ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டம்
பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் மறுவாழ்வுக்காக, மத்திய அரசின் ‘குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டம்’ – மிஷன் வாத்சல்யாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகள்/யூனியன் பிரதேச அரசுகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக நிதியுதவி, மானியம், ஆலோசனைகள், பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. திட்டத்தை அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்துகின்றன.
பால் சுவராஜ் தளத்தில் 2022 ஜனவரி 11 அன்று உள்ள தரவுகளின்படி நாடு முழுவதும் 5401 குழந்தைகள் தங்களது குடும்பங்களுடன் சாலையோரங்களில் வசிக்கின்றனர், 4148 குழந்தைகள் பகலில் சாலையோரம் தங்கி இரவில் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு அவர்களது குடும்பங்களுடன் திரும்புகின்றனர், 396 குழந்தைகள் ஆதரவின்றி சாலையோரங்களில் தனியாக வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 9945 ஆகும்.
பால் சுவராஜ் தளத்தில் 2022 ஜனவரி 11 படி உள்ள தரவுகளின் படி தமிழ்நாட்டில் 134 குழந்தைகள் தங்களது குடும்பங்களுடன் சாலையோரங்களில் வசிக்கின்றனர், 43 குழந்தைகள் பகலில் சாலையோரம் தங்கி இரவில் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு அவர்களது குடும்பங்களுடன் திரும்புகின்றனர், 14 குழந்தைகள் ஆதரவின்றி சாலையோரங்களில் தனியாக வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆகும்.