மொரார்ஜி தேசாய் (29 பிப்ரவரி 1896 – 10 ஏப்ரல் 1995)
சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல்வாதியான மொரார்ஜி தேசாய், 1997 & 1979-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் 4-வது பிரதமராக பதவி வகித்தவர்.
சுதந்திர போராட்ட வீரரும், அரசியல்வாதியான இவர் 1977 மற்றும் 1979-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் 4-வது பிரதமராக பதவி வகித்தார். 1918-ம் ஆண்டில் அப்போதைய பம்பாய் மாகாணத்தின் வில்சன் சிவில் சர்வீஸில் பட்டம் பெற்ற பிறகு, பன்னிரண்டு ஆண்டுகள் துணை ஆட்சியராகப் பணியாற்றினார்.
1930-ம் ஆண்டில், ஆங்கிலேயரின் நிதி உணர்வில் நம்பிக்கை இழந்த திரு. தேசாய், , அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தார்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக கீழ்படியாமை இயக்கத்தில் சேர்ந்தார்.
சுதந்திரப் போராட்டத்தின் போது திரு தேசாய் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட தனிநபர் சத்தியாகிரகத்தில் தடுத்து நிறுத்தப்பபட்டு, 1941-ம் ஆண்டு அக்டோபரில் விடுவிக்கப்பட்ட அவர், 1942-ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் போது மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நாட்டின் உயரிய விருதான ” பாரத ரத்னா” விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் 99 வயதில் 1995-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி மறைந்தார்.