பிரமோஸ் BrahMos
பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.
இதன் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை ஆகும். இது மக் 2.5-2.8 வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.
ஹைலைட்ஸ்:
- இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரிக்கும் ஏவுகணை பிரம்மோஸ்.
- கடலோரப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏவுகணை.
- ரூ. 2782 கோடிக்கு இதை வாங்க பிலிப்பைன்ஸ் ஆர்டர் கொடுத்துள்ளது.இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ரூ. 2782 கோடி அளவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரிக்கும் அதி நவீன ஏவுகணைதான் பிரம்மோஸ். இந்த ஏவுகணையை கடலோரப் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். தரையிலிருந்து மட்டுமல்லாமல், கப்பல்கள், விமானத்திலிருந்தும் கூட இந்த ஏவுகணையை செலுத்த முடியும். உலகிலேயே மிகவும் அதி வேகமான ஏவுகணைகளில் பிரம்மோஸும் ஒன்று என்பது முக்கியமானது.
இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனமும் ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையைத் தயாரிக்கின்றன. ரஷ்யாவின் பி 800 ஏவுகணையை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிரம்மோஸ். பிரம்மோஸ் என்ற பெயர் வந்ததும் கூட சுவாரஸ்யமானதுதான். இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்க்வா ஆகிய இரு நதிகளின் பெயர்களையும் இணைத்துத்தான் பிரம்மோஸ் என்ற பெயரை உருவாக்கினர்.
இந்த பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு தற்போது பிலிப்பைன்ஸ் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 2782 கோடி அளவுக்கு இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் கடலோரப் பாதுகாப்புக்காக பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குகிறது பிலிப்பைன்ஸ்.
பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா ஏற்கனவே பல்வேறு முக்கியப் பகுதிகளில் நிலை நிறுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாடு பகுதியான லடாக்கிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் இந்தியா நிறுத்தியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.