Daily Current Affairs – April 01
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 01
உலக அளவிலான செய்தி :
ஆஸ்திரேலியா மகளிர் அணி சாம்பியன் பட்டம் – டி20 கிரிக்கெட் தொடர்
டி20 கிரிக்கெட் தொடரில் (The Champions League Twenty20 Cricket) ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கலந்து கொண்ட நாடுகள் : இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
தொடர் : முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்
இடம் : மும்பையில் நடைபெற்று வந்தது.
இறுதிச் சுற்று : இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
சாம்பியன் : ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இயற்கைஎரிவாயு (எல்என்ஜி) அமெரிக்காவிலிருந்து இறக்குமதி
திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி – Liquefied Natural Gas (LNG) ) இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இறக்குமதி செய்யப்பட்ட இடம் : மகாராஷ்டிர மாநிலம் தபோல் மின்னுற்பத்தி நிலையம் .
திரவ எரிபொருளில் இயங்கும் மிகப்பெரிய மின்னுற்பத்தி ஆலை இதுவாகும்.
அமெரிக்க நிறுவனத்துடன் 20 ஆண்டுகளுக்கு கெயில் ஒப்பந்தம் செய்துள்ளது
வடகொரியா அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும்.
வடகொரியா( North Korea ) டோக்யோ மற்றும் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும்.
2020 மற்றும் 2022 இல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்குபெறும் என்று சர்வேதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்தார்.
இந்திய செய்திகள் :
இஸ்ரோ நிறுவனம் ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் தகவல் தொடர்பை இழந்தது
ஆயுட்காலம் :
ஜிசாட் 6 ஏ (GSAT-6A – ISRO) செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் ஆகும்.
இடம் நாள் :
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மார்ச் 29 அன்று, ஜிஎஸ்எல்விஎஃப் 8 (GSLV F08) ராக்கெட் மூலம் ஜிசாட் 6 ஏ விண்ணில் செலுத்தப்பட்டது
இஸ்ரோ செயற்கைகோளுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது.
கோனார்க் சூரியக் கோயிலில் உலகத்தரம் வாய்ந்த விளக்க மையம்
கட்டடக் கலையில் மிக சிறப்பாக இருக்கும் கோனார்க் சூரியக் கோயிலில் உலகத்தரம் வாய்ந்த விளக்க மையம் மற்றும் சுற்றுலா வசதிகளை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
கோனார்க் சூரியக் கோயில் அமைந்துள்ள இடம் : ஒடிஷா மாநிலம்
கலம்காரி அருங்காட்சியகம் – ஆந்திரா
ஆந்திராவில் கலம்காரி கலைஅருங்காட்சியகத்தைத் தொடங்க பட்டது .
இந்த கலை பெத்தண்ணா என்னும் இடத்தில் 1970 லிருந்து வளர்ந்து வருகிறது.
ஏப்ரல் 1 இல் மாபெரும் உணவு பூங்கா – ராஜஸ்தான்
திருமதி ஹர்சிம்ரம்ட்கவுர் (மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர்) க்ரீண்டெக் மெகா புட் பார்க் (Greentech Mega Food Park) என்னும் மாபெரும் உணவு பூங்காவை இல் தொடங்கிவைத்தார்.
இடம் : அஜ்மீர் – ராஜஸ்தான்
பயன்பெறுவோர் : விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
யூரோ 6 பெட்ரோல் டீசல் அறிமுகம் – புதுதில்லி
நாள் : ஏப்ரல் 1 முதல்
காற்று மாசுபடுதலை தவிர்க்க யூரோ 6 பெட்ரோல் டீசல் அறிமுகமாகியது
யூரோ 4லிருந்து நேரடியாக யூரோ 6 வகைக்கு மாறும் முதல் இடம் தில்லி ஆகும்.
ஏப்ரல் 2020லிருந்து இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படும் .
April Month – Daily and Important Current Affairs are given in this page. Prepare well for the upcoming exams.
We will update the daily current affairs for the upcoming dates.
Download Daily Current Affairs (2018-April-1)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.