TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 16

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 16

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

(விடுதலைப் போராட்டம் – 1) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

நமது இந்தியா – 6 (விடுதலைப் போராட்டம் – 1)

1. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு 28-12-1885 நாளன்று எங்கே நடைபெற்றது?
அ. கொல்கத்தா ஆ. அலகாபாத்
இ. மும்பை ஈ. சென்னை

2. எந்த ஆண்டு நடைபெற்ற நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டுக்கு விஜயராகவாச்சாரி தலைமையேற்றார்?
அ. 1920 ஆ. 1926
இ. 1927 ஈ. 1930

3. சதி ( உடன்கட்டை ஏறுதல்) ஒழிப்புச் சட்டத்தை எந்த ஆண்டில் ராஜாராம் மோகன் ராய் ஆதரவுடன் வில்லியம் பெண்டிங் பிரபு கொண்டுவந்தார்?
அ. 1925 ஆ. 1927
இ. 1929 ஈ. 1931

4. ‘யுகந்தர்’ என்கிற புரட்சிப் பத்திரிகை இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது எந்த மொழியில் வெளியிடப்பட்டது?
அ. வங்க மொழி ஆ. இந்தி
இ. மராத்தி ஈ. பிஹாரி

5. கி.பி. 1890 இல் சாவர்க்கரும் அவருடைய சகோதரரும் இணைந்து தொடங்கிய ‘மித்ர மேளா’ என்கிற ரகசிய அமைப்பு எந்த ஆண்டு அபிநவ் பாரத் என்கிற அமைப்புடன் இணைந்தது?
அ. 1901 ஆ. 1902
இ. 1903 ஈ. 1904

6. லாலா லஜபதி ராய், அஜித் சிங் இருவரும் இணைந்து ‘பாரத மாதா’ என்ற இதழை எங்கே ஆரம்பித்தனர்?
அ. மும்பை ஆ. கொல்கத்தா
இ. புனே ஈ. லாகூர்

7. ‘இந்தியா இல்லம்’ என்கிற அமைப்பை லண்டனில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா எந்த வருடம் தொடக்கினார்?
அ. 1901 ஆ. 1903
இ. 1905 ஈ. 1907

8. கி.பி. 1913 இல் அமெரிக்காவில் கதர் (Ghadar) கட்சியை ஆரம்பித்தவர் யார்?
அ. ஹர் தயால்
ஆ. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா
இ. அஜித் சிங்
ஈ. வீரேந்திரநாத்

9. ககோரி கொள்ளை கி.பி. 1925 ஆம் வருடம் எங்கு நடைபெற்றது?
அ. மும்பை ஆ. லக்னோ
இ. கொல்கத்தா ஈ. அலகாபாத்

10. லாலா லஜபதி ராய் இறந்த ஆண்டு எது?
அ. 1923 ஆ. 1925
இ. 1926 ஈ. 1928

11. பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நாள் எது?
அ. மார்ச் 23, 1931
ஆ. ஏப்ரல் 23, 1930
இ. மார்ச் 23, 1930
ஈ. எதுவுமில்லை

12. யாருடைய தலைமையில் சிட்டகாங் புரட்சிக் குழு கி.பி. 1930 ஏப்ரலில் சிட்டகாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியது?
அ. பகத் சிங் ஆ. ராஜகுரு
இ. சுக்தேவ் ஈ. சூர்யா சென்

13. The Philosophy of the Bomb – என்கிற புத்தகத்தை எழுதியவர் யார்?
அ. பகத் சிங்
ஆ. பகவதிசரண் வோரா
இ. லாலா லஜபதி ராய்
ஈ. சுக்தேவ்

14. சூர்யா சென் தூக்கிலிடப்பட்ட வருடம் எது?
அ. கி.பி. 1931
ஆ. கி.பி. 1932
இ. கி.பி 1933
ஈ. கி.பி. 1934

15. கீழ்க்கண்டவர்களில் யார் மிதவாதி அல்லர்?
அ. தாதாபாய் நௌரோஜி
ஆ. கோபாலகிருஷ்ண கோகலே
இ. மதன்மோகன் மாளவியா
ஈ. பாலகங்காதர திலகர்

16 காந்தியின் குருவாகக் கருதப்படுபவர் யார்?
அ. தாதாபாய் நௌரோஜி
ஆ. கோபாலகிருஷ்ண கோகலே
இ. லாலா லஜபதி ராய்
ஈ. பாலகங்காதர திலகர்

17. இங்கிலாந்து பாராளுமன்ற அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்?
அ. தாதாபாய் நௌரோஜி
ஆ. கோபாலகிருஷ்ண கோகலே
இ. பி.ஆர்.அம்பேத்கர்
ஈ. ஜவாஹர்லால் நேரு

18. ‘இந்தியாவின் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்’ என்கிற நூலை எழுதியவர் யார்?
அ. மகாத்மா காந்தி
ஆ. பி.ஆர்.அம்பேத்கர்
இ. தாதாபாய் நௌரோஜி
ஈ. கோபாலகிருஷ்ண கோகலே

19. பஞ்சாபின் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?
அ. லாலா லஜபதி ராய்
ஆ. பகத் சிங்
இ. அஜித் சிங்
ஈ. சுக்தேவ்

20. எவ்வருடம் கர்சன் பிரபுவால் வங்கப் பிரிவினை ஏற்பட்டது?
அ. கி.பி. 1901
ஆ. கி.பி. 1907
இ. கி.பி 1911
ஈ. கி.பி. 1905

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 6

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: