Daily Current Affairs – September 23rd to 25th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Sep 23rd to 25th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  Sep 23rd to 25th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஐரோப்பாவில் ஸ்லோவாகியா என்ற இடத்தில் நடைப்பெற்றது.

இதில்  86 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா வெள்ளி பதக்கம் வென்றார்.

நவீன் சிஹாக் 57 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 

சீன ஓபன் பேட்மிண்டன்

இந்தோனேசியாவின் ஆன்டோனி சினிசுகா கின்டிங் ஜப்பானின் கெண்டோ மொமோட்டாவை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் சீன ஓபன் பட்டத்தை வென்றார். ஸ்பெயினின் கரோலினா மரின் சீனாவின் சென் யூபெய்யை தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

 

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் நான்கு போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

 

செர்பியா ஜூனியர் & கேடட் ஓபன்

பெல்கிரேடில் 2018 செர்பியா ஜூனியர் மற்றும் கேடட் ஓபனில் டேபிள் டென்னிஸில் பெண்கள் அணி மற்றும் கேடட் சிறுவர்கள் அணி பட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

 

முக்கியமான நாட்கள்

 

செப்டம்பர் 23 – சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம்

செப்டம்பர் 24-30, 2018 நடைபெறும் காது கேளாதோர் சர்வதேச வாரத்தின் ஒரு பகுதியாக 2018 செப்டம்பர் 23 அன்று சைகை மொழிகளுக்கான முதல் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

2018 தீம் :-  “With Sign Language, Everyone is Included!”

 

செப்டம்பர் 25 – அந்த்யோதயா தினம்

பண்டிட் தீன்தயால் உபத்யாயாவின் பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் மாதம் 25ம் தேதியை அந்த்யோதயா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

திட்டங்கள்

 

சௌவாக்யா திட்டம்

அசாம் அரசு சௌவாக்யா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கவுள்ளது.

 

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சுகாதார உறுதி அளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை  பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

 

உலக செய்திகள்

 

‘இந்திர ஜத்ரா‘ திருவிழா

நேபாளத்தில் புகழ்பெற்ற இந்திர ஜத்ரா திருவிழா காத்மண்டுவில் கொண்டாடப்படுகிறது.

இந்த எட்டு நாள் திருவிழா மழை மற்றும் நல்ல அறுவடை வேண்டி இந்திர தேவனை வழிபாடு செய்யப்படுகிறது.

 

நெல்சன் மண்டேலா – சமாதானத்தின் தசாப்தம் :

இந்த ஆண்டு நெல்சன் மண்டேலா-வின் 100 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஐ.நா. சபையானது 2019-2028 காலத்தை ‘நெல்சன் மண்டேலா சமாதானத்தின் தசாப்தம்’ என அறிவித்துள்ளது.

மேலும், தென்னாப்பிரிக்காவில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் பிறப்பை கவுரவிக்கும் வகையில் அவரது சிலையானது ஐ.நா. சபையில் திறக்கப்பட்டுள்ளது.

 

ஜர்சுகுடா விமான நிலையம்

ஒடிசாவில், பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜர்சுகுடா விமான நிலையம் மற்றும் ஜர்சுகுடா – ராய்ப்பூர் மார்க்கத்தில் உடான் விமான சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

“முஷாயிரா”

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் சிறுபான்மையின நல அமைச்சகம் முஷாயிரா – கவியரங்கத்தை நடத்துகிறது.

மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, நாடுமுழுவதும் இந்தக் கவியரங்கம் நடத்தப்படும்.

இந்த கவியரங்கம் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி   புதுடில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும்

 

அகில இந்திய வானொலியின் 20kW FM டிரான்ஸ்மிட்டர் 

சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தளுக்கான மத்திய அமைச்சர் விஜய் சம்பலா ,அமிர்தசரஸின் அட்டாரி சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கரிண்டாவில் உள்ள அகில இந்திய வானொலியின் 20kW FM டிரான்ஸ்மிட்டர்  திறந்துவைத்தார்.

 

பாக்யாங் விமான நிலையம்

பிரதமர் திரு.நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்தில் பாக்யாங் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார்.

இது இமாலய மாநிலத்தின் முதல் விமான நிலையம் உருவாகியுள்ளது, இது நாட்டின் 100-வது விமான நிலையம் ஆகும்.

 

புலி எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்  நாடு

நேபாளம் தனது புலி எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் உலகின் முதல் நாடாக வாய்ப்பு உள்ளது.

அந்த நாட்டில் 2009ல் சுமார் 121 புலிகள் இருந்தது தற்போது 235 காட்டுப் புலிகள் உள்ளன  கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.

 

மாலத்தீவு ஜனாதிபதி

மாலத்தீவில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றார்.

 

காற்று மாசுபாடு குறைப்பு சாதனம்

போக்குவரத்து சந்திப்புகளுக்கான காற்று மாசு கட்டுப்பாட்டு கருவி WAYUவை அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ. டிராபிக் சந்திப்பு மற்றும் முகர்பா சௌக் ஆகிய இடங்களில்  திறந்து வைத்தார்

 

இந்திய சர்வதேச அறிவியல் விழா

இந்தியாவின் சர்வதேச அறிவியல் சங்கத்தின் நான்காவது பதிப்பு அக்டோபர் 6, 2018 அன்று லக்னோவில் இந்திய ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்.

IISF-2018 மைய கருப்பொருள் “மாற்றத்திற்கான அறிவியல்“

 

அறிவியல் செய்திகள்

 

ஸ்பேஸ் எக்ஸ்ஸின்  முதல் நிலவு விமானப் பயணி

ஸ்பேஸ் எக்ஸ்,எலான் மஸ்க்-ன் விண்வெளி போக்குவரத்து நிறுவனம் அதன் முதல் நிலவு தனியார் விமானப் பயணியாக ஜப்பானிய பில்லியனர் யுசாகு மேசாவா அறிவிப்பு செய்தது.

 

உடுக்கோள்

உலகில் முதன்முதலாக MINERVA-II1 (உடுக்கோளுக்கான மைக்ரோ நானோ சோதனை ரோபோ வாகனம், இரண்டாவது தலைமுறை) இரண்டு ரோபோ ரோவர்ஸை வெற்றிகரமாக ஜப்பான் விண்வெளி நிறுவனம் JAXA மூலம் உடுக்கோள் ரிகுவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டன.

 

தரவரிசை

 

எளிய வாழ்க்கைக்கான குறியீடு-2018

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம், இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.

புனரமைப்பு மற்றும் நகர்ப்புற சீரமைப்புக்கான  இயக்கத்தின் சார்பில் இந்த மூன்று மாநிலங்களும் எளிய வாழ்க்கைக்கான மாநிலங்களாக தேர்வு செய்யப்பட்டு, இன்று நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.

எளிய வாழ்க்கைக்கான சிறந்த விருது

1) ஆந்திரா 2) ஒடிசா 3) மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் பெற்றன .

இந்த விருதை மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி வழங்கினார்.

மாநாடுகள்

 

தேசிய மின்-சட்டப் பேரவை செயலி குறித்த தேசிய பயிலரங்கு

தேசிய மின்-சட்டப்பேரவை செயலி (National e-Vidhan Application – NeVA) குறித்த இரண்டுநாள் பயிலரங்கு தில்லியில் இன்று தொடங்கியது. நிகழ்ச்சியை மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கிவைத்து தலைமை தாங்கினார்.

இந்தப் பயிலரங்கம் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் காகிதத்தின் பயன்பாட்டைக் குறைத்து, தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க இது பெரிதும் உதவும்புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

பி.எஸ்.என்.எல் –  5ஜி அலைவரிசைக்காக ஒப்பந்தம்

பி.எஸ்.என்.எல் இந்தியாவின் 5ஜி அலைவரிசை மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஓ.டி) தொழில்நுட்பத்தை கொண்டுவர ஜப்பானின் சாப்ட்வங்கி மற்றும் என்.டி.டி. கம்யூனிகேஷன்ஸ் ஆகியோருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

 

விருதுகள்

ரைட் லிவ்லிஹூட் விருது

“மாற்று நோபல்” பரிசு என்றழைக்கப்படும் ரைட் லிவ்லிஹூட் விருதை அப்துல்லா அல் ஹமீத், முகமது ஃபாஹத் அல்-காஹ்தானி மற்றும் வலீத் அபு அல்-கைர் [சவுதி அரேபியா] ஆகியோர் பெற்றனர்.

 

கௌரவ  விருது

2018 கௌரவ விருதை குவாத்தமாலாவின் தெல்மா ஆல்டானா மற்றும் கொலம்பியாவின் இவன் வெலாஸ்கெஸ் ஆகியோர் பெற்றனர்.

 

ஃபிஃபா வீரர் விருது 

குரோஷிய கால்பந்து வீரர் லூகா மோட்ரிக் என்பவர் ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருது பெற்றார்.

 

நியமனங்கள்

 

பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத் தலைவராக அஜித் மோகன் நியமிக்கப் பட்டார்.

இந்திய பொது துறை நிறுவனமான(Steel Authority of India -SAIL) ன் புதிய தலைவராக அனில் குமார் சௌத்ரி (Anil Kumar Chaudhary) நியமிக்கப்பட்டுள்ளார். (SAIL) இது 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது


 

 Download Daily Current Affairs [2018- Sep – 23 & 25]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: