அம்பேத்கரின் கொள்கைகள்

அம்பேத்கரின் கொள்கைகள்

Bhimrao Ramji Ambedkar

தலைசிறந்த தலைவர்கள் நமது சமூகத்திற்கு பல்வேறு சீர்திருத்தங்களையும் பல்வேறு நலன்களையும் விட்டுச் சென்றுள்ளார்கள். மிகப்பெரிய இன்னல்களுக்கு பிறகு அவர்கள் ஒரு இலக்கை அடைந்து சமூகத்தின் விடுதலை நோக்கி பயணித்து உள்ளார்கள் மக்களுக்காக வாழ்ந்துள்ளார்கள்.

அவர்களுடைய வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்கிறோமோ இல்லையோ அவர்களுடைய கொள்கைகளை முடிந்தவரை நாம் பின்பற்றி நம்மால் முடிந்தவரை இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒன்றை செய்துவிட்டு இறந்துபோவது இந்த வாழ்வின் மிகப் பெரிய பயனாக இருக்கும்.

அந்த வகையில் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் கொள்கைகள்

அம்பேத்கரது கருத்து

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்

தற்போது

கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்

 

 • ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
 • பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
 • சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது
 • தன்னை உயர்ந்தவனாகவும் மற்றொரு தாழ்ந்தவன் ஆகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி
 • சமூகத்தால் செய்யப்படும் சர்வதிகாரம் அரசியலால் செய்யப்படும் சர்வாதிகாரத்தை விட கூடியது
 • சாதி அமைப்பில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதியை கடத்துவது அவர்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது
 • இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வை தராத வரை, சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பலனில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: