சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்

ஊழலின் நச்சுத்தன்மையை எடுத்துரைக்கவும், ஊழலுக்கு எதிரான உணர்வை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஊழலின் கறைபடியாமல் களங்கமற்ற மனிதர்களாக வாழ்க்கை வாழும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும். சர்வதேச அளவில் ஊழலை தடுக்க ஐ.நா. அமைப்பு 2003-ல் ஊழலுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதனடிப்படையில் ஊழல் எதிர்ப்பு நாள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: