கோபால கிருஷ்ண கோகலே (9 மே 1866 – 19 பிப்ரவரி 1915)

 கோபால கிருஷ்ண கோகலே (9 மே 1866 – 19 பிப்ரவரி 1915) 

  1.  கோபால கிருஷ்ண கோகலே (9 மே 1866 – 19 பிப்ரவரி 1915) 
  2. சமூக சீர்திருத்தவாதியாகவும், மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக  இருந்தார். 
  3. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்மாதிரியான தலைமைத்துவத்தை வழங்கிய கல்வியாளர். 
  4. 1902 ஆம் ஆண்டில், புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில், வரலாறு மற்றும் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில் அரசியலில் ஈடுபடுவதற்காக, அப்பதவியைத் துறந்தார். 
  5.  சுயராஜ்ஜியக் கொள்கையை வலியுறுத்திய அவர், கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். .
  6. சமூக சீர்திருத்தத்தின் மீதான அவரது ஆழ்ந்த அக்கறை அவரை இந்திய பணியாளர்கள் சங்கத்தை நிறுவ வழிவகுத்தது (1905) .
  7. “ஹிட்டாவாடா” என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார் 
  8. தீண்டத்தகாதவர்கள் என்று கூறி மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்தார்.
  9.  தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். 
  10. அவர் 1915-ம் ஆண்டு பிப்ரவரி, 19-ம் தேதி மறைந்தார்.
    Image

 

Download TNPSC App

 

மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார். இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார்.

ஒரே டிராயர், ஒரு சட்டை, ஒருவேளை சாப்பாடு, அதையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884-ல் பட்டப் படிப்பை முடித்தார். அரசு வேலைவாய்ப்புகள் வந்தன. அதில் விருப்பமின்றி, சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ரானடேவின் ஆதரவாளராக மாறினார்.

இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். ஆனால், இவர் மிதவாதப் போக்கை கடைபிடித்தார். வன்முறையைத் தவிர்ப்பது, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.

மும்பை சட்டப் பேரவைக்கு 1899-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர போராடினார்.

ஆங்கிலேய அரசின் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை ஆதரித்தார். கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்களின் ஆதரவுடன் அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இது உட்பட பல விஷயங்களில் இவருக்கும் திலகருக்கும் கருத்துவேறுபாடுகள் எழுந்தன.

கோகலே 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார். நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பது, மக்களின் தேசிய உணர்வை ஊக்குவிப்பது, கல்வியை மேம்படுத்துவது போன்ற செயல் திட்டங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டது. நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கூடங்களை நிறுவியது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

நாடு சுதந்திரம் பெறுவதைவிட அதன் சமூக மறுமலர்ச்சியில்தான் கோகலே அதிக அக்கறை காட்டினார். இதை பலரும் எதிர்த்தனர். ஆனால் துணிச்சலுடன் தன் மறுமலர்ச்சிக் குறிக்கோள்களை முன்னெடுத்து செயல்படுத்தினார்.

மகாத்மா காந்தி வளர்ந்துவந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு அறிவுரையாளராகத் திகழ்ந்தார். முகமது அலி ஜின்னாவுக்கும் இவரே வழிகாட்டியாக விளங்கினார். காந்திஜியின் அழைப்பின் பேரில் 1912-ல் தென்ஆப்பிரிக்கா சென்றார். அப்போது நாட்டு நடப்பு, சாமானிய மக்களின் பிரச்சினைகள் பற்றி காந்தியிடம் எடுத்துரைத்தார்.

கோகலே என் அரசியல் குரு’ என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. ‘அவர் ஸ்படிகம் போன்று தூய்மையானவர், ஆட்டுக்குட்டிபோல மென்மையானவர், சிங்கம் போல வீரம் படைத்தவர், பெருந்தன்மை உடையவர், அரசியல் அரங்குக்கு பொருத்தமானவர்’ என்றும் பாராட்டியுள்ளார் காந்தி. அரசியலை ஆன்மிகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாக கவர்ந்தது.

தன் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்த கோகலே 49 வயதில் (1915) மறைந்தார்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us