Daily Current Affairs – April 06
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 06
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
சஞ்ஜிதா சானு – இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் (காமன்வெல்த் போட்டி)
மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.
எடைப் பிரிவு : 53 கிலோ
போட்டி : 21-வது காமன்வெல்த் விளையாட்டு
இடம் : ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகர்
தீபக் லோதர் – பளுதூக்குதலில் வெண்கலம் (இந்தியா)
போட்டி : பளுதூக்கும் போட்டி
பிரிவு : ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவு
பதக்கம் : வெண்கல பதக்கம் வென்றார்.
தேசிய செய்திகள்
இந்திய விமானப்படை
114 போர் விமானங்களை வாங்க விமானப் படை முடிவு செய்துள்ளது
ஸ்வதார் கிரஹ் திட்டம்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சொந்தமாக ஒரு வீடு என பொருள்படும் ஸ்வதார் கிரஹ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் வாழ வகை செய்யப்படுகிறது.
தங்குவதற்கு இடம், உணவு, உடை, மருத்துவ வசதி போன்றவற்றுடன் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி : மின்னணு கரன்சி வெளியிட திட்டம்
காரணம் : நோட்டு அச்சடிக்கும் செலவை குறைக்க
பிட்காயின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி, புதிதாக மின்னணு கரன்சிகளை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது.
பிட்காயின் (டிஜிட்டல் கரன்சி) பரிவர்த்தனைக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது.
பிட்காயின் சூதாட்டம் என கருதப்படுகிறது.
தமிழக செய்திகள்
அம்மா ‘வைஃபை’ மண்டலம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
தொடங்கிய இடங்கள் : தமிழகத்தில் 5 பேருந்து நிலையங்கள்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை
திருச்சி மத்திய பேருந்து நிலையங்கள்
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம்
Download Daily Current Affairs (2018-April-6)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.