ராஜாஜி – தமிழகத்தின் தலைவர்கள்

ராஜாஜி – தமிழகத்தின் தலைவர்கள்

அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஒசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 1878 இல் பிறந்தார் ராஜாஜி. சேலத்தில் வழக்குரைஞர் தொழிலை 1900 இல் தொடங்கினார்.


1906 இல் கல்கத்தாவிலும், 1907 இல் சூரத்திலும் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார்.

1916 இல் அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்க ஆதரவாளராக உருவெடுத்தார். 1917 முதல் 1919 வரை சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்து தனது வித்தியாசமான நற்பணிகள் மூலம் மிகுந்த செல்வாக்கு பெற்றார். 1919 இல் சென்னை வாசியானார்.

அதே ஆண்டு சென்னை வந்த காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தார். ராஜாஜியின் வீட்டில் தங்கினார் காந்தியடிகள்.
காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை தனது உயிர்க் கொள்கையாக ஏற்று நடந்தார்.

முன்னணி வழக்குரைஞராக விளங்கிய அவர் ஒத்துழையாமை இயக்கத்தின் கொள்கைப்படி தனது தொழிலைத் துறந்தார்.
1920 இல் கல்கத்தா மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை கட்சியின் தீர்மானமாகக் கொண்டுவர அரும்பாடுபட்டார்.

அதே ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1921 இல் தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். சிறைக்குள் இவர் எழுதிய நாட்குறிப்பு “ராஜாஜியின் ஜெயில் டைரி’ என்ற நூலாக வெளிவந்தது.

1922 இல் கயா மாநாட்டில் கட்சியின் ஆகச்சிறந்த அகில இந்திய ஆளுமையாக அங்கீகாரம் பெற்றார். அப்போதிருந்துதான் “ராஜாஜி’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
1922 இல் காந்தியடிகள் சிறையிலிருந்த சூழலில் காந்தியடிகளின் “யங் இந்தியா’ இதழின் ஆசிரியராக சுமார் ஒன்றேகால் ஆண்டுகள் பொறுப்பேற்றார்.

1925 இல் திருச்செங்கோட்டில் “காந்தி ஆசிரமம்’ நிறுவினார்.

அங்கேயே மிகச்சிறிய குடில் அமைத்து ஒன்பதாண்டு காலம் மகன், மகளுடன் எளிமையான சூழலில் வாழ்ந்து சுற்றுவட்டாரங்களில் கதர்ப் பணி, மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற பணிகளில் முழுமையாக ஈடுபட்டார்.

ஆசிரமத்திற்கு காந்தியடிகள் வருகை புரிந்து இரண்டு நாள்கள் தங்கியுள்ளார்.
1930 இல் காந்தியடிகளின் தண்டி யாத்திரைபோல திருச்சியிலிருந்து ராஜாஜி தலைமையில் 99 தொண்டர்கள் அணிவகுத்து வேதாரண்யம் சென்று உப்பு எடுக்கும் அறப் போராட்டம் நடத்தினர். அதனால் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார்.

காந்தி   இர்வின் ஒப்பந்தம் ஏற்படாமல் தோல்வியடைந்த பின்னர் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அது அவரின் நான்காவது சிறை வாசம்.
சுதந்திரத்திற்கு முன்பு 1937 இல் சென்னை மாகாணப் பிரதமர், 1946 இல் இடைக்கால நேரு அரசில் அமைச்சர், சுதந்திரத்திற்குப் பிறகு கவர்னர் ஜெனரல், ஆளுநர், மாநில முதல்வர் போன்ற முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

அனைத்து வகைகளிலும் அகில இந்திய அங்கீகாரத்தைப் பெற்ற தமிழகத் தலைவர்களில் முதல் இடத்தைப் பெற்றிருந்தவர் ராஜாஜி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us