸ் கிரிஷன்
ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கேமரூன் வீரரை தோற்கடித்தார்.
20. மீராபாய் சாய்கோம் சானு
இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த பளு தூக்கும் வீராங்கனை :
காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு, பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றார்.
21. பஜ்ரங் புனியா
ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்
22. ராகுல் அவேர்
ஆண்கள் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ராகுல் அவேர் தங்கம் வென்றார்
23. வெங்கட் ராகுல் ரகாலா
ஆண்கள் பளுதூக்குதல் பிரிவில் வெங்கட் ராகுல் ரகாலா தங்கம் வென்றார். 85 கிலோ பளுதூக்குதல் பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார்
24. சதீஷ் சிவலிங்கம்
ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
25. சஞ்சிதா சானு
மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
26. பெண்கள் டேபிள் டென்னிஸ்
இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கத்தை வென்றது.
மேலும் காமன்வெல்த் போட்டிகள் பற்றிய பகுதிகள்
காமன்வெல்த் போட்டிகள் பற்றிய நடப்பு நிகழ்வுகள்
பகுதி- 1 படிக்க : Part 1-Click Here
பகுதி- 2 படிக்க : Part 2-Click Here
பகுதி- 3 படிக்க : Part 3-Click Here
மேலே உள்ள தகவல்களை (Current Affairs) பயன்படுத்தி போட்டி தேர்வில் வெல்ல வாழ்த்துக்கள்.