TNPSC Group 4 & VAO Model Questions வினா விடை தொகுப்பு-PART 15
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள்
நடப்புச் செய்திகள் – 2 (விளையாட்டு, விருதுகள்)
1. 2024 ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
அ. டோக்கியோ
ஆ. பாரிஸ்
இ. பிரிஸ்பேன்
ஈ. லாஸ் ஏஞ்சலஸ்
2. 1904 ஆம் ஆண்டு உருவான சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடர் எங்கு நடைபெற உள்ளது?
அ. பிரான்ஸ்
ஆ. ஆஸ்திரேலியா
இ. கத்தார்
ஈ. பிரேசில்
3. ஒலிம்பிக் போட்டிகளில் எங்கு நடந்த போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது?
அ. டோக்கியோ (32ஆவது)
ஆ. லண்டன் (30ஆவது)
இ. பெய்ஜிங் (29ஆவது)
ஈ. சிட்னி (27ஆவது)
4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. நீரஜ் சோப்ரா – ஈட்டி எறிதல்
ஆ. ரவிகுமார் தாஹியா – மல்யுத்தம்
இ. பி.வி.சிந்து – பாட்மிண்டன்
ஈ. லவ்லினா போர்கோஹெய்ன் – பளு தூக்குதல்
5. 2020 ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி எந்தப் பதக்கத்தை வென்றது?
அ. தங்கம் ஆ. வெள்ளி
இ. வெண்கலம் ஈ. எதுவுமில்லை
6. 2010-2020 (பத்தாண்டு)க்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது பெற்ற வீரர் யார்?
அ. ரோஹித் சர்மா
ஆ. விராட் கோலி
இ. மகேந்திர சிங் தோனி
ஈ. ரவிச்சந்திரன் அஸ்வின்
7. இந்திய கிரிக்கெட் அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் யார்?
அ. சச்சின் டெண்டுல்கர்
ஆ. செளரவ் கங்குலி
இ. மகேந்திர சிங் தோனி
ஈ. விராட் கோலி
8. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக அளவில் எந்த இடத்தில் உள்ளார்?
அ. முதலாவது
ஆ. இரண்டாவது
இ. மூன்றாவது
ஈ. நான்காவது
9. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. நோவக் ஜோகோவிச் – 2021 ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ்
ஆ. மெட்வடேவ் – 2021 அமெரிக்கா ஒபன் டென்னிஸ்
இ. நோவக் ஜோகோவிச் – 2021 விம்பிள்டன் டென்னிஸ்
ஈ. மெட்வடேவ் – 2021பிரெஞ்சு ஒபன் டென்னிஸ்
10. அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் மகளிர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் முதலிடம் பெற்ற சி.கவிரக்ஷனா எந்த மருத்துவக் கல்லூரியில் பயின்றுவருகிறார்?
அ. சென்னை ஆ. தஞ்சாவூர்
இ. மதுரை ஈ. சிவகங்கை
11. டெல்லி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?
அ. கர்ணம் மல்லேஸ்வரி
ஆ. பி.டி. உஷா
இ. கிரண் பேடி
ஈ. அனுஷா மாலிக்
12. 2020 ஆம் ஆண்டு ‘சாங்சுவரி ஏசியா வாழ்நாள் சாதனையாளர்’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
அ. சஜன் பிரகாஷ்
ஆ. ஆதார் பூனாவாலா
இ. தியடோர் பாஸ்கரன்
ஈ. பராக் அகர்வால்
13. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. மிக இளம்வயது மேயர் – ஆர்யா ராஜேந்திரன் (கேரளம்)
ஆ. முதல் பெண் விமானச் சோதனை பொறியாளர் – ஆஷ்ரிதா வி. ஓலெட்டி
இ. மிக இளம் வயது பெண் விமானி – ஆயிஷா அசீஸ்
ஈ. பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் –
பவானி தேவி
14. உலகின் மிக இளவயது கிராண்ட் மாஸ்டரான செஸ் வீரர் யார்?
அ. அபிமன்யு
ஆ. விஸ்வநாதன் ஆனந்த்
இ. அர்ஜுன் கல்யான்
ஈ. பிரக்ஞானந்தா
15. 2021 ரமோன் மகசேசே விருது பெற்ற முகமது அம்ஜத் சாகிப் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ. வங்கதேசம்
ஆ. பாகிஸ்தான்
இ. பிலிப்பைன்ஸ்
ஈ. இந்தோனேசியா
16. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒலிம்பிக் விருது பெற்ற முகமது யூனுஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ. வங்கதேசம்
ஆ. பாகிஸ்தான்
இ. பிலிப்பைன்ஸ்
ஈ. இந்தியா
17. அஸ்ட்ரானிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா விருது பெற்ற ஜி. சதீஷ் ரெட்டி பணியாற்றும் இடம் எது?
அ. இஸ்ரோ
ஆ. டிஆர்டிஓ
இ. ஹெச்ஏஎல்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
18. 2021 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் யார்?
அ. அப்துல் ரசாக் குர்னா
ஆ. ஜார்ஜோ பரீசி
இ. கிளவுஸ் ஹாஸல்மான்
ஈ. சுகுரோமனாபே
19. 67ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் நடிகர்களில் யாருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது?
அ. ரஜினிகாந்த்
ஆ. விஜய்சேதுபதி
இ. தனுஷ்
ஈ. சூர்யா
20. எந்தத் திரைப்படம் 93ஆவது ஆஸ்கர் அகாடமி விருதுகள் 2021இன் சிறந்த திரைப்பபடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது?
அ. நொமாட்லேண்ட்
ஆ. அனதர் ரவுண்ட்
இ. பிராமிசிங் யங் வுமன்
ஈ. தி ஃபாதர்
1. ஆ. பாரிஸ்
2. இ. கத்தார்
3. அ. டோக்கியோ (32ஆவது)
4. ஈ. லவ்லினா போர்கோஹெய்ன் –
பளு தூக்குதல் (குத்துச்சண்டை 2020)
5. இ. வெண்கலம்
6. ஆ. விராட் கோலி
7. ஈ. விராட் கோலி (61 போட்டிகள்)
8. ஆ. இரண்டாவது (முதலிடம் – முத்தையா முரளீதரன்)
9. ஈ. மெட்வடேவ் – 2021
பிரெஞ்சு ஒபன் டென்னிஸ்
(நோவக் ஜோகோவிச்)
10. ஈ. சிவகங்கை
11. அ. கர்ணம் மல்லேஸ்வரி
12. இ. தியடோர் பாஸ்கரன்
13. ஈ. பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் – பவானி தேவி (அவனி லேகரா)
14. அ. அபிமன்யு (அமெரிக்கா)
15. ஆ. பாகிஸ்தான்
16. அ. வங்கதேசம்
17. ஆ. டிஆர்டிஓ
18. அ. அப்துல் ரசாக் குர்னா
(மற்ற மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது)
19. இ. தனுஷ்