பொருளாதார ஆய்வறிக்கை முக்கிய அம்சங்கள்-1

பொருளாதார ஆய்வறிக்கை முக்கிய அம்சங்கள்

 

2021-22ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

* கோவிட் தொற்றுக்கு எதிரான சிறந்த தடுப்பானாக கோவிட் தடுப்பூசிகள் உருவெடுத்தன. பல உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றின.

* தடுப்பூசித் திட்டத்தை மிகப் பெரிய பொருளாதார குறிகாட்டியாகக் கருதப்பட வேண்டும்.

* சுகாதாரச் செலவு 73 சதவீதம் அதிகரித்தது. கோவிட்டுக்கு முன்பு ரூ 2.73 லட்சம் கோடியாக இருந்த சுகாதாரச் செலவு 2021-22ம் ஆண்டில்ரூ. 4.72 லட்சம் கோடியாக அதிகரித்தது.

* மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செலவுகள் 2021-22ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதம். இது கடந்த 2019-20ம் ஆண்டில் 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* கடந்த 2 ஆண்டுகளாக, இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்து கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தை எதிர்கொண்டதால், மக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியது.

* கொவிட் தொற்றுக்கு எதிராக மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்கூட்டியே எடுத்தது.

* உலகளவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையும், அதிகளவிலான மூத்த குடிமக்களையும் கொண்ட இந்தியா, கோவிட்-19 மேலாண்மைக்கு பல முனை அணுகுமுறையை பின்பற்றியது.

* கட்டுப்பாடுகள் மற்றும் பகுதி நேர ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டது. கொவிட் தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

* கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து, தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொவிட் பரிசோதனை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கோவிட்-19 பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. தொற்றை விரைவாக கண்டறிய துரித பரிசோதனை கருவிகள் (Rapid Antigen Test Kits) அறிமுகம் செய்யப்பட்டன.

* என்-95 முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உடைகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டன.

* கொவிட் நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் ஆகியவை அதிகரிக்கப்படடன. மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை அதிரிப்பை எதிர்கொள்ள, ரயில்வே, விமானப்படை, கடற்படை மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து வசதிகளையும் மத்திய அரசு பயன்படுத்தியது.

* கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், கோவிட் தடுப்பூசிகள் மிகச் சிறந்த தடுப்பு கவசங்களாக உருவெடுத்தன. பலரது உயிர்களையும், வாழ்வாதரத்தை இவை காப்பாற்றின.

* கோவிட் தடுப்பூசி சுகாதார நடவடிக்கையாக மட்டும் அல்லாமல், பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்வதில் மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக தொடர்பு சேவைகள் அதிகரிக்க உதவியது. அதனால், இதனை இப்போது மிகப் பெரிய பொருளாதார குறி காட்டியாக கருதப்பட் வேண்டும்.

* விலையில் தாராளமயமாக்கம், தேசிய கோவிட்-19 தடுப்பூசி யுக்தியை வேகப்படுத்தியது. இத்திட்டம் 2021ம் ஆண்டு மே 1ம் தேதி மதல் ஜூன் 20ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. 2022 ஜனவரி 3ம் தேதி முதல் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் 15-18 வயது உடையவர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. 2022 ஜனவரி 10ம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு ஆகியோருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்தபின் முன்னெச்சரிக்கை கோவிட்-19 தடுப்பூசி(பூஸ்டர்) செலுத்தப்பட்டது.

* இந்தியாவின் கோவிட் தடுப்பூசி திட்டம், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தது. மத்திய பட்ஜெட் 2021-22ல் தடுப்பூசி கொள்முதலுக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021 ஜனவரி 16ம் தேதி முதல் இதுவரை மொத்தம் 156.76 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டள்ளன. 90.75 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 65.58 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த விரைவான தடுப்பூசி நடவடிக்கையால், வாழ்வாதாரம் விரைவாக மீண்டது.

* இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு மாதமும் 250-275 மில்லியன் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 முதல் 60 மில்லியன் கோவாக்‌ஷின் டோஸ்களும் உற்பத்தி செய்யப்பட்டன.

* தேசிய சுகாதார திட்டத்துடன், கூடுதலாக ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டமும் 2021-22ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.64,180 கோடி செலவில் ஆரம்ப நிலை, இண்டாம் நிலை மற்றும் 3ம் நிலை சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தற்போதுள்ள தேசிய சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தவும், புதிய வகை நோய்களை கண்டறிய புதிய மருத்துவ நிறுவனங்களையும் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5-ல், மொத்த கருவுறுதல் வீதம், பாலின விகிதம், ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு வீதம் குறைந்து, குழந்தை பிறப்பு வீதம் மேம்பட்டுள்ளது.

* குழந்தைகளின் ஊட்டச்சத்தும் நாடு முழுவதும் மேம்பட்டுள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு வீதம் கடந்த 2015-16ம் ஆண்டில் 49.7 புள்ளியாக இருந்தது. 2019-21ம் ஆண்டில் இது 41.9 ஆக குறைந்துள்ளது.

* கடந்த 2015-16ம் பாலின விகிதம் மொத்த மக்கள் தொகையில் 1000 ஆண்களுக்கு 991 பெண்கள் என்ற அளவில் இருந்தது. இது 2010-20ம் ஆண்டில் 1020ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், கடந்த 2015-16ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 919 ஆக இருந்தது. இது 2019-21ம் ஆண்டில் 929 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: