உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) பதவியேற்றுக் கொண்டார்ர். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித் 74 நாட்களுக்கு மட்டுமே இந்தப் பதவியை வகிப்பார். அத்துடன் அவருக்கு 65 வயதாவதால் அவர் ஓய்வு பெறுவார்.

முன்னதாக நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பிரிவு உபச்சார விழாவில் பேசிய யு.யு.லலித், “என்.வி.ரமணா தனது பதவிக்காலத்தில் பல்வேறு புரட்சிகளை செய்துள்ளார். அவரது செயல்பாட்டை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல. அவர் விட்டுச் சென்ற புரட்சியால் அடுத்து அப்பதவிக்கும் வரும் என் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றம் செயல்படும் நேரத்தை சற்று முன் கூட்டியே மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுபோல் நீதி விசாரணைக்காக வழக்குகளை பட்டியலிடுவதில் வழக்கின் தன்மைக்கு ஏற்ப முன்னுரிமை அளித்தல், அவற்றை வெளிப்படைத்தன்மையை அமல்படுத்த விரும்புகிறேன். அதேபோல் உச்ச நீதிமன்றத்தில் ஆண்டு முழுவதும் ஒரு அரசியல் சாசன அமர்வு செயல்படும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் யு.யு.லலித் இன்று உச்ச நீதிமன்றத்தில் 49வது நீதிபதியாக பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித், 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். 1985 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த அவர், 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி ஆனார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us