Scheme – Pradhan Mantri Fasal Bima Yojana
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் சேகோரில் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் அமலாக்கம், 6 ஆண்டுகளை நிறைவு செய்து, வரும் காரீப் 2022 பருவத்துடன் 7ம் ஆண்டில் நுழைகிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, இத் திட்டம், விவசாயிகள் தாங்களாக முன்வந்து பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் வகையில் கடந்த 2020ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்து, பயிர் காப்பீடு திட்ட செயலியில், 72 மணி நேரத்துக்குள் விவசாயிகள் தெரிவிக்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டத்தில் வசதி செய்யப்பட்டது. இதன் பின், பொது சேவை மையம் அல்லது அருகில் உள்ள வேளாண் அதிகாரி, ஆய்வு செய்து இழப்பீட்டு பயன்களை தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு முறையில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பார்.
நில ஆவணங்களை, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைப்பது, எளிதான பதிவுக்கு பயிர் காப்பீடு கைப்பேசி செயலி, காப்பீட்டுக்கான ப்ரீமியம் செலுத்தும் வசதி, மானியம் விடுவிப்பு, இழப்பீடு வழங்கும் முறை ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
மாநில அளவில் / மாவட்ட அளவில் உள்ள குறை தீர்ப்பு குழு மூலம், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க இத்திட்டம் உதவுகிறது.
பயிர் பாதுகாப்பீடு திட்டத்தில் இணைந்த 85 சதவீதம் விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர். பயிர் காப்பீடு திட்டத்தில், ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான அறிவிப்பை, 2022-23ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது இத்திட்டத்தை எளிதாக அமல்படுத்தவும், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் உதவும்.
விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று பயிர் காப்பீடு பாலிசிகளை வழங்கும் ‘எனது பாலிசி என் கையில்’ Meri Policy Mere Hath’என்ற திட்டமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
TNPSC GROUP 2 PREVIOUS YEAR QUESTION PDF
TNPSC Group 4 Last 6 Years Old Question Papers
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
POTHU TAMIL BOOKS ORDER LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Download TNPSC App
Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) enters its 7th year of implementation
Over 36 crore farmer applications have been insured under PMFBY
Over Rs. 1,07,059 crores of claims have already been paid under the scheme
‘Meri Policy Mere Hath’ – a doorstep distribution drive to be launched to deliver crop insurance policies to farmers
Around 85% of the farmers enrolled with the scheme are small and marginal farmers