மத்திய சபை குண்டுவீச்சு 8 ஏப்ரல் 1929
8 ஏப்ரல் 1929 அன்று, தில்லியில் உள்ள மத்திய சட்டசபை மீது பகத் சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் வெடிகுண்டுகளை வீசினர். குண்டுவெடிப்பு நடைபெற்ற போது வர்த்தக சிக்கல்கள் சட்டம் மீதான தமது தீர்ப்பை மத்திய சபையின் தலைவர் வித்தல்பாய் படேல் வழங்கிக்கொண்டிருந்தார்.
பார்வையாளர் மாடத்தில் இருந்த இளைஞர்கள் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்று கோஷம் எழுப்பினர்.
பகத் சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் (பி கே தத் என்றும் அழைக்கப்பட்டார்) ஆகிய இரு இளம் விடுதலை வீரர்களுக்கு அந்த குரல்கள் சொந்தமானவை ஆகும்.
சம்பவத்திற்கு பின்னர் இருவரும் அவ்விடத்தை விட்டு நகரமாலும், கைதை தடுக்காமலும் இருந்ததோடு, கைதை கோரினர்.
இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கத்தின் உறுப்பினர்களான அவர்கள், தங்களது நோக்கம் மக்களை கொல்வதோ, காயப்படுத்துவதோ இல்லை என்றும், மாறாக ‘காது கேளாதோரை கேட்க வைப்பதே’ என்றும் கூறினர்.
மோதிலால் நேரு. சர்தார் வல்லபாய் படேல், முகமது அலி ஜின்னா , மதன் மோகன் மாளவியா, (சைமன் ஆணையத்தின்) ஜான் சைமன் உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.
பகத் சிங் மட்டுமே வெடிகுண்டுகளை வீசிய போதிலும், சிங் மற்றும் தத் ஆகிய இருவரும் தங்களை கைது செய்யுமாறு கோரினர்.