Daily Current Affairs – October 1st to 2nd – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Oct 1st to 2nd)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  October 1st to 2nd

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

பி.சி.சி.ஐ, ஆர்.டி.ஐ. சட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

 

தரவரிசை

 

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்

முதலிடம் – இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி – 899 புள்ளி

இரண்டாம் இடம் – இந்திய அணி துணைக் கேப்டன் ரோஹித் சர்மா – 871 புள்ளி

7-வது இடம் –இந்திய அணி ஷிகர் தவண் –  767 புள்ளி

 

ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல்

முதலிடம் – இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா –  841 புள்ளி

இரண்டாம் இடம் –ஆப்கானிஸ்தான் ரஷீத் கான் –  788 புள்ளி

3-ம் இடம் –  இந்திய வீரர் குல்தீப் யாதவ்-  723 புள்ளி

 

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 1 – சர்வதேச முதியோர்  தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1990 ஆம் வருடம் ஐ.நா.வினால் உத்தியோக பூர்வமாக அங்கீகரித்து, 1991 ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முதியோர்கள்   முழுமையான மற்றும் சமமான மனித உரிமைகளை பெறுவதை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்காக சர்வதேச முதியோர்  தினம் கொண்டாடப்படுகிறது.

2018 கருப்பொருள் : ‘Celebrating Older Human Rights champions’

 

அக்டோபர் 2 – சர்வதேச அஹிம்சை தினம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர் மற்றும் அஹிம்சை தத்துவத்துக்கான முன்னோடி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2, அன்று சர்வதேச அஹிம்சை தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

தேசிய செய்திகள் 

 

LNG முனையம் மற்றும் குழாய் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி,குஜராத் அன்ஜரில் உள்ள முந்த்ரா LNG முனையம், அஞ்சர்-முந்த்ரா பைப்லைன் திட்டம் மற்றும் பாலன்பூர்-பாலி-பார்மர் குழாய்த்திட்டம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

 

மூத்த குடிமக்களுக்கான  ‘வாக்தன்‘

அக்சர்தம் மந்திர் அருகே உள்ள காமன்வெல்த் விளையாட்டு கிராம அரங்கில், சர்வதேச முதியோர் தினத்தை கொண்டாடுவதற்காக முதியோர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் “வாக்த்டன்” போட்டி நடைப்பெற்றது .

இதனை சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பின் மத்திய அமைச்சர் ஸ்ரீ தாவார்சந் கெலாட் தொடங்கிவைத்தார்.

 

மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு

அக்டோபர் மாதம் முழுவதும் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் 1990ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிவினில்ஸ் என்ற இசைக்குழுவால் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக “I Touch Myself” என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.

“இனம், நிறம் என எவ்வித வேறுபாடுமின்றி உலகம் முழுவதுமுள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய எல்லையை மீறி இந்த காணொளியை வெளியிட்டுள்ளேன்” என்று இதுகுறித்து செரீனா கூறியுள்ளார்.

 

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுடன், கனடா வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட்டது

 

மாநாடுகள்

 

சர்வதேச மனித உரிமைகள் ஒருங்கிணைப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தையொட்டி, மனித உரிமைகள் நடைப் பயணம் தில்லியில்  மூன்று நாள்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எச்.எல். தத்து கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

சர்வதேச மனித உரிமைகள் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் மனித உரிமைகள் அம்சங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். இக்குழுக்களில் முதல் பரிசாக ஜானகி தேவி மகிளா கல்லூரியின் தெரு நாடக சொசைட்டிக்கு ரூபாய் ஒரு லட்சம் அளிக்கப்பட்டது.

 

முதலாவது ஸ்வச்ததா மேளா

புது தில்லியில் உள்ள அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனம் நடத்திய முதல் ஸ்வச்ததா மேளாவை சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா திறந்து வைத்தார்.

 

பாதுகாப்பு நிகழ்வுகள்

 

இந்திய மற்றும் வியட்நாமிய கடலோர காவலாளர்கள் இடையே உயர் மட்ட சந்திப்பு

இந்திய கடலோரக் காவல் படை, வியட்நாம் கடலோரக் காவல் படை ஆகியவற்றுக்கு இடையே உயர்நிலைக் குழுக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே 2015ம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில் இந்த உயர்நிலைக் குழுக் கூட்டம்  கடலோர காவல்படை மையத்தில் நடைபெற்றது.

இந்திய கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் (ICG) திரு. ராஜந்திர சிங் தலைமையிலான குழுவும், வியட்நாம் கடலோரக் காவல் படையின் (VCG) கமாண்டன்ட் மேஜர் ஜெனரல் நிக்யேன் வான்சோன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவும் இந்த சந்திப்பில் இடம்பெற்றனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒத்துழைப்பு மேற்கொள்வது என்று இந்த சந்திப்பின்போது ஒப்புக் கொள்ளப்பட்டது. சிறந்த மேலாண்மை நடவடிக்கைகள், செயல்பாடுகள் அளவிலான கருத்துப் பரிமாற்றத்தை அதிகரிப்பது ஆகியவை குறித்து இரு தரப்பினரும் இசைந்தனர்.

