பொது அறிவியல் – முக்கிய பகுதிகள்
Science Important Topics For All Exam
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய அறிவியல் சார்ந்த தகவல்கள் (Important Science Notes) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
அகச்சிவப்புக் கதிர்கள்
* மனித உடலிலிருந்து வெளியிடப்படும் அகச்சிவப்பு கதிர்களின் அளவு – 1 / 10 மி.மீலிருந்து 1 / 100 மி. மீ.
* பாம்புகள் அகச்சிவப்புக் கதிர்களை பயன்படுத்தி தனது இரையை தேடிக் கொள்கின்றன. (இருட்டில்)
* பயன்கள்:
1. காற்று மூடுபனி இவற்றை கடந்து படம் எடுக்கவும் இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் தசைகளிலும் எலும்பு இணைப்புகளிலும் ஏற்படும் வலியை நீக்கவும் மூலக்கூறுகளின் வடிவமைப்பை கண்டறியவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகின்றன
2. பெயிண்ட் பூச்சுகளை குறைந்த நேரத்தில் உலர வைக்கவும் புவியிலுள்ள நீர் மூலங்களை கண்டறியவும் செயற்கை கோள்களிலிருந்து புவியின் வானிலையை படம் பிடிக்கவும் நோய்வாய்ப்பட்ட பயிர்களை கண்டறியவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகின்றன.
மைக்ரோ அலைகள்:
* மைக்ரோ அலைகளை உற்பத்தி செய்யும் மூலகங்கள் — மைக்ரோ அலை அடுப்பு மாக்னட்ரான் கிளிஸ்ட்ரான் இயங்கு அலைகுழாய்
* பயன்கள்:
1. செயற்கைக்கோள் தொலைத் தொடர்பிலும் ராடார் சாதனங்களிலும் பயன்படுகிறது
2. தானியக்கிடங்குகளில் பூச்சிகளை அழிக்கவும் உணவை பாக்டீரியங்களிலிருந்து பாதுகாக்கவும் ரேடியோ வானியல் துறையிலும் அணு மூலக்கூறுகளின் கட்டமைப்பு அறியவும் பயன்படுகிறது
ரேடியோ அலைகள்:
* பெரும அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் — ரேடியோ அலைகள் ஆகும்
* விண்மீன்களும் விண்மீன் திரள்களும் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன
* பயன்கள்:
* ரேடியோ அலைகள் — ரேடியோ தொலைக்காட்சி செய்தி தொடர்பு சாதனங்களில் பயன்படுகின்றன
X – கதிர்கள் – Click Here
Study Materials : Download
Online Test : Take Test
Current Affairs : Download
Athiyaman Team provides tnpsc science notes, rrb science pdf, tntet science notes, tn police science notes, tn si science notes, tntet paper 1 science, tntet paper 2 science, tnpsc group 4, tnpsc group 2a science, science imporatant topics, science questions and answers, science model questions, science online test for all exams..etc.
