நாளை காவலர் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

TNUSRB PC Exam 2019- Important instruction

நாளை காவலர் தேர்வு எழுதப் போகும் வருங்கால காவலர்கள் கவனத்திற்கு :

1.உங்கள் அனுமதிச் சீட்டினை மறக்காமல் இன்று இரவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ..

2. நீலம் மற்றும் கருப்பு முனை பந்து பேனாகளை மட்டும் உபயோக படுத்துங்கள் .. ஜெல் பேனா வேண்டாம். இரண்டு பேனாக்களை வைத்துக் கொள்ள வேண்டும்,

3.உங்களுடைய சொந்த அடையாள அட்டை எடுத்துக் கொள்ளவும்..

4. தேர்வு எழுத பரீட்சை அட்டைகள் எதுவும் தேவை இல்லை..

5. தேர்வு இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று விட்டு உங்கள் தேர்வு அறையினை பார்த்துக் கொள்ளுங்கள் .. கடைசி நேர பரபரப்பு வேண்டாம்

6.நீங்கள் படித்ததை சற்று திருப்பி பாருங்கள் … புதியதாக எதையும் படிக்க வேண்டாம் .. பின்பு குழப்பத்தில் படித்ததும் மறந்து போகும்..

7.தேர்வு அறையினுள் உங்களுடைய விடைத்தாளை கவனமாக நிரப்புங்கள் … மெதுவாக சரியாக நிரப்புங்கள் , ஒரே ஒரு விடைத்தாள் மட்டுமே உண்டு ஆகவே தவறுக்கு வாய்ப்பே கொடுக்கக் கூடாது ..

8. முதலில் கேள்வித்தாள் இருந்து கேட்கப் பட்ட வினாக்களை நன்றாக படியுங்கள் …

9. கேள்விகளை முழுவதுமாக இறுதி வரை படித்து விட்டு 4 விடையினையும் நன்றாக பார்த்து விட்டு பட்டை தீட்டுங்கள் .

10. தெரிந்த கேள்விகள் அனைத்திற்கும் முதலில் பதில் அளியுங்கள்.. தெரியாத வினாக்களை பின்பு விடை அளியுங்கள்

11. எக்காரணம் கொண்டும் தெரியாத கேள்விகளுக்கு பதட்டப்படாவோ , எல்லாம் படித்த கேள்விகள் என மந்தமாகவும் இருக்க வேண்டாம்.

12. வினாவுக்கு யேற்ற விடை தாளில் பட்டை தீட்டுங்கள்,ஒரு வினா விடை மாறினாலும் எல்லாம் தவறு ஆகி விடும் .. கவனம் நிச்சயம் ..

13. தேர்வு இடத்திற்கு சென்று விட்ட உடன் யாரிடமும் தேவை இல்லாமல் பேசாதீர்கள்… அவர்கள் உங்களை குழப்பமடைய வைக்கவோ , பயமுறுத்துவும் வாய்ப்புக்கள் அதிகம் ..

14. தேர்வு நாளைய காலை தினம் உங்கள் மனதிற்கு அமைதி குடுங்கள் … உங்களுக்கு பிடித்த செயலை செய்யுங்கள் , உங்கள் பெற்றோர் அல்லது விரும்பிய கடவுளிடம் சென்று வணங்கி வாருங்கள் .. உங்கள் மனது நல்ல எண்ணத்துடன் இறுக்கம் அடையாது இருக்கும்..

15.நம்பிக்கையோடு எழுதுங்கள் … தயவு செய்து Gr 4 தேர்வர்கள் உங்களுடைய அறிவு பலத்தை இந்த தேர்வு அறையினுள் காட்ட வேண்டாம்… உங்களுக்கு 1ம் தேதி வாய்ப்பு உள்ளது …

16. நாளை தேர்வு நன்றாக எழுத  வாழ்த்துக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us