 

ஒப்பந்தங்கள் / உடன்படிக்கை

 

இந்தியா, உஸ்பெகிஸ்தான் மை ஒப்பந்தங்கள்

இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே 17 பல்வேறு துறைகளில் மை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

புது டெல்லியில் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் சவ்கத் மற்றும் பிரதமர் மோடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் சுற்றுலா, தேசிய பாதுகாப்பு, ராணுவ கல்வி, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார, மருத்துவ அறிவியல் உள்ளிட்ட

துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க இணைந்து செயல்படவும் இரு நாடுளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ், இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ராணுவ பயற்சி மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

எம்.என்.எஸ் 93 வது ரைசிங்  தினம்

இராணுவ நர்சிங் சேவை (எம்என்எஸ்) அக்டோபர் 1 ம் தேதி 93 வது ரெய்சிங் தினத்தை கொண்டாடுகிறது.

 

உலக செய்திகள்

 

சீனாவில் மகாத்மா காந்தியின் 149 வது பிறந்த நாள்

மகாத்மா காந்தியின் 149 வது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக, சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சாவோயாங் பூங்காவில் மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற மேற்கோள் மற்றும் பஜனைகள் வாசிக்கப்பட்டன.

சீனாவின் புகழ்பெற்ற சிற்பி மற்றும் கலைஞரான யுவான் சிகுன் வடிவமைத்த மகாத்மா காந்தி சிலை 2005-ம் ஆண்டு இந்த பூங்காவில் நிறுவப்பட்டது. இந்த பூங்காவோடு இணைந்த அருங்காட்சியகத்தில் ரவீந்திரநாத்  தாகூரின் சிலை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் கலந்து கொண்ட இந்திய தூதரக அதிகாரி அக்வினோ விமல், மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

 

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு

பிரதமர் திரு. நரேந்திர மோடி சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை இன்று விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார்.

இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதி நாடுகள் கூட்டமைப்பின் (IORA) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சர்கள் கூட்டம் மற்றும் இரண்டாவது சர்வதேச ரீ-இன்வெஸ்ட் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி) ஆகியவையும் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

நியமனங்கள்

 

சூசேன் கிட்டி என்பவர் பங்களாதேஷின் முதல் பெண் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீ ராஜேஷ் அகர்வால் என்பவர் ரயில்வே வாரியம் – புதிய உறுப்பினராக (ரோலிங் ஸ்டாக்), நியமிக்கப்பட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் பணிப்பாளர்-கீதா கோபிநாத்

விமானப்படை பணிப்பாளரின் துணைத் தலைவர்-ஏர் மார்ஷல் அனில் கோஸ்லா

விமானப்படை பொது இயக்குனர் (OPS)-ஏர் மார்ஷல் அமித் தேவ்

விமானப்படை பணியாளரின் துணைத் தலைவர்-ஏர் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி

விமானப்படை தலைமை நிர்வாக அதிகாரி கிழக்கு ஏர் கமாண்ட்-ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார்

விமானப்படை தலைமை நிர்வாக அதிகாரி தென்மேற்கு ஏர் கமாண்ட்-ஏர் மார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா

 

திட்டங்கள்

 

கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சி திட்டத்தின் தேசிய நடவடிக்கை ஆராய்ச்சி திட்டம்

நாட்டின் கிராமப்புற பகுதிகளில் நிலையான மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிராமப் பஞ்சாயத்துத் திட்டத்தின் தேசிய நடவடிக்கை ஆராய்ச்சி திட்டத்தை, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குவாலியர் மத்தியப் பிரதேசத்தில் தொடங்கி வைத்தார்.

 

பாதுகாப்பு செய்திகள்

 

IBSAMAR- 6வது பதிப்பு

இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க கடற்படைகள் இடையே ஒரு கூட்டு பல தேசிய கடல் பயிற்சிக்கான IBSAMAR இன் ஆறாவது பதிப்பு, தென் ஆப்பிரிக்காவில் சைமோன்ஸ் நகரத்தில்  அக்டோபர் 01 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கடற்பயிற்சியின் நோக்கமானது பங்குபெறும் கடற்படைகளுடன் கூட்டுப்பயிற்சியை மேற்கொள்வதையும் இணைந்து பணியாற்றுவதைக் கட்டமைப்பதையும் பரஸ்பர புரிதல்களை ஏற்படுத்துவதுமாகும்.

இந்த IBSAMAR பயிற்சியானது 2006-ல் ஆரம்பிக்கப்பட்டது.

கடைசி பதிப்பான IBSAMAR – Vவது பதிப்பானது 2016-ன் பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோவாவில் நடைபெற்றது. அதற்கு முந்தைய அனைத்துப் பயிற்சிகளும் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றன.

 

விருதுகள்

 

காயகல்ப் விருது

எய்ம்ஸ் (டெல்லி)– காயகல்ப் விருதுகளில் முதல் இடம் ரூ. 5 கோடி பரிசு பெற்றது (எய்ம்ஸ் டெல்லிக்கு கீழ் வரும் மத்திய மற்றும் மாநில மருத்துவமனைகளின் வளாகத்தில் தூய்மை பராமரிக்க எடுத்த முயற்சிகளை அங்கீகரித்து).

 

NIPM ரத்னா விருது

NIPM ரத்னா விருதை  டாக்டர். தபன் குமார் சந்த், சி.எம.டி, NALCO  என்பவர் பெற்றார்.

2017 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் டாக்டர் ராஜ்குமார் விருதை  மூத்த பல மொழி நடிகர் லட்சுமி என்பவர் பெற்றார்.

 


 Download Daily Current Affairs [2018- Oct – 1 & 2 ]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: