Rowlatt Act ரௌலட் சட்டம் 18 மார்ச் 1919
‘கருப்புச் சட்டம்’ எனக் கூறப்படும் ரெளலட் சட்டம், முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசால் 18 மார்ச் 1919 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் புரட்சிகளை ஒடுக்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ரௌலட் சட்டம் 18 மார்ச் 1919 “கருப்புச் சட்டம்” என்று கூறப்படும் ரௌலட் சட்டம், முதல் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரசால் 18 மார்ச் 1919 அன்று நிறைவேற்றப்பட்டது.
ரௌலட் குழுவின் தலைவராக இருந்த சர் சிட்னி ரௌலட்டின் பெயர் இந்த சட்டத்திற்கு சூட்டப்பட்டது.
இந்தியாவில் புரட்சிகளை ஒடுக்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்ட இந்த கொடுங்கோல் சட்டம், எந்தவொரு நபரையும், எந்தவித காரணமும் இன்றி கைது செய்ய காவல் துறைக்கு அதிகாரம் அளித்தது. நாட்டில் தேசப்பற்று அதிகரித்து வருவதை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். ஊடகங்களை ஒடுக்குவதற்கும் இந்த சட்டம் அரசுக்கு அதிகாரம் அளித்தது.
இதன் விளைவாக, எந்தவொரு கலாச்சாரம் அல்லது மத நிகழ்ச்சியின் பெயரால் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இது போன்ற ஒடுக்குமுறை “சட்டத்தை” எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்த காந்தியடிகள் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு வழிவகுத்த காரணிகளில் இதுவும் ஒன்றாகும்