பி.என்.பணிக்கர்
இந்தியாவின் “நூலக இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் பி.என்.பணிக்கர், புத்தக வாசிப்பின் மதிப்பை பறைசாற்றும் வகையில் கேரளாவில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று சுமார் 6,000 நூலகங்களை திருவிதாங்கூர் நூலகச் சங்கத்திற்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர்.
1909-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தார். இந்தியாவின் “நூலக இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
1945-ல் 47 கிராமப்புற நூலகங்களுடன் திருவிதாங்கூர் கிரந்தசாலா சங்கம் (திருவிதாங்கூர் நூலக சங்கம்) உருவாவதற்கு தலைமை தாங்கினார்.
1956 -ம் ஆண்டில் கேரளா கிரந்தசாலா சங்கமாக (KGS) மாறிய இச்சங்கம், 1975-ம் ஆண்டு யுனெஸ்கோவின் “கிருப்சகாயா விருதை” வென்றது. புத்தக வாசிப்பின் மதிப்பை பறைசாற்றும் வகையில் கேரளாவில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று சுமார் 6,000 நூலகங்களை இந்த அமைப்பிற்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றார்.
1995-ம் ஆண்டு ஜூன், 19-ம் தேதி காலமானார். இத்தினம், கேரளாவில், “வயனாதினமாக ” (வாசிப்பு நாளாக) கொண்டாடப்படுகிறது.
2017-ம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி, வாசிப்பு மாதத்தைத் தொடங்கி வைத்த போது, P.N.பணிக்கரைப் பாராட்டினார்.
மேலும் அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது “வான்சே குஜராத்” (குஜராத் படிக்கிறது) என்ற பெயரில் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் வகையில் இது போன்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்களை பரிசளிக்குமாறு பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டார்